Posts

Showing posts from February, 2024

Maturity - பாகம் 7

கிருஷ்ணர்   : ‘வெற்றிப் படிக்கட்டு’ என்ற தலைப்பில், வசந்த்குமார் அண்ணாச்சி என்ன சொல்கிறார்.   தோல்விகள் எப்படி நம்மை வெற்றியை நோக்கிச் செல்லும் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறதோ…, அதே மாதிரி, அடுத்தவர்களின் கேலியும் கிண்டலும் கூட, நமக்கு சிறந்த பாடம் தான்.  பிறத்தியாரின் பொறாமை நமக்கு motivation மட்டுமல்ல…, நம்முடைய அறிவைத் தெளிவாக்கி, நம்மை பக்குவமடையச் செய்யும் மிகச் சிறந்த ‘கிரியாஊக்கி’…. மகாபாரதத்தில் நீ பார்த்திருக்கலாம்… குருக்ஷேத்திரப் போரில், துரியோதனன், பீமனை, ‘பீமா, அடுப்படியில் இருக்க வேண்டிய நீ இங்கு எதற்கு வந்திருக்கிறாய்… இது போர்க்களம்…. சாப்பாட்டு ராமனாகிய உனக்கு இங்கு என்ன வேலை’…. என்று கேலி பேசுவான்… இறுதியில், பீமனால்தான் துரியோதனன் வதம் செய்யப்படுவான்…   கேலி பேசுபவர்களினால், நம்முடைய தெளிவு என்றும் தடை படாது… தடை படக் கூடாது…. மேகலா  : Yes, boss….! இப்படி கேலிகளாலும், அவமானங்களாலும் பாதிக்கப்பட்ட திறமைசாலிகள், தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு பக்குவம் அடைகிறார்கள்…, இல்லையா கிருஷ்ணா…. அவர்களுக்கு, நம்மைச் சுற்றியிருப்பவர்களை விட…, நாமதான் ‘திறமைசாலி’ என்ற கர்வம் வந்து

Maturity - பாகம் 6

மேகலா   : அப்போ…, maturity வருவதற்கு, காரண காரியங்களை அலசி ஆராய வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்…. அப்படித்தானே கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Of course, yes…. நாட்டு நடப்போ…, அரசியல் மாற்றங்களோ…, தீவிரவாதத் தாக்குதலோ…, எதுவாக இருந்தாலும்…, கண்மூடித்தனமாக, இன்னார்தான் செய்திருப்பார்கள் என்று கொஞ்சமும் யோசிக்காமல் பேசுவதால், பிரச்னையின் வீரியம் பெரிதாகுமே தவிர, செயலின் விளைவு நன்மையில் முடியப் போவதில்லை… அதே சமயம், இந்த விஷயங்களில் சம்பந்தப்படாத சாதாரண மக்கள் கூட, மிகப் பெரிய செயல்களின் விளைவுகளை, உண்மையை ஆராய்ந்து தெளிவு கொண்டால்…, at least குழப்பங்களாவது குறையும் அல்லவா…. மேகலா  : So…, பொது விஷயங்களில், நாம maturity-யாக இருப்பது நாட்டுக்கு நல்லது…, அப்படித்தானே கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : பரவாயில்லையே…, நச்சுனு சொல்லிட்டயே… உனக்கே தெரியும்…,  நாட்டுப் பிரச்னையோ…, வீட்டுப் பிரச்னையோ…, தெளிவாக சிந்திக்கக் கூடியவர்களால் மட்டுமே, சுமுகமாக முடிவு எடுக்க முடியும்…  தெளிவான சிந்தனையும்…, நிதானமான நடவடிக்கையும் இல்லாதவர்கள் கையில் பூமாலை இருந்தால் என்ன கதியாகும்… கொஞ்சம் யோசிச்சுப் பார்…. மேகலா  : ஒரு பா

Maturity - பாகம் 5

மேகலா   : ராமாயணத்தில், ராமரும் சீதையும், லக்ஷ்மணன் உடன் வர, வனவாசம் அனுப்பப்பட்டனர். நாட்டை இழந்து, அரசுரிமை இழந்து, தாய் தந்தையரை விட்டு விலகி, காட்டு விலங்குகள் நிறைந்திருக்கும் வனத்திற்கு ராமர் வந்திருக்கும் சூழலில், அங்கு ராக்ஷசர்களின் தொல்லை தாங்க முடியாத முனிவர்கள், ராமரிடம் அடைக்கலம் ஆனார்கள். அந்த சூழலிலும், முனிவர்களைக் காக்கும் பொறுப்பை ஏற்ற ராமர், ஜனஸ்தானத்தில், முனிவர்களைத் துன்புறுத்திய கரனையும், தூஷணனையும் வதம் செய்தார். இதைக் கண்ட முனிவர்கள், ‘நல்லது நடந்தது, நல்லது நடந்தது’ என்று வாழ்த்தி, ‘ராக்ஷசர்களின் தலைவனான ராவணன் அழிந்தான்’ என்று, சீதை கடத்தப்படாத நிலையிலும் நிம்மதி அடைந்தனர். இந்தக் காட்சியில், ராமர் வனவாசம் வந்ததன் காரணம் எதுவாக இருந்தாலும், அதன் முடிவு, உலக நன்மையைத் தரும் என்ற நிம்மதி, முனிவர்களின் நிம்மதிக்கு காரணமாகியது அல்லவா…. சக்கரவர்த்தித் திருமகன், மரவுரி அணிந்து , காட்டுக்கு, ஒரு துறவி போல வந்ததற்காக கவலைப்பட்டு அழுது புலம்பியிருந்தால்…, அவர்கள் எப்படி மகான்களாக, முக்காலம் உணர்ந்தவர்களாக இருக்க முடியும்…   எப்படி ஒரு செயல் நடப்பதற்கு பொறுமை மிக அவசியம

Maturity - பாகம் 4

மேகலா   : சமையலில், என் அனுபவம் எனக்கு,   கண் பார்க்க, மனசு கற்றுக் கொண்டது.  தினசரி பயிற்சியினால், முதல் தடவை செய்து காட்டும் பொழுதும் தவறில்லாமல் செய்ய முடிந்தது கிருஷ்ணா…. இந்த அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுதுதான்,   நம் அனுபவம், பக்குவம், நம்முடைய தன்னம்பிக்கை, தினசரி பயிற்சி…, நாம் இதுவரை செய்யாத ஒரு செய்முறையைக் கூட, தவறில்லாமல் நம்மை செய்ய வைக்கிறது என்ற சூட்சுமம் புரிகிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : உனக்கு சமையலில் வந்திருக்கும் இந்த பக்குவத்தை, உன் அனுபவம் கொடுத்திருக்கிறது. தினசரிப் பயிற்சி, புரிந்து கொள்ளும் திறமையைக் கொடுத்திருக்கிறது. அதனால் தான், instant ஆக ஒரு dish-ஐ செய்து காட்ட முடிகிறது… மேகலா  : நீ சொன்னாயே கிருஷ்ணா…, maturity உள்ளவர்கள், தெரியாததைத் தெரியாது என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் கொள்ள மாட்டார்கள் என்று. நாங்க, புதுசா ஒரு dish செய்து காட்டும் போது…,  ’எங்களுக்கும் இது புதுசுதான்…, நேற்றுதான் road side-ல் நின்று வேடிக்கை பார்த்து செய்து பழகினோம்’ என்று சொல்லித்தான் செய்யவே ஆரம்பிப்போம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : உனக்கு ஒண்ணு தெரியுமா…. சில விஷயங்களில

Maturity - பாகம் 3

கிருஷ்ணர்   : ஒரு செயலைச் செய்யச் சொல்லி, அனுபவமோ, நிதானமோ இல்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது…, அந்தச் செயல், பக்குவம் இல்லாதவர்களால் திருப்தியாய் செய்ய முடியாது என்பது மட்டுமில்லை…., உருப்படியாகவும் செய்ய முடியாது என்பதனால்தான், இந்த பழமொழியே சொல்லப்பட்டிருக்கு…. இதற்கு ஏதாவது உதாரணம் சொல்லேன் மேகலா… மேகலா  : பக்குவம் இல்லாதவர்களால், எந்த ஒரு காரியத்தையும் உருப்படியாகச் செய்ய முடியாது – என்று நீ சொன்னாயே கிருஷ்ணா…, அது எவ்வளவு உண்மை கிருஷ்ணா…. நாம இப்போ சமீபத்தில் வாசித்த ஸகர மன்னன் புதல்வர்களின் கதை இதற்குப் பொருத்தமாக இருக்கும் கிருஷ்ணா…. ஸகர மன்னனின் யாகக் குதிரையை, தேவேந்திரன் திருடிச் சென்று விட்டான். யாகக் குதிரை இருந்தால் மட்டுமே, யாகத்தை தொடர்ந்து நடத்த முடியும். ஸகர மன்னனே குதிரையைத் தேடிச் சென்றிருக்கலாம்… அல்லது, நற்குணங்கள் நிறைந்த, எல்லோரையும் மதிக்கத் தெரிந்த பேரன் அம்சுமானை அனுப்பியிருக்கலாம். எந்த சேதாரமும் இல்லாமல் யாகக் குதிரை மீட்கப்பட்டிருக்கும். ஸகர மன்னனின் 60,000 புதல்வர்களும் யாகக் குதிரையைத் தேடி, பூமியெங்கும் சுற்றி வந்தார்கள். எங்கேயும் குதிரை காணவில