Posts

Showing posts from April, 2022

அழகு - பகுதி 17

கிருஷ்ணர்   : நீ sea plane-ல் போயிருக்கிறாயா மேகலா….? மேகலா  : பார்த்து ரசிச்சிருக்கேன் கிருஷ்ணா. கார்த்தி, ஆதியெல்லாம் கூட்டிக் கொண்டு ‘மால்தீவ்ஸ்’ போயிருந்தோமில்ல கிருஷ்ணா. அப்போ நாங்க resorts-க்குப் போயிருந்தோமில்ல…. அப்போ, resorts-க்கு tourists-களைச் சுமந்து கொண்டு sea plane வரும். அதைப் பார்ப்பதற்காக, என்னைப் போல சிலரும் கரையோரம் நின்றிருந்தோம். தன் சிறகை விரித்து பறந்து வந்த விமானம், தாழ்ந்து பறந்து, கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி சரேலென தண்ணீரில் சீறிப் பாய்ந்து கொண்டு ஓடி வந்து கடலில் மிதக்கிறது. அப்பொழுது boat-க்கு நங்கூரம் போடுவது போல, விமானத்தை நிறுத்துவதற்கு, ஒரு பெரிய கயிற்றால், அருகிலிருக்கும் நடைபாதையில் உள்ள தூணில் கட்டி நிறுத்திய பிறகு, பயணிகளும், தள்ளாடிக் கொண்டு, நிற்கும் விமானத்திலிருந்து, மிகக் கவனமாக வெளியே வருகிறார்கள். அவர்களை pick-up பண்ணுவதற்காக ஒரு மிதவை platform காத்திருக்கிறது. அந்த platform-ல் கட்டப்பட்டிருக்கும் ஒரு கயிறை விமானத்தோடு சேர்த்து கட்டுகிறார்கள். பயணிகளை, platform-ல் இறக்கி விடுகிறார்கள் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : இறக்கி விடுகிறார்களா…. மேகலா  : ஆம் க

அழகு - பகுதி 16

மேகலா  : கிருஷ்ணா…. நீளமான train, compartment-ஆகப் பிரிக்கப்பட்டு, ஒரு compartment-க்கு 8 seats என்று அமைக்கப்பட்டிருக்கும். எதிரெதிரே 6 பேரும், நடைபாதை விடுத்து ஜன்னலோரமாக 2 seat-ம் உட்காருவதற்கு இடம் இருக்கும். ஆறு பேர் அமரும் seat-ல், இப்புறம் 3 பேரும், அந்தப்பக்கம் 3 பேரும் உட்காரலாமில்லையா…. அந்த உட்காரும் seat, ஒரு படுக்கை. அது தவிர, நடுப்புறத்தில் ஒரு பலகை; அது தொங்க விடப்பட்டிருக்கும். மேல்புறத்தில் ஒரு படுக்கை என்று இருக்கும். தொங்க விடப்பட்டிருக்கும் பலகையை, மேல்புறத்தில் மாட்டியிருக்கும் சங்கிலியில் கோர்த்து விட்டால், படுக்கையாகி விடும். இதை berth என்று சொல்லுவார்கள். இதற்கு 3-tier compartment என்று பெயர். சின்னப்பிள்ளைகள் train-ல் travel பண்ணுவதற்கு ஆசைப்படுவதே, upper berth-திலோ, நடு berth-திலோ படுக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால் தான். நாங்கள் Hyderabad-க்கு ஒரு முறை train-ல் travel பண்ணினோம். ஷீத்தல், நான், சந்தியா, ஷீத்தல் அப்பா போகும் போது, சந்தியா train-ல் ஏறியவுடனேயே, upper berth-ல் ஏறிக் கொண்டாள். கண்களை உருட்டி உருட்டி, அவள் அதை enjoy பண்ணிய விதம் மறக்க முடியாதது. அந

அழகு - பகுதி 15

மேகலா   : அதுவும் அழகு தானே கிருஷ்ணா….. Single road-ன்னு இன்னைக்கு சொல்றோம். அந்தக் காலத்துல, ஒத்தையடிப் பாதைன்னு சொல்லுவாங்க…. தார் ரோடு இல்லாத , செவக்காடுகளில் மக்கள் நடந்து சென்று, நடந்து சென்று, ஏற்பட்ட பாதையை ‘ஒத்தையடிப் பாதை’ என்று சொல்லுவார்கள். அந்தப் பாதையில், இரண்டு காளைகளை வாண்டியில் பூட்டி, வண்டிமாடு ஓட்டுபவர், மாட்டை விரட்டவே வேண்டாம் கிருஷ்ணா…. பழகின பாதையில் மாடு தன்னாலே ஓடும். கொம்பில் கட்டியிருக்கும் சலங்கை நடனமாட, கழுத்து மணியும் அசைந்து அசைந்து ஒலி எழுப்பும். மாட்டுக்கும், வீடு வந்து விட்டது என்ற குஷி பிறக்கும்.   அந்த சமயத்தில், வண்டி மாடு ஓடும் ஓட்டம், அதைப் போல ஒரு குஷியான அழகு இருக்க முடியுமா கிருஷ்ணா….  கிராமத்து வாசனை; எளிமையை அழகாக வெளிப்படுத்தும் வாகனம்; என்ன இருந்தாலும் இன்றைய நவீன வாகனங்களுக்கெல்லாம் முன்னோடி;   சுத்தமான காற்றை கொஞ்சங்கூட மாசுபடுத்தாத வாகனம்;  நம்ம முன்னோர்களை நினைவுபடுத்துவது; காசு பணம் செலவில்லாதது….; என்று இத்தனை பெருமைகளை உள்ளடக்கிய இந்த வாகனத்தை எத்தனை முறை பேசினாலும், ஓட்டினாலும் அலுப்பில்லாதது; அழகானது கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : கிராமம