Posts

Showing posts from June, 2020

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 89

மேகலா : கர்ணன், பூமியில் அமிழ்ந்த தேர்ச் சக்கரத்தை பூமியிலிருந்து மேலே எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில், கிருஷ்ணர், அர்ஜுனனிடம், ‘தயக்கமின்றி கர்ணனின் கவசத்தைப் பிளந்து அவன் உயிரை மாய்க்கச் சொல்லிக் கூறினார்’ என்பதை சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். கிருஷ்ணர் அவ்வாறு கூறியதும், அர்ஜுனன், பழைய நிகழ்ச்சிகளினால் பெரும் கோபம் கொண்டு, கர்ணனைப் பலமாகத் தாக்கினான். அந்த நேரத்தில் கூட, கர்ணன் தேர்ச் சக்கரத்தைத் தூக்குவதும், அர்ஜுனன் மீது பாணங்களைப் பொழிவதுமாக கடும் யுத்தம் புரிந்து கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து கிருஷ்ணர், அர்ஜுனனை நோக்கி, ‘ இதுதான் தருணம். கர்ணனை அஸ்திரத்தினால் மாய்த்து விடு’ என்று கூற, அர்ஜுனன் ஒரு அம்பை ஏவ, அது அர்ஜுனனின் கொடியை அறுத்துக் கீழே தள்ளியது. கர்ணனின் கொடி பூமியில் சாய்ந்ததைப் பார்த்த கௌரவர் படையே கலங்கியது. அப்போது அர்ஜுனன், ‘அஞ்சலிகம்’ என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தான். அது இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு ஒப்பானது. பெரும் வேகத்துடன் பாயக் கூடியது. விஷ்ணுவின் சக்கரத்துக்கு நிகரானது. அதை வில்லிலே பூட்டிய அர்ஜுனன், கர்ணன் மீது அதைப் பிரயோகித

Lock-down கலகலப்பு - பகுதி 2

கிருஷ்ணர் : என்ன மேகலா...., உனக்கு serial-ம் கிடையாது. திருப்பிப் பார்க்கும் பழைய serial-ம் நீ பார்ப்பதில்லை. இத்தனை உணர்ச்சி பொங்க என்ன கதை விடுகிறாய்....? மேகலா : கதை விடுகிறேனா.....? யார்....., நானா.....? நானும் Sheethal அப்பாவும் ராமாயணம் படிக்கிறோம், கிருஷ்ணா.... கிருஷ்ணர் : oh! உன் கதையில், ராமர் கானகம் சென்று விட்டாரா....? பரதன் அயோத்திக்கு வந்த பின், ராமர் கானகம் சென்ற செய்தி அறிந்து, அவரை அழைத்து வரச் சென்றுள்ளானா....? உன் குரலில் கொந்தளிப்பு தெரிகிறதே....! மேகலா : கிருஷ்ணா! அதையும் தாண்டி, இன்று சீதை, ராவணனால், அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டார்கள். ராமர், மனிதர்கள் புலம்புவது போலேயே புலம்புகிறார், கிருஷ்ணா! ‘சீதை கடத்தப்பார்’ என்பதை உணர்ந்ததும், ’சீதை இல்லாமல், தெய்வ அந்தஸ்து கிடைப்பதாக இருந்தாலும், எனக்கு அது வேண்டாம்; நான் சீதை இல்லாமல் உயிர் வாழ விரும்பவில்லை; அயோத்திக்கு சீதை இல்லாமல் திரும்ப மாட்டேன்’ என்று மனுஷ மக்களைப் போலவே புலம்புகிறார், கிருஷ்ணா.... வாசிக்கும் போது எனக்கு அப்படியே கரைஞ்சி போச்சு கிருஷ்ணா.... கிருஷ்ணர் : மனிதனாகப் பிறந்தால், மனிதனுக்கு

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 88

மேகலா : கர்ணன் எய்த ‘நாகாஸ்திரம்’ அர்ஜுனனின் கிரீடத்தைப் பறித்துச் சென்று, வீணானது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். நாகாஸ்திரம் ஏவிய போது, ரதத்தை பூமியில் அழுத்திய கிருஷ்ணர், அந்த அஸ்திரம் பாழான பிறகு, தேரை மீண்டும் மேலே வருமாறு செய்தார். அதன் பின், கர்ணன் பெரும் கோபத்துடன் போரிட்டான். அதைக் கண்டு பொறுக்காத அர்ஜுனன், பல அஸ்திரங்களை ஏவ, கர்ணனுடைய கிரீடம் அடிபட்டுப் பூமியில் விழுந்தது. பெரிதும் தாக்கப்பட்ட கர்ணன், உடல் முழுதும் ரத்தம் வழிய, பெரிதும் களைப்படைந்து ஓய்ந்தவனாகி விட்டான். அந்த நிலையில், அவனைக் கொன்று விடச் சொல்லி, அர்ஜுனனைக் கிருஷ்ணர் தூண்டி விட்டார். ஆனால், அதற்குள்ளாகக் கர்ணன், தன் களைப்பிலிருந்து விடுபட்டு, மீண்டும் உற்சாகத்துடன் போரிட ஆயத்தமானான். ஆனால், அந்த நேரத்தில் விதி விளையாடியது! கர்ணன் பெற்ற சாபங்கள் பலிக்கும் நேரம் நெருங்கியது. கர்ணன் கற்ற சாஸ்திரம் மறந்து போகும் என்ற பரசுராமரின் சாபமும், ஆபத்தான நேரத்தில், ‘உன்னுடைய தேர்ச் சக்கரம் பூமியில் அழுந்தி விடட்டும்’ என்ற முனிவரின் சாபமும் பலிக்கும் நேரம் வந்தது. மேகலா : கள்ளன் கிருஷ்ணா, நீ! திறமைசாலிகளுக்குக்

Lock-down கலகலப்பு - பகுதி 1

கிருஷ்ணர் : ஹலோ..... மேகலா..... நீ எப்படி இருக்க.....? ஏன் இத்தனை நாளா என்னைத் தொடர்பு கொள்ளவேயில்லை......? சரி...... இந்தியாவில் கொரோனாலாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு.....? மேகலா : என்ன கிருஷ்ணா....? நீயும் comedy பண்ணிக்கிட்டு இருக்க....! ‘உங்க ஊர்ல பூக்குழியெல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்குண்ணு’ குசலம் விசாரிக்கிற மாதிரியும், இங்குள்ள அரசியல்வாதிகள் கேட்பது மாதிரியும் கேட்குறியே.... என்னவோ, ‘மாதம் மும்மாரி பொழிகிறதா, காடு கழனியெல்லாம் நெறஞ்சு வழிகிறதா’ என்று மந்திரிமார்களைக் கேட்டு, நாட்டு நெலமையைத் தெரிந்து கொள்ளும் ராசா வீட்டுக் கண்ணுக்குட்டி மாதிரி கேட்குறியே....! உனக்கே இது ஞாயமாய்ப் படுதா, கிருஷ்ணா....? கிருஷ்ணர் : மேகலா...... இப்படிக் கேட்டா, நீ எப்படி react பண்ணுகிறாய் என்று பார்ப்போம் என்றுதான் கேட்டேன்...... மேகலா : நீ பாட்டுக்குக் கேட்டுட்ட.... இங்கு என்னடான்னா..... இதற்கான முறையான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை..... இந்த வைரஸின் கோரத் தாண்டவம், நாட்கள் தாண்டி, வாரங்கள் தாண்டி, இன்னும் எத்தனை மாதங்கள் தலை விரித்து ஆடப் போகிறது என்று யாராலும் உறு

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 87

அர்ஜுனனைக் கிருஷ்ணர் காப்பாற்றினார் மேகலா : தேவர்கள், ரிஷிகள், அசுரர்கள், சித்தர்கள் ஆகியோர், இரு பிரிவுகளாக நின்று, ஒரு பிரிவினர் 'அர்ஜுனன் தான் வெற்றி பெறுவான்' என்றும், மற்றொரு பிரிவினர், 'கர்ணன் தான் வெற்றி பெறுவான்' என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது, இந்திரன், பிரம்மதேவனிடம், ‘அர்ஜுனனே வெற்றி பெற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான். பிரம்ம தேவனும், பரமசிவனாரும், அர்ஜுனனே வெற்றி பெற வாழ்த்தினர். படை வீரர்களால் அணிவகுக்கப்பட்ட கர்ணன், சல்யனைப் பார்த்து, ‘சல்ய மன்னனே! ஒருகால் நான் அர்ஜுனனிடம் தோல்வி அடைந்து, கொல்லப்பட்டு இந்தப் பூமியில் விழுந்தால், அந்த நிலையில் நீ என்ன செய்வாய்? நான் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று புன்சிரிப்புடன் கேட்டான். அதற்கு சல்யன், ‘கர்ணா! ஒரு வேளை அர்ஜுனன் உன்னைக் கொன்று வீழ்த்தி விட்டால், அந்த நிலையில், இந்த ரதத்தின் உதவியோடு இந்த யுத்த களத்தில், அர்ஜுனன், கிருஷ்ணர் இருவரையும் வீழ்த்திக் கொல்வேன். இதில் சந்தேகமில்லை’ என்று மன உறுதியோடு கூறினான். அதே சமயத்தில், அர்ஜுனனும், கிருஷ்ணரைப் பார்த்து, இதே போல கேள்வி கேட்க

தாலி கட்டலைனா.... பகுதி 2 (நிறைவு)

மேகலா : எங்கள் வீட்டிற்கு எதிர்த்தாப்புல இருக்கிற play ground-ல் எங்க ஊர் முனிசிபாலிட்டி ‘குப்பை’ கொட்ட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் என்று சென்ற வாரப் பகுதியின் முடிவில் கூறியிருந்தேனல்லவா.... இந்த news, N.G.O. Colony முழுக்க வைரலாகி பரபரப்பானது. கிருஷ்ணர் : என்ன மேகலா.... எனக்குப் புரியல.... வழக்கமா..... மனுசங்க தான் அரசாங்கத்த எதிர்த்துப் போராட்டம் நடத்துவாங்க.... இங்க, நிம்மதியாக இருக்கும் ஒரு காலனிக்குள், plot போடும் போது, play ground-க்காக இடத்தை ஒதுக்கச் சொன்னதே, government-தான். இப்ப அந்த அரசாங்கமே, சின்னப் புள்ளைக விளையாடும் இடத்தை ஆக்ரமித்து, மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக்கப் போகிறார்களாமா....? குப்பையைக் கொண்டு வந்து கொட்டினால்....., மக்கள் அந்த நாற்றத்தில் குடியிருக்க முடியுமா....? மேகலா : கிருஷ்ணா..... நீ எங்களுக்கு சாதகமாக யோசிக்கும் போது, எங்களுக்கு சாதகமாகவே பலனும் கிடைக்கும் என்று நம்புகிறேன் கிருஷ்ணா.... இப்படித்தான் தாசில்தார் அம்மாவும் சொன்னார்கள், கிருஷ்ணா..... கிருஷ்ணர் : பிரச்னையைத் தாசில்தாரிடம் கொண்டு சென்றீர்களா....? மேகலா : பின்ன...?

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 86

மேகலா : நாம் இப்போது யுத்த களத்தில் இருக்கிறோம். மேலும் அங்கு நடந்த நிகழ்வுகளைக் காணலாம். அர்ஜுனனும், பீமனும், கௌரவர் படையை இன்றே அழித்து விடுவது போல உக்கிரமாகப் போர் புரிந்ததைப் பார்த்த கர்ணன், பாண்டவர் படையை அழிக்கத் தொடங்கினான். பீமன், சிகண்டி, திருஷ்டத்யும்னன், நகுல-சகாதேவர்கள், கர்ணனைச் சூழ்ந்து கொண்டார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் திரௌபதியின் மகன்களை தேர்களை இழந்தவர்களாக்கி, பீமனையும் துன்புறுத்தினான். மிச்சமிருந்த வீரர்கள் பதறி ஓடினார்கள். கர்ணனின் வெற்றியைக் கண்ட துரியோதனன், மிக்க மகிழ்ச்சி அடைந்து, வாத்தியங்களை ஒலிக்கச் செய்தான். அதனால் உற்சாகமடைந்த கிருதவர்மா, கிருபர், சகுனி முதலானோர், ஆயிரக்கணக்கில் பாண்டவர்களைக் கொன்றார்கள். அச்சமயத்தில் வேறு ஒரு புறத்தில் யுத்தம் செய்து கொண்டிருந்த அர்ஜுனன், கிருஷ்ணரைப் பார்த்து, ‘கர்ணனால் நமது படைவீரர்கள் பயந்து ஓடுகிறார்கள். சந்தோஷத்தில் துரியோதனன் முகம் ஒளி வீசுகிறது. இச்சமயத்தில், கர்ணன் இருக்கும் இடத்திற்கு என் தேரைச் செலுத்துங்கள். கர்ணனைக் கொல்லும் நேரம் வந்து விட்டது. இப்போது அவனைக் கொல்லாவிட்டால், நமது படையில் யாரும் மிஞ்ச

தாலி கட்டலைனா.... பகுதி 1

மேகலா : கிருஷ்ணா! இந்த ‘டயலாக்’க கேளேன்... கிருஷ்ணர் : என்ன மேகலா! ஒரு good morning கிடையாது; நலம் விசாரிப்பு கிடையாது; வரும் போதே ‘டயலாக்’கோட வர்ற... மேகலா : நேற்று ஒரு படம் பார்த்தேன் கிருஷ்ணா! அதில் வரும் வசனம் என்னை ரொம்பவே கலகலப்பாக்கியது. அது மறந்து போவதற்குள் உன்னிடம் சொல்லணுமே என்ற பரபரப்பில் தான்...., சரி...., ‘ஹாய் கிருஷ்ணா..... எப்படி இருக்கிற....? கிருஷ்ணர் : ஐயே.... போதும்.... உன் ‘டயலாக்’கைச் சொல்லு.... மேகலா : ஒரு மாப்பிள்ளை, தன்னைக் காண வந்த மாமனாரிடம் கேட்பது போல..... அதாவது இது ’கட்டாயக் கல்யாணம்’ மாதிரி.... அதனால் அவன் (மாப்பிள்ளை) கேட்கிறான்....., ‘தாலி கட்டுனா, எனக்கு என்ன போடுவீங்க....?’ கிருஷ்ணர் : ‘தாலி கட்டலன்னா, உன்னப் போட்டுருவேன்’ என்றானா....? மேகலா : ஐயோ! எப்படி கிருஷ்ணா.... கச்சிதமாய் சொல்லிட்ட...! திருட்டுத்தனமா நீயும் படம் பார்த்தியா....? கிருஷ்ணர் : ஆம்...மாம்.... இதற்குப் பெரிய.... படம் பார்க்கணுமாக்கும். நீ build-up பண்ணும் போதே, ‘ஏதோ சமாச்சாரம்’ என்று தெரிகிறது.... அதிலும், ‘கட்டாயக் கல்யாணம்’ என்று சொன்னாயா...., வெட்ட வெளிச

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 85

மேகலா : தருமபுத்திரனைச் சமாதானம் அடையச் செய்ய, ஸ்ரீ கிருஷ்ணர் பெரும் முயற்சி எடுக்கிறார். தருமபுத்திரனிடம் அவர் மேலும் கூறுகிறார், ‘யுதிஷ்டிரா! காண்டீபத்தை வேறு ஒருவரிடம் கொடுக்கச் சொல்லி யாராவது அர்ஜுனனிடம் பேசினால், அவர்களைக் கொல்ல வேண்டும் என்பது அர்ஜுனனுடைய சபதம். அதனால் தான் நீர் அப்படிப் பேசியவுடன், உம்மைக் கொல்லவும் அர்ஜுனன் துணிந்தான். அதே சமயத்தில், நீர் உயிர் துறந்தால், அர்ஜுனன் உயிர் வாழ மாட்டான். ஆகையால், நான் தான் இந்த உபாயத்தை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். நான் சொல்லிக் கொடுத்துத்தான், அவன் உம்மைப் பார்த்து, சுடுசொற்களைப் பேசி, உமக்கு அவமானம் இழைத்தான். பெரியோருக்கு, அவமானமே உயிர் இழப்பு என்று சொல்லப்படுகிறது. அதனால், அர்ஜுனனின் சபதம் காப்பாற்றப்படுகிறது. உங்களை இழிவாகப் பேசியதால் உயிரிழக்க விரும்பிய அர்ஜுனனுக்கு, தற்புகழ்ச்சியே உயிரிழப்புக்குச் சமானம் என்று சொல்லிக் கொடுத்தவனும் நான் தான். அதனால், அவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டான். நாங்கள் செய்த இந்தக் காரியத்தைப் பொறுத்துக் கொண்டு, எங்களை மன்னிக்க வேண்டும். நாம் யுத்தத்தில் மீண்டும் முனைவோம். கர்ணனின் ரத்தத்த