வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 3
கிருஷ்ணர் : நீ பேசப் பேச…., இதோ இப்பவே கிளம்பி ரிஷிகேஷ் போகலாமா என்று தோணுகிறது…. உன்னோட சிலிர்ப்பு எனக்குள் தொற்றிக் கொண்டது மேகலா…. சரி, அடுத்து எங்க போனீங்க…. ‘லக்ஷ்மண் ஜூலா’வா….. மேகலா : கிருஷ்ணா…, லக்ஷ்மண் ஜூலா…. ரொம்ப….. தூரத்தில் இருக்கு….. அதற்கு முன் ராதாகிருஷ்ணர் கோயில் வருகிறது…, அங்கு சென்றோம். ராதையும், கிருஷ்ணரும், கங்கையின் மென்மையான சலசலப்பு சப்தத்தில் புல்லாங்குழல் இசைத்து தன்னை மறந்திருந்தனர். நம்ம ஊர் பக்கமெல்லாம், கோயிலுக்குள் camera-வைப் பிடுங்கி வச்சிருவாங்க… அங்கு அப்படியில்லை கிருஷ்ணா…. Photo எடுத்துக்கோங்க என்று ‘கைடு’ சொல்கிறார்…. கிருஷ்ணருடன் தோள் மேல கைதான் போடவில்லை… எல்லோரும் வளச்சி வளச்சி photo எடுத்தோம்…. அங்கிருந்து கிளம்பி, கடைவீதிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம்… கிருஷ்ணர் : ஆமாம்…., பாதையெல்லாம் படிகளாக கொஞ்சம் குறுகலாகவும் இருக்குதே… நீ எப்படி நடந்து வந்தாய்…. இங்கு தேரோடும் வீதியில் கூட, சூப்பர் மார்க்கெட்டுக்கு ‘auto‘- ல போகும் party ஆச்சே நீ…. மேகலா : கிருஷ்ணா…., நானெல்லாம் என் வாழ்க்கையில் இமயமலையைப் பார்ப்பேனா… ரிஷிகேஷ் செல்வேனா…,