Posts

Showing posts from October, 2020

கொரோனா படுத்தும் பாடு - பாகம் 2

  மேகலா   : கிருஷ்ணா….. இப்போ சமீபத்தில், என் தம்பி மகள் கல்யாணத்திற்குப் போனேனல்லவா…. கிருஷ்ணர்  : என்னது….. உன் தம்பி மகளா…. உங்கள் வீட்டில் தான் எல்லா கல்யாணமும் முடிஞ்சிருச்சில்ல… மேகலா  : கிருஷ்ணா….. இது எங்க ‘சின்னய்யா’ பேத்தி கிருஷ்ணா… கிருஷ்ணர்  :  ‘சின்னய்யா’…. ‘வாவ்’, தூய தமிழ்ச் சொல்;  இந்தக் ‘கொரோனா’ time-ல கல்யாண வீட்டிற்கு சென்று ஆட்டம் போட்டாயா….? மேகலா  : எங்கேயும் வெளியில் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தோம்….  ஒரு வண்டி நிறைய பாசத்தைக் கொண்டு வந்து, நம்ம மேல கொட்டி, கையில் அவன் மனசு போலயே ‘தகதக’வென மின்னும் ‘சேலையை’,,,,. ஒண்ணல்ல, மூணு கொடுத்து, ‘அக்கா! கல்யாணத்துக்கு வந்திருங்கக்கா’ என்றால், என்ன செய்ய கிருஷ்ணா!  அதான்! போய் விட்டேன். கல்யாண வீட்டில், reception-ல் சந்தனமும், கல்கண்டும் வைக்கல; ‘mask’ தான் வைத்திருந்தார்கள்.  ஒரு chair-க்கும் இன்னொரு chair-க்கும் இடையில் 2 அடி இடைவெளி…… கிருஷ்ணர்  : நீங்கள் இடைவெளியைக் கடைப்பிடித்தீர்களா…., நெருக்கிப் போட்டு உட்கார்ந்து அரட்டை அடிச்சீங்களா….? மேகலா  : ம்…. கொஞ்சம்…. கடைப்பிடித்தோம்…. கொஞ்சம்….. கிருஷ்ணர்  : கொஞ்சம் வி

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 106

  மேகலா   : ஏன் கிருஷ்ணா! இவர்கள் நடத்திய யுத்தம்…., ஒரு யுத்தம்….! அதை இவர்களுடைய அரசனிடம் சொல்லிப் பெருமை வேறு படுகிறார்கள்? துரியோதனனுக்கு, மிச்சம் மீதியில்லாமல் பகைவர்கள் அழிந்தார்கள்; அந்தவரைக்கும் சந்தோஷம். ஐயோ…. நெஞ்சு கொதிக்குது கிருஷ்ணா…   எனக்கு அஸ்வத்தாமாவைப் பிடிக்கவேயில்லை கிருஷ்ணா…. ஆச்சாரியர் துரோணரின் மகனா இவன்….? கிருஷ்ணர்  : என்ன செய்வது மேகலா….? அவன் தான் புலம்பும் போது சொல்கிறானே….  ‘உன்னுடைய தயாள குணத்தில் என்னுடைய தந்தை, நான், கிருபர் ஆகியோர் பெரும் செல்வத்துடன் வாழ்ந்தோம்.  எங்களுக்குப் பணியாட்களை நீ அமர்த்தினாய். உன்னுடைய தயையினால் நாங்கள் கற்றறிந்தவர்களுக்குச் சன்மானங்களை அளித்து, சிறந்த யாகங்களை நடத்தினோம் – இந்த வார்த்தைகளைக் கவனித்தாயா? துரியோதனனிடம் எத்தனைதான் பொறாமை, பெரியோர்களை உதாசீனப்படுத்துதல் போன்ற குணங்கள் இருந்தாலும், வில் பயிற்சியில் சிறந்தவர்களை சிறந்த முறையில் கவனிக்கவும் செய்திருக்கிறான். அந்த விசுவாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. மேகலா  :  தர்மம் எது என்பதை மறக்குமளவுக்கா…? தூக்கத்தில் ஆழ்ந்தவன் தலையை அறுக்குமளவுக்கா…? கிருஷ்ணர்  : இந்த அஸ்வத

கொரோனா படுத்தும் பாடு - பாகம் 1

  கிருஷ்ணர்   : ஹாய் மேகலா! என்ன இவ்வளவு தூரம்….., நேற்றுத்தானே வாகனங்களைப் பற்றிப் பேசிப் பேசி ‘சிக்கு புக்கு ரயிலே’ என்று பாட்டுப் பாடி ஓய்ந்திருக்கிறாய்….. அதற்குள் என்ன news வாசித்து விட்டாய்…. இத்தனை அவசரமாய் அரட்டையப் போட வந்ததன் காரணம் என்ன….? மேகலா  : கிருஷ்ணா….. நீ அறியாதது ஒன்றும் இல்லை. இந்த கொரோனா ‘பீரியடை’ கடக்கும் முன், எத்தனை பேரை இது தாக்கப் போகிறதோ என்று பயந்து கொண்டிருந்தோமா….. தாக்கி விட்டது கிருஷ்ணா….  நல்ல மனமுடையோரையெல்லாம் அசைத்துப் பார்க்கிறது….. கிருஷ்ணர்  : நீ இவ்வளவு புலம்பும்படிக்கு யாரைத் தாக்கி விட்டது…? மேகலா  : யார் குரலைக் கேட்டால், ஆயர்பாடிக் கண்ணன் கூடத் தூங்குவானோ…, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்; யார் குரலைக் கேட்டால்….., புல்லாங்குழலில் புகுந்து வரும் காற்று கூட பம்மிப் போகுமோ;…., அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்; யார் குரலைக் கேட்டால்….., இலையின் சலசலப்பு கூட மென்மையாகிப் போகுமோ…., அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்; யார் குரலைக் கேட்டால்….., நதியின் நீர்ச்சுழல் கூட பேச்சு மூச்சு இல்லாமல் போகுமோ….., அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்; யார் குரலைக் கேட்ட

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 105

  துரியோதனன் உயிர் துறந்தான் மேகலா  : அஸ்வத்தாமா, தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட திருஷ்டத்யும்னனின் தலைமுடியைத் தனது இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அவனைத் தரையில் போட்டுத் தேய்த்தான். அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்த திருஷ்டத்யும்னனால், அஸ்வத்தாமாவின் திடீர் தாக்குதலை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. அஸ்வத்தாமா, தனது வில்லினுடைய நாணை அறுத்து திருஷ்டத்யும்னனின் கழுத்திலே நாண் கயிற்றை இறுக்கி, அவன் கழுத்திலும் மார்பிலும் அவனை மிதித்து,  ஒரு அற்ப மிருகத்தைக் கொல்வது போல, அவனைக் கொன்றான். அப்போது திருஷ்டத்யும்னன் எழுப்பிய பயங்கரமான சப்தத்தைக் கேட்டு, பாசறையில் உறங்கிக் கொண்டிருந்த காவல்காரர்களும், பெண்களும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, அங்கு நிகழ்ந்த கோரமான காட்சியைக் கண்டு அலறினார்கள். பலர் மயங்கி விழுந்தார்கள். அப்போது விழித்த வீரர்கள், அஸ்வத்தாமாவை எதிர்த்தார்கள். அவர்களையெல்லாம் அவன் அலட்சியமாக வெட்டி எறிந்தான்.  அப்பொழுது தெறித்த ரத்தத்தால் நனைக்கப்பட்ட அஸ்வத்தாமா, மனிதர்களை மீறிய ஒரு பிறவி போலேயே காட்சியளித்தான். தன்னை எதிர்த்து வந்த திரௌபதியின் மகன்களையெல்லாம்

வாகனங்கள் பலவிதம் - பகுதி 10 (நிறைவு)

மேகலா   : என்ன கிருஷ்ணா….? ஹெலிகாப்டரில் பறந்திருக்கிறேனா என்றா கேட்டாய்….? கிண்டல் பண்ணுகிறாயா….?   நான் என்ன மந்திரியா…., மகாராணியா…..? விமானத்தில் ticket எடுத்து பறப்பது போல ஹெலிகாப்டரில் எல்லாம் பறக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா….   முதலமைச்சர், பிரதம மந்திரி…., முக்கியமான delegates மட்டும் தானே ஹெலிகாப்டரில் பறக்க முடியும். வெள்ள காலங்களில் சேதமடைந்ததை பார்வையிடுவதற்காகவும், பேரிடர் சமயங்களில், ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காகவும், ஹெலிகாப்டரில் பயணம் செய்வார்கள் கிருஷ்ணா. நானெல்லாம் எப்படி இதில் பயணம் செய்ய முடியும்? கிருஷ்ணர்  : சரி…! மேகலா, உன்னிடம் ஒரு கேள்வி.  ‘ஹை-ஜாக்’ என்றால் என்ன….? மேகலா  : ஐயோ….. கிருஷ்ணா….. சும்மா, ஜாலியா பேசிக்கிட்டு இருக்கும் போது, பெரிய பெரிய வார்த்தையெல்லாம் ஏன் யோசிக்கிற….? கிருஷ்ணர்  : ஏண்ணா…., எனக்குத் தெரியாதே….. மேகலா  : சும்மா….. இந்த ‘உதார்’ வுடுற வேலையெல்லாம் பண்ணாத…. உனக்குத் தெரியலண்ணா, வேறு யாருக்குத் தெரியும்….? இருந்தாலும் சொல்றேன்…. உன் காதை கிட்ட கொண்டு வா….. உன் தலைப்பாகையைக் கொஞ்சம் விலக்கேன். நல்லா…. காது ரெண்டையும் மூடிக்கி

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 104

  மேகலா   : கிருபர் கூறிய நல்ல வார்த்தைகளை ஏற்க மறுத்தான் அஸ்வத்தாமா. ‘தர்மத்தின் பாதை பற்றிய உங்கள் விளக்கங்கள் சரியானவையே. ஆனால், ஒன்றை மறந்து விட்டீர். தர்மத்தின் அணை பாண்டவர்களால் தான் முதலில் உடைக்கப்பட்டது. அதனால் தான் இந்த யுத்த களத்தில் அநீதி மிகுந்து விட்டது. தர்மத்தின் அணையை உடைத்தவர்களே, இந்த அநீதிகளைத் தாங்க வேண்டியவர்கள். நீர் ஏன் அவர்கள் செய்த இழிசெயல்களை நிந்திக்காமல் இருக்கிறீர்? என்னைப் பொறுத்த வரையில் அவர்களையெல்லாம் நான் பழிக்குப் பழி வாங்காமல் விடப் போவதில்லை.   இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தி, அவர்கள் உறங்கும் நேரத்தில், அவர்களைக் கொன்று விடப் போகிறேன்’. இவ்வாறு கூறிய அஸ்வத்தாமா, ரதத்தில் ஏறி அமர்ந்து, பாஞ்சாலர்களின் பாசறையை நோக்கிப் புறப்படுவதற்குத் தயாரானான். அப்பொழுது கிருபர், கிருதவர்மா இருவரும், ‘சுகமோ, துக்கமோ எதுவாயிலும் நம் மூவருக்கும் சமமே!’ என்று கூறி, அவனைப் பின் தொடர்ந்தார்கள். பாஞ்சாலர்களின் பாசறை வாயிலில் அவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  மிகவும் பயங்கரமான ஒரு உருவம், நெருப்பைக் கக்கிக் கொண்டு, யாராலும் அணுக முடியாத வகையில் பாசறைக்குப் பாத

வாகனங்கள் பலவிதம் - பகுதி 9

  மேகலா   : விமானத்தைப் பற்றி இப்போது பேசலாம் கிருஷ்ணா! படுக்கை வசதி கிடையாது…, மற்றப்படி, பேப்பர் படிப்பது, நடப்பது, சாப்பிடுவது எல்லாமும் விமானத்திலும் செய்யலாம். Train-ல் station-ல் இறங்கிப் போய், சாப்பிட வாங்கி வர வேண்டும்.   ஆகாய விமானத்தில், 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை, station-லாம் வராது. விமானத்துக்குள்ளேயேதான் சாப்பிடக் கொடுப்பாங்க… கிருஷ்ணர்  : ஏன் மேகலா…. எல்லா வாகனத்திலும், பழைய வடிவம், புதிய வடிவம் என்று இருப்பது போல, விமானத்திலும் இருக்கோ….? மேகலா  : வடிவத்தில் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியல, கிருஷ்ணா…. ஆனால் வசதிகளில் நிறைய மாற்றம் இருக்கணும் கிருஷ்ணா…. எனக்கு, ஆரம்ப காலத்து விமானம், தற்போதைய விமானம் என்றெல்லாம் சொல்லத் தெரியல கிருஷ்ணா. Jet plane, Concord plane என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.  சின்ன வயசுல, plane பறக்குது என்று யாராவது சொன்னாலும் போதும், உடனே அண்ணாந்து பார்த்து, அதிசயப்பட்டு வியந்திருக்கிறேன்.  அப்பல்லாம், இந்த விமானத்தில் நானும் பறப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை கிருஷ்ணா. அப்பல்லாம் நான் நினைப்பதுண்டு;  ‘இத்தனை பெரிய விமானம், மனுஷங்கள

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 103

  சௌப்திக பர்வம் கோட்டான் காட்டிய வழி மேகலா  : விழுந்து கிடந்த துரியோதனனை விட்டுச் சென்ற கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகிய மூவரும் பாண்டவர்களை நினைத்து, மிகவும் பயம் கொண்டு, யாராலும் நுழைய முடியாத ஒரு காட்டினுள் நுழைந்தார்கள். துக்கம், பொறாமை, கோபம் ஆகிய உணர்வுகள் மேலிட்டவர்களாகிப் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார்கள். காட்டினுள், ஒரு பெரிய ஆலமரத்தினைக் கண்டு, அந்த மரத்தின் கீழ் இளைப்பாறுவது என்று முடிவெடுத்து, உறக்கத்தின் வசப்பட்டார்கள்.  ஆனால், கோபத்தாலும், பகை உணர்வாலும் ஆட்கொள்ளப்பட்ட அஸ்வத்தாமா, உறக்கமின்றித் தவித்தான்.  அந்தக் காட்டின் நாலாபக்கங்களிலும் மாறி மாறித் தன் பார்வையைச் செலுத்திய போது, அந்த ஆலமரத்தில், நூற்றுக்கணக்கான காகங்கள் கூடுகளில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அப்போது, திடீரென்று அங்கு ஒரு பெரிய கோட்டான், வேகமாகப் பறந்து வந்து, அஸ்வத்தாமா பார்த்துக் கொண்டிருந்த போதே, அந்தக் கோட்டான், காக்கைகளின் கூடுகளை எல்லாம் சிதற அடித்து, காக்கைகளைக் கொல்ல ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான காக்கைகள் இறந்தன. சில காக்கைகளின் சிறகுகள் ஒடிக்கப்பட்டன. சிலவற்றுக்கு கால்கள் பிளக