Posts

Showing posts from August, 2022

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 5

மேகலா   : நிறைய கல்யாணங்களில், சடங்குகள், சம்பிரதாயங்கள் இல்லாமல், சும்மா relaxed ஆக இருக்கும் போது,…. அதாவது, கல்யாணம் முடிந்த பிறகோ, அல்லது கல்யாணத்திற்கு மறுநாளோ…., fun games நடத்துவார்கள். இதுவும், ஏகதேசம், பாரதம் முழுக்க எல்லா States-லயும், விதவிதமாக நடத்துகிறார்கள் கிருஷ்ணா….   அதில், ஒரு கலாட்டா என்னவென்றால், North India கல்யாணங்களில், பெண் வீட்டுக்காரர்கள், மாப்பிள்ளையின் செருப்பை ஒளித்து வைத்து விடுவார்களாம். அங்கே இங்கே என்று தேடி, பல கலாட்டாக்களைக் கடந்து செருப்பு கிடைக்கும் போல….  அதிலும், ‘உங்க செருப்பைக் கொடுத்தா என்ன தருவீங்க’ என்று இடைத்தரகர் மாதிரி பேரம் பேசுவாங்க போல….. கிருஷ்ணர்  : வாரே…., வா…., அப்போ…. ‘கல்யாண வீடு என்றால், பொண்ணு மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல…, சுற்றத்தாருக்கும் கொண்டாட்டம் தான்….. மேகலா  : பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் thrilling….. பொண்ணைப் பெத்தவங்களுக்கும், பையனைப் பெத்தவங்களுக்கும், கல்யாணம் நல்லபடியா முடியணுமே என்ற பரபரப்பு…..  கொண்டாட்டமெல்லாம் friends-க்கும், உறவினர்களுக்கும் தான்…. கிருஷ்ணர்  : சரி…, உங்க பக்கத்துல, ‘நலங்கு’ என்ற கலாட்டாலாம் கிட

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 4

மேகலா   : இல்லையா பின்ன….கிருஷ்ணா…,   அவரவர் ஆசைப்படிதான் கலாட்டாக்களும் அரங்கேறுகின்றன என்றாலும்…., பணக்கார சந்தோஷம் வேற, பட்ஜெட் சந்தோஷம் வேற…. கிருஷ்ணர்  : என்ன…., பட்ஜெட் சந்தோஷமா….? மேகலா  : கிருஷ்ணா…. சந்தோஷமாய் இருக்கணுமின்னு தீர்மானம் செய்த பின், பாட்டு, கச்சேரி, dance என்று எல்லா சந்தோஷங்களையும் கல்யாண மண்டபத்திற்கே கொண்டு வந்திருவாங்க கிருஷ்ணா. அதிலும், பணக்காரங்க, பாட்டு, கச்சேரி என்றாலே, Vijay channel ‘Super Singer’-ஐ வரவழைக்கலாமா…., அல்லது famous troupe ‘லக்ஷ்மண் ஸ்ருதியை’ வரவழைக்கலாமா என்று பணக்காரத்தனமா யோசிப்பார்கள். ஆனா, கலாட்டாவும், சந்தோஷமும், எங்க ஜாலிக்காகவே படைக்கப்பட்டது என்பது போல, நம்ம பட்ஜெட் கல்யாணம், உற்றார், உறவினர் புடை சூழ, வீடே கலகலத்துப் போகுமளவுக்கு, டான்ஸாகட்டும், அந்தாக்‌ஷரி என்னும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியாகட்டும், fun games என்று குடும்பமாய் உட்கார்ந்து, ‘ரம்மி சீட்டு’ விளையாடுவதாகட்டும், பைசா செலவில்லாமல், கொண்டாடி மகிழ்ந்து போவார்கள்….. அந்தக் காலங்களில், டான்ஸ் கச்சேரிலாம் கிடையாது. கல்யாணம்னா, இரவு சீட்டுக்கச்சேரி உண்டு. பழைய ‘பேசும் தெய்

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 3

மேகலா : கிருஷ்ணா...., மாப்பிள்ளை வீட்டார்கள், கல்யாண மண்டபத்திற்கு செல்லும் போது, பலவித சீர்த்தட்டுக்களைக் கொண்டு செல்வார்கள். அதே மாதிரி, பொண்ணு, மாப்பிள்ளை வீட்டுக்கு முதன் முதலாகச் செல்லும் போது சீர்வரிசைகளைக் கொண்டு செல்வாள். இரண்டுக்கும் வேறு வேறு அர்த்தம் இருக்கு கிருஷ்ணா.... கிருஷ்ணர் : Oh! இதுக்கெல்லாம் மாப்பிள்ளை ஊர்வலம் மாதிரி உள்ளர்த்தம் இருக்கிறதா மேகலா.... மேகலா : உள்ளர்த்தம் இருக்கான்னு தெரியல கிருஷ்ணா. ஆனா...., மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வரும் சீர்த்தட்டுக்களைப் பார்த்து, பொண்ணு வீட்டார் மிரண்டு விடுதல் நடக்கும்.... நம்ம வீடுகளில், உறவுகள் வீட்டுக்குச் செல்லும் போது என்ன செய்வோம்.... அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிச் செல்வோமில்லையா.... அது மாதிரி, கல்யாணங்களில், ‘உன்னை என் பையனுக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறேன்’ என்று சொல்வதாக, பலகாரத் தட்டுக்களுடன் ஊர்வலம் வருகிறார்கள். கிருஷ்ணர் : என்ன.... இந்த பலகாரத்தட்டுக்களை ஊர்வலமாகத்தான் எடுத்து வரணுமா....? மேகலா : பின்ன.... அப்பத்தானே.... ‘அடேயப்பா, மாப்பிள்ளை வீட்டுக்காரர்களின் சீர்வரிசையைப் பாருங்

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 2

மேகலா  : கிருஷ்ணா…., நம்ம பாரத தேசத்தில், தேசத்தால் ஒன்றுபட்டிருந்தாலும், மொழியால், திசையால், இனங்களால் மக்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து இருக்கின்றனர்.   ஒவ்வொரு இனத்திலும், கலாச்சார ரீதியாக திருமணங்கள் ஏகதேசம் ஒரே மாதிரி நடந்தாலும், வசதி வாய்ப்புக்களாலும், மனவிருப்பத்திற்கேற்றபடியும், கல்யாணங்கள் பிரம்மாண்டமாகவும், எளிமையாகவும், சுருக்கமாகவும், விரிவாகவும் நடந்து விடுகின்றன.  இந்த ‘மாப்பிள்ளை அழைப்பை’ எடுத்துக்கோயேன். எங்க ஊரில், அந்தக் காலங்களில், ‘மாப்பிள்ளை அழைப்பு’ என்பது, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில்தான் நடக்கும். இதற்கு, ‘பட்டினப் பிரவேசம்’ என்று பெயர். திருமணம் முடிந்ததும், பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து பட்டினப் பிரவேசம் செல்வார்கள். அசடு வழிந்து கொண்டு மாப்பிள்ளையும், குனிந்த தலை நிமிராமல் பொண்ணும், கல்யாணத்துக்கு வந்த குஞ்சும் குளுமானுமாக பத்துப் பன்னிரெண்டு சின்னப் பிள்ளைகள் –   அதிலும் குறிப்பாக, ‘பொண்ணோட தம்பி’, உரிமையாக மாப்பிள்ளை மடியில் உட்கார்ந்து வருவான்.  இதே மாப்பிள்ளை அழைப்பு, பிறகு திறந்த காரில் நடக்க ஆரம்பித்தது. வண்டிதான் மாறியது…., ஆனால், காட்சி என்னவோ….