Posts

Showing posts from January, 2020

பாலம் - பகுதி 4 (நிறைவு)

மேகலா : சீன அதிபர் மகாபலிபுரம் வந்திருந்த நேரத்தில், அவரை உபசரிக்கும் போது, பாரதப் பிரதமர், நமது தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்திருந்தார் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். மறுநாள் அதிகாலையில், கடற்கரையோரம், walking செல்கிறார். Beach-ல் கிடந்த waste plastic bottle, குப்பைகள், தின்று போட்ட paper என்று பொறுக்கிக் கொண்டே போனவர், அதை ஒரு bag-ல் collect பண்ணி, குப்பைக்கூடையில் சேர்க்கிறார். உடனே social media-க்களில், ‘camera முன்பு நடிக்கிறார்’ என்று போடுகிறார்கள். கிருஷ்ணர் : சொல்லட்டும்.... நடிச்சாக்கூட, நல்லது நடக்குதே.... வெறும் வாய்வார்த்தையாய் மட்டும் பேசல இல்ல... பொதுவா, வீடுகளில் குப்பையைப் பார்த்த உடனே பொறுக்கும் பழக்கமுடையவர்கள், நடந்து போகும் பாதையில் வேண்டாத பொருள் கிடந்தால், அதைப் பொறுக்கத்தான் செய்வார்கள். இவரைப் பார்த்து 10 பேர் குப்பைகளைப் பொறுக்கட்டும். சினிமாக்காரங்க கையில் ‘விளக்குமாறு’ கொடுத்து ‘தூய்மை இந்தியா’ என்று பெருக்கச் சொன்னார் இல்லையா; announce பண்ணிச் செய்தால், ‘தூய்மை திட்டம்’, அவராகச் செய்தால், ‘drama'-வாமா....? சரி, பாலத்தைத் தொடர்ந்து

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 67

துரோணர் பூட்டிய கவசம் மேகலா : யுத்தக் காட்சிகளை திருதராஷ்டிரனுக்கு, சஞ்சயன் வர்ணித்துக் கொண்டிருந்தான். திருதராஷ்டிரன், அபிமன்யு கொல்லப்பட்ட விதம் குறித்து, மனம் குமுறினான். ’நம் தரப்பு வீரர்கள், அபிமன்யுவை அநியாயமாகக் கொன்றதன் காரணமாக, அர்ஜுனன் எமனைப் போல கோபம் கொண்டுள்ளானே. துரியோதனன் என்னுடைய அறிவுரைகளைக் கேட்டிருந்தால், இந்த நிலமை ஏற்பட்டிருக்காதே’ என்று புலம்பினான். அதைக் கேட்ட சஞ்சயன், ‘சூதாட்டம் நடக்காமல் நீங்கள் தடுத்திருந்தால், அல்லது துரியோதனனை நீங்கள் சிறையில் அடைத்திருந்தால், இன்று உம்முடைய மக்களுக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்காது’ என்று திருதராஷ்டிரனிடம் பதில் கூறி விட்டு, மேலும் யுத்தக் காட்சிகளை வர்ணிக்க ஆரம்பித்தான். ஜயத்ரதனும், கர்ணனும், சல்லியனும், கிருபரும், அஸ்வத்தாமாவும் குதிரைகளோடு துரோணரிடமிருந்து வெகுதூரம் விலகி இருந்தார்கள். துரோணர், தான் வகுத்த வியூகம் பிளவு படாமல் இருக்க, அதைப் பாதுகாக்கத் தொடங்கினார்.. அதே சமயம், அபிமன்யுவின் வதத்தினால் பெரும் கோபமுற்ற அர்ஜுனன், ருத்ரன் போலவும், எமன் போலவும், யுக முடிவை ஏற்படுத்த வந்து விட்ட நெருப்பு போலவும் ஜொலி

பாலம் - பகுதி 3

மேகலா : கணவன் - மனைவியிடையே வரும் பிணக்கைச் சரி செய்ய, இருவர் நலத்திலும் அக்கறை கொண்ட பொதுவான நபர்தான், பாலமாகச் செயல்பட்டு அந்தக் காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று நீ சொல்லியிருந்தாய், கிருஷ்ணா! இந்த மாதிரி விவகாரத்தில் தலையிடுபவர்கள், ‘நாட்டாமை’ மாதிரி தன்னை நெனச்சிக்கிட்டு, காரியத்தையே கெடுத்து விடுபவர்கள் தான் நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்று, இந்த மாதிரி விஷயத்திற்கு, மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்கள் செய்த தவறை உணர வைக்கும் counseling செய்வதற்கான ‘மன நல டாக்டர்கள்’ நிறைய பேர் இருக்கிறார்கள், கிருஷ்ணா! எனக்கென்னவோ, யாராக இருந்தாலும், பிரச்னையில் சிக்கிக் கொண்டவர்களை, அவரவர் பிரச்னையை, அவரவர்களை உணரச் செய்வதே, பாலமாய்ச் செயல்படுபவர்களின் பெரும் பங்கு என்று நான் நினைக்கிறேன். கிருஷ்ணர் : அதிலும், குறிப்பாக, தப்புச் செய்தது பெண்பிள்ளையாக இருந்தாலும், இதமாகப் பேசி, பெண்மையைப் பெருமைப்படுத்திப் பேச வேண்டும். அது மட்டுமல்ல, உரிமைப்பட்டவர்களாய் இருக்கும் பட்சத்தில், அதாவது, அம்மா, அப்பா, friend யாராக இருந்தாலும், எல்லை வரை சென்று, கொஞ்சம் படிந்து பேசி, பாதிக்கப்பட்டவர்கள் ம

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 66

மேகலா : ’அர்ஜுனனால் தாண்ட முடியாத வியூகத்தை வகுத்து, உன்னை நான் காப்பாற்றுகிறேன்’ என்று துரோணர் கூறியதைக் கேட்ட பிறகு ஜயத்ரதனுக்கு அச்சம் நீங்கியது என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். துரோணர் கூறியது, ஒற்றர்களின் மூலமாக, பாண்டவர்களை எட்டியது. இதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணர் கவலையுற்று, அர்ஜுனனிடம், ‘யாரையும் கலந்தாலோசிக்காமல், ஜயத்ரதனை நாளைய தினத்திற்குள் கொல்வதாக நீ சபதம் செய்து விட்டாய். நீ அவசரப்பட்டு விட்டாயோ என்று நினைக்கிறேன். சபதம் நிறைவேறாமல் போனால், உலகம் உன்னைப் பரிகசிக்கும். அதைத் தவிர்க்க வேண்டும். ஜயத்ரதன் யுத்தகளத்தை விட்டு விலகலாமா என்று யோசிக்கிறான். துரோணர், அவனைக் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். அஸ்வத்தாமா, கர்ணன் முதலிய ஆறு வீரர்கள் ஜயத்ரதனைக் காப்பதில் ஈடுபடப் போகிறார்கள். உன்னால் தாண்ட முடியாத வியூகத்தை துரோணர் வகுக்கப் போகிறார். அவர்களை மீறி, ஜயத்ரதனைக் கொல்வது எப்படி?’ கிருஷ்ணர் கூறியதைக் கேட்ட அர்ஜுனன், ‘நாளை காலை, காண்டீபத்தை ஏந்தி யுத்தம் செய்யப் போகிறேன். எனக்குத் தேரோட்டியாக நீங்கள் இருக்கும் பொழுது, நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் யார்

பாலம் - பகுதி 2

மேகலா : சென்ற வாரப் பகுதியின் முடிவில், ‘உறவுப் பாலங்களை’ப் பற்றிக் கூறுவதாகக் கூறியிருந்தேனல்லவா...? உறவுப் பாலங்கள் என்பது, இரு பக்கத்தாருக்கும் பொதுவாக இருப்பவர்கள்தான் கிருஷ்ணா, பாலமாகச் செயல்படுகிறார்கள். உனக்குத் தெரியுமா கிருஷ்ணா, வேறு வேறு வீடுகளில் பிறந்து, வேறு வேறு சூழ்நிலையில் வளர்ந்து, கணவன் மனைவியானவர்களின் பாலமாக இருப்பவர்கள் யார் தெரியுமா....? கிருஷ்ணர் : நீதான் சொல்லேன்... மேகலா : அப்பப்ப நடக்கும் சிறு சிறு சண்டைகள், அல்லது வெடித்து விடும் கருத்து மோதல்கள் எல்லாம் காணாமல் போவதற்குக் கூட, இந்தப் பாலங்கள் தான், அதாவது குழந்தைகள் தான் முதல் காரணமாகிறது. கிருஷ்ணர் : பரவாயில்லையே.... interesting ஆக இருக்கிறதே....! இந்த உறவுப் பாலங்களை இன்னும் விளக்கிச் சொல்லேன்.... மேகலா : கணவனுக்கும் மனைவிக்குமிடையே சரியான புரிதல் வரும் வரைக்கும்; விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் வரும் வரையிலும், அவர்களுக்குள்ளே நடக்கும் சண்டைகள் கூட, குழந்தையை முன்னிறுத்தியே மறைந்து போகிறதென்று நான் நம்புகிறேன். ‘ பாப்பா, பசிக்கு அழுது, உங்கள அப்புறம் பேசிக்கிறேன்’ என்று தள்ளிப் போடப்படும்

Snippets of Life |Bringing Up a Child | episode-8

Image

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 65

மேகலா : பதின்மூன்றாம் நாள் யுத்தம் முடிந்து, அர்ஜுனன் பாசறைக்குத் திரும்பி வந்து, தனது மகன் அபிமன்யு போரில் இறந்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்டான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். தருமனைப் பார்த்து, ‘நீங்களும், பீமனும், சாத்யகியும் இருக்கும் பொழுது, கௌரவர்கள், அபிமன்யுவை எப்படிக் கொன்றார்கள்? அவர்கள் அபிமன்யுவைக் கொல்லும் பொழுது, நீங்கள் எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்? அவன் இறந்து விட்டான் என்பதை உணர்ந்தும், என் மனம் வெடிக்காமல் இருக்கிறது. என் மனைவி சுபத்திரைக்கு நான் என்ன சமாதானம் சொல்லுவேன்? அபிமன்யுவின் மனைவிக்கு என்ன ஆறுதல் கூறுவேன்?’ என்று அர்ஜுனன் அழுது கொண்டே பேசினான். பாண்டவர்கள் யாரும் பதில் சொல்லாத நிலையில், அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணர் சொன்னார், ‘யுத்தத்தில் பின்வாங்காத வீரன் எவனுக்குமே வாழ்வின் முடிவுக்கு இதுதான் வழி. பராக்கிரமசாலிகளுக்கு மரணம் யுத்த களத்தில் தான். வீரர்கள் விரும்பும் மரணம் இது தான். அப்படிப்பட்ட மரணத்தை அபிமன்யு தழுவியிருக்கிறான். இதில் நீ வருந்தக்கூடாது. இப்படியே துன்பத்திலேயே புலம்பிக் கொண்டிருந்தால், உன்னுடைய சகோதரர்கள், உனக

பாலம் - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா..... உன்னை ஆளையே காணோம்..... ஏதோ.... தொடர்ச்சியாக 2 articles எழுதி விட்டாளே; ஒரு 2 நாள் rest  எடுக்கட்டும்.... Bangalore-ல் வைத்து ஏதாவது ஒரு ‘topic' ஆரம்பிக்கலாம் என்று நெனச்சா.., உன்னை ஆளையே காணோமே.... என்ன சோம்பேறித்தனமா.... இல்ல.... பேசுவதற்குக் கூட ‘tired'-ஆ இருக்கியா....? இல்லையே.... தப்பா இருக்குதே...! நம்ம ஆளு.... ‘mike-ஐ’ முழுங்கியது மாதிரி பேசிக்கிட்டே இருக்குமே..... அப்ப.... இது நிச்சயமா சோம்பேறித்தனம் தான்..... மேகலா : கிருஷ்ணா! நீ இத்தனை நேரமும் என்னைப் பற்றித்தான் பேசுனயா....? கிருஷ்ணா, இந்த முறை Bangalore-க்குச் செல்வதற்கு முன்னால், தடுப்பூசி போட்டுச் சென்றேனல்லவா.... அதனால், ரொம்ப தைரியமாக இருந்தேன். ஆனால், நடந்தது என்ன தெரியுமா, கிருஷ்ணா...? கிருஷ்ணர் : என்ன..., காய்ச்சலா....? மேகலா : காய்ச்சல் மட்டும் தான் வரவில்லை; தும்மல், சளி என்று ரொம்பவே அவஸ்தைப்பட்டேன். 2 நாட்களாக மாத்திரை போட்டுத்தான் தும்மலை அடக்கினேன். அதில் நல்லா தூங்கினேன். அடுத்து வந்த நாட்களிலும், நான் diary-யைத் தூக்காமல் இருந்ததற்கு, சளி பிடித்ததுதான் காரணம்..

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 64

மேகலா : குருக்ஷேத்திரத்தில் பதிமூன்றாம் நாள் யுத்தம் தொடங்கியது என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். எஞ்சியிருந்த ஸம்சப்தர்கள், முன்பு போலவே அர்ஜுனனை மீண்டும் போருக்கு அழைத்து, அவனை வெகு தூரம் அழைத்துச் சென்றார்கள். துரோணரும், எவராலும் உடைக்க முடியாத பத்ம வியூகத்தை அமைத்தார். நடுவில் துரியோதனனையும், அவனைச் சுற்றி பல அரசர்களையும், வீரர்களையும் நிறுத்தி, முன்னிலையில் துரோணரையும் கொண்ட அந்த வியூகம் தாமரைப்பூ வடிவம் கொண்டது. இந்தப் பத்ம வியூகத்தை உடைக்க, அர்ஜுனன் தவிர்த்து, பாண்டவர்களும், வீரர்களும் முயற்சி செய்ய, துரோணர் மலை போல் நின்று அவர்களைத் தடுத்தார். பத்ம வியூகத்தை உடைத்து எப்படி உள்ளே நுழைவது என்பதை அறியாத தருமபுத்திரன், தவித்துப் போனான். இறுதியில், இந்தப் பொறுப்பை ஏற்கக் கூடியவன், அர்ஜுனன் மகன் அபிமன்யு மட்டுமே என்று தீர்மானித்தார். அபிமன்யு, சிறு வயதிலேயே பெரும் வீரன் என்ற புகழைப் பெற்றவன். அவனைப் பார்த்து, ‘அர்ஜுனன் இல்லாத இந்த நேரத்தில் நீ இப்போது இந்த பத்ம வியூகத்தை உடைக்க வேண்டும். உன்னுடைய மாமன்மார்களும், பெரியப்பா, சிற்றப்பா ஆகியோரும் உன் பின்னால் இருக்கிறோம்

மனிதர்கள் பலவிதம் - பகுதி 4 (நிறைவு)

மேகலா : Judge, சிதம்பரம் case விஷயத்தில், ‘அவர் தான் எல்லா case-களிலும் kingpin ஆக இருந்திருக்கிறார்’ என்று சொன்னதும், நாட்டின் உயர் பதவியை வகித்தவர், சட்டம் தெரிந்தவர், தப்புச் செய்யாதவர் என்றால், என்ன செய்திருக்கணும்....? மறுப்பு ஒண்ணும் சொல்லாமல், ஓடி ஒளியாமல், C.B.I officers-உடன் சென்றிருக்கணும்...., but ஆள் absconded, கிருஷ்ணா....! கிருஷ்ணர் : ஐயய்யோ..., சட்டச் சிக்கலாகி விடுமே.... மேகலா : கிட்டத்தட்ட 24 மணி நேரம் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. Phone switched off....! C.B.I officers, இரண்டு, மூன்று தடவை அவரோட வீட்டுக்குச் சென்று திரும்புகிறார்கள். கிருஷ்ணர் : இந்த நடவடிக்கையே, அவர் குற்றமுள்ளவர் என்று சொல்லிருமே.... மேகலா : நாட்டில் ஒவ்வொரு குடிமகனும், இதைப் பற்றி விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால், அவருடைய குற்றப் பின்னணிகளை, number போட்டு விலாவாரியாக social media-க்களில் list போட ஆரம்பித்து விட்டார்கள். பத்திரிகை, media எல்லோரும் ’ப. சிதம்பரம் தலைமறைவு’ என்று open statement கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நாட்டிலும், பெருசா போராட்டம், எதிர்ப்பு என்று