Posts

Showing posts from September, 2022

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 10

மேகலா   : நகர்ப்புறங்களில் பட்ஜெட் கல்யாணம் நடத்துபவர்கள், கல்யாணத்தை கோயிலில் வைத்தோ, அல்லது hotel reception-ல் வைத்தோ நடத்துகிறார்கள் அல்லவா…. கல்யாணத்துக்கு வந்தவர்களை, hotel-லிலேயே சாப்பிடச் சொல்லி, ‘டோக்கன்’ கொடுத்து விடுகிறார்கள் கிருஷ்ணா… இது, இவ்வளவு செலவு ஆகும்னா…., அவ்வளவுதான் ஆகும்…. ஒரு இலைக்கு இவ்வளவு என்ற கணக்கு correct ஆக இருக்கும். ‘Waste’-ம் ரொம்ப இருக்காது….. கிருஷ்ணர்  : Oh! இப்படியும் கல்யாணம் பண்ணுவார்களா…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா….. நகர்ப்புறங்களில், கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகையே லட்சக்கணக்கில் செலவாகும் போது, கோயிலில் கல்யாணம், அருகில் இருக்கும் ஹோட்டலில் சாப்பாடு என்பது, easy-யாகவும் இருக்கும்…., பட்ஜெட்டுக்குள்ளும் அடங்கும்….. நாங்கள் ஒரு முறை சென்னைக்கு கல்யாணத்திற்குப் போயிருந்த போது, அன்றைக்கு, கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்றிருந்தோம். எல்லாக் கோயில்களிலும், கல்யாணம் முடிந்து, மாலையும் கழுத்துமாக மணமக்களும் வந்திருந்தனர். கபாலீஸ்வரர் கோயிலில், எங்களுக்குப் பக்கத்திலேயே ஒரு ஜோடிக்கு கல்யாணமும் நடந்தது. அர்ச்சகர

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 9

கிருஷ்ணர்   :   விருந்தின் மூலமாக, தன் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், பெருமையை வெளிப்படுத்துவதே பெருசா இருக்குமோ…. மேகலா  : பொதுவாக…., ஒரு தோசைக்கு இரண்டு சட்னி வச்சாலே…., நம்மால் தொட்டுச் சாப்பிட முடியாது என்றிருக்க…., காலை breakfast விருந்துக்கு, பலகாரமே, இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல், வடை, பூரி என்று மத்தியானம் மூன்று மணி வரைக்கும் பசிக்கக் கூடாது என்பது போல, இலை நிறைய படையலாகப் படைத்து விடுவார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! அப்ப காலையில் sweet கிடையாது, அப்படித்தானே…. மேகலா  : என்ன கிருஷ்ணா…., பச்சப்புள்ள மாதிரி பேசுற….  ஒருத்தர் அவங்க வீட்டுக் கல்யாணத்தில் கேசரி போட்டா…. இன்னொருத்தர் fruit கேசரி என்று போட்டு ‘கெத்து’ காட்டுவாங்க கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இந்த, ‘சர்க்கரைப் பொங்கல்’, ‘கல்கண்டு சாதம்’….. மேகலா  : அதெல்லாம் ரொம்ப rare கிருஷ்ணா…. இப்போ…., ஒரு புது trend ஒண்ணு ஓடுது கிருஷ்ணா…. ‘செட்டிநாடு சமையல்’ என்று ஆரம்பித்து, பணியாரம், ஆப்பம், தேங்காய்ப்பால் என்று chef-களின் வேலையை கடுமையாக்கிருவாங்க கிருஷ்ணா… கிருஷ்ணர்  : அப்போ….,  இவங்க கல்யாணத்துக்கு வந்திருக்கவங்களு

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 8

மேகலா  : இன்னும் சில கல்யாணங்களில், புதுசா ஏதோ செய்யிறோம் என்று நினைத்து, மேடையின் மற்றொரு புறம், கேரளாவின் செண்டை மேளத்தை முழக்க விட்டு, கல்யாண வீட்டு கலகலப்பையே அடக்கி, செண்டை மேளம் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்….. கிருஷ்ணர்  : ஓ! அப்போ…., அங்கு நாதஸ்வரம் இருக்காதோ….. மேகலா  : அதுவும் இருக்கும் கிருஷ்ணா…. அது ஒரு புறம்…., இது இன்னொரு புறம்….  கேரள வாத்தியங்கள் இல்லையென்றால், ‘பேண்ட் வாத்தியம்’ என்று சொல்வார்களே….., அதை arrange பண்ணி, கல்யாண வீட்டின் சப்தத்தை ஊர் முழுக்க கேட்கச் செய்து விடுவார்கள் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : இது என்னவோ…., ‘இந்த இசை எனக்குப் பிடிக்கும்….. அதனால், கல்யாணத்திற்கு இந்த வாத்தியம் தான் arrange பண்ணியிருக்கிறேன்’ என்பது மாதிரி தெரியல….. மேகலா  : ஆம்…மாம்…., அப்படித்தான். எங்க வீட்டுக் கல்யாணத்தைப் பார்த்து, ஊர் முழுக்க வியந்து பாராட்டணும் என்று நினைப்பவர்கள் தான், ‘செண்டை மேளம்’, ‘பேண்ட் வாத்தியம்’ என்று arrange பண்ணுவார்கள் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  :  இதெல்லாம், பணம் செய்யும் கலாட்டா மேகலா……  கல்யாணச் சம்பிரதாயங்களில் கலாட்டாவாகக் கொண்டாடும் மக்கள், விருந்து பரிமா

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 7

மேகலா  : கல்யாணத்துக்கென்று சில சடங்குகள் இருக்குல; அதை ஐயர் வைத்துத்தான் செய்வார்கள். இது normal கல்யாணம்….   அதில், அக்னி வளர்ப்பது…, அக்னியை வலம் வருவது….., கன்னிகாதானம் பண்ணுவது…., அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது….., மந்திரம் ஓதுவது…., அட்சதை போடுவது என்று எல்லாச் சடங்குகளும் முறையாக நடக்கும்.  இதனுடன், மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் போது நடக்கும் கலாட்டாக்கள் என்று ஆங்காங்கே நகைச்சுவை கலாட்டாக்கள் உண்டு….. சிலர், ‘கல்யாணத்தில், எந்தச் சடங்குகளும் எங்களுக்குத் தேவையில்லை; கல்யாணத்தை நடத்திக் கொடுப்பதற்கு ஒரு பெரியவர்….,   அவர் ‘கருப்புச் சட்டைக்காரராக’ இருந்தால் கூடப் பரவாயில்லை; கட்டுவதற்கு தாலி மட்டும் இருந்தால் போதும்’   என்று நினைத்து விடுவார்கள் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : இது என்ன புது கலாட்டாவா இருக்கு மேகலா…. மேகலா  : வைதிகச் சடங்குகளை, ‘மூட நம்பிக்கை’ என்று நம்பும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கு கிருஷ்ணா…. எல்லாச் சடங்குகளும், சடங்கு அல்லாத வழிமுறைகளும்….,  ஏன், மூட நம்பிக்கை கூட, மனிதர்களின் நம்பிக்கையினாலும், விருப்பத்தினால் மட்டுமே நடைபெறுகின்றன.  இதில், வைதிகச் ச

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 6

மேகலா  : கிருஷ்ணா…., முதலில் எங்க பக்கத்துல நடக்கக்கூடிய சின்னச் சின்ன, பரம்பரையாய் வரும் ஒரு சில சடங்குகளைச் சொல்லட்டுமா…. பொண்ணை, முதன் முதலில் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரும் போது…., ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.   அதிலும், அந்த வீட்டில் பிறந்த அத்தையோட மகள்தான் ஆரத்தி எடுப்பாள்…. கிருஷ்ணர்  : அப்போ ஏதாவது demand பண்ணுவார்களா….. மேகலா  : பண்ணாமலா கிருஷ்ணா….. அதிலும், மணமகன், ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு முறைப்பையன் என்பதால், கேலியும் கலாட்டாவும் தாராளமாகவே இருக்கும் கிருஷ்ணா….. ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில் கூட, இது மாதிரி ஒரு காட்சி வரும் கிருஷ்ணா. அதில், ஒரு பாட்டி, பாட்டுப் பாடி ஆரத்தி எடுத்து, சிவாஜி கணேசனிடம் கணுசமாய் கறந்து விடும்…. ஆனால், எங்க பக்கத்துலயெல்லாம், ‘fixed gift’ அல்லது எல்லோருக்கும் சமமாக பணம் என்ற அளவில் இருக்கும். அடுத்து, பொண்ணு வீட்டுக்குள் நுழைந்ததும், மாமியார், மருமகளை அழைத்துக் கொண்டு,  அடுப்பங்கரையில் store cabinet-ஐத் திறந்து, உப்பு ஜாடியில் கை விடச் சொல்லுவார்கள்…. அடுத்து, மிளகாய் ஜாடியையும் தொடச் சொல்லுவார்கள்….. கிருஷ்ணர்  : இது என்ன நம்பிக்கை….. மே