Posts

Showing posts from August, 2023

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 8

மேகலா   : கிருஷ்ணா…., அப்போ time 2, 2 1/2 தான் ஆகியிருந்தது. நாங்க hotel-லிலிருந்து வெளியேறி, கலகலப்பான அந்தக் கடைவீதியில் சுற்றிக் கொண்டிருந்தோம். எல்லா ஊர்களிலும் மாதிரி ஹரித்துவாரிலும், கோயிலிருக்கும் பகுதியைச் சுற்றித்தான் shopping center இருக்கு கிருஷ்ணா… அதிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பொருட்கள் விற்கும் கடைகள் தான் அதிகம் இருந்தது… அங்கு ஒரு platform கடையில், travel bags-ஐப் பார்த்ததும் ராணிமா விலை கேட்க, வேறொரு customer-இடம் பேரம் பேசிக் கொண்டிருந்த கடைக்காரன், நாங்கள் பேரம் பேசுவோம் என்று, ‘ஏக் சௌ ருப்யா’ என்று கறாராகப் பேசினான். அந்த bag-ன் capacity, color, design என்று பார்த்ததும், பேரமே பேசாமல் 5 bags வாங்கினோம்…. கிருஷ்ணர்  : ஐந்து bags-ஆ… எதுக்கு…., இங்கு வந்து கடை போடவா…. மேகலா  : இல்ல கிருஷ்ணா…. நாம் துணி எடுத்து தைத்தாலும், 100 ரூபாய்க்குள்ள தைக்க முடியாது. ஹரித்துவார் வந்து சென்றதன் ஞாபகமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று ‘ராணிமா’ சொல்லி, அவள்தான் வாங்கினாள்… எனக்கு ஒரு bag கொடுத்தாள் கிருஷ்ணா….. கிருஷ்ணர் : வேற என்னென்ன வாங்குனீங்க…. மேகலா  : ஆதி, ஒரு M. G. R. கண்

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 7

கிருஷ்ணர்   : கடவுளுடைய உருவத்தை, மனிதன் பிரத்யட்சம் பண்ண நினைத்து, இறைவனுடைய உருவத்தை வடிவமைக்கும் போது, விரதங்களைக் கடைப்பிடித்து, தவம் மேற்கொள்கிறான். அப்போது, சந்தர்ப்பத்தினாலோ, கனவுகளிலோ…, இறைவன் தன் மாயா உருவத்தைக் காட்டுகிறார்… சந்தர்ப்பம், இறைவனைக் காட்டும் போது, மனிதன் தான் கண்ட தோற்றத்தை உள்வாங்கி, அதன்படியே வடிவமைக்கிறான். இப்படித்தான் தெய்வ உருவங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதன்படிதான் ‘பத்ரகாளியம்மனின்’ உருவமும்… கதைகளும் நம் பாரத தேசமெங்கும் பரவி இருப்பது…   வேறு வேறு பெயர்களில்…. காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி என்று வடிவமைக்கும் போது… கையில் கரும்புடன், கிளியுடன்… என்று ‘கதை மூலமாக’ ஒரு signature கொடுக்கிறான்.  இருந்தாலும்…, நம் மனதுக்கு நெருக்கமான உருவத்தில் கடவுளை தரிசிப்பது சந்தோஷமாகத்தானே இருக்கும்… சரி…, நீ… என்ன, ஒரு கடை விடாமல் உன் அரைகுறை ஹிந்தி knowledge-ஐ தெறிக்க விட்டயா…. மேகலா : இன்னும் ஒரே ஒரு கடையில் தான் நின்றோம்… ஹரித்துவார் வந்ததன் நினைவாக, அன்னையின் ஸ்ரீபாதம்…, எல்லோருக்கும் கொடுப்பதற்காக வாங்கினோம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அன்னையின் ஞாபகமாக ‘ஸ்ரீபாதம் வாங

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 6

மேகலா   : பிரார்த்தனை முடிந்து, rope car-ல் ஏறி, கீழே வந்து விட்டோம். இங்குதான் ஹரி நினைத்தான், ‘அவர்களே, அங்கேயே நம்மை இன்னொரு car-ல் ஏற்றி விடுவார்கள்’ என்று…. ஆனால், rope car land ஆகும் இடத்தில், அடுத்து வரும் car-க்கு இடஞ்சலாக யாரும் அங்கே நிற்கக் கூடாது… அப்படியானால், வெளியேறத்தான் செய்யணும். அங்கே வேற ஒரு rope car station-ம் இல்லை… அடுத்ததுக்கு எப்படிச் செல்வது… நாங்கள் வெளியேறி, taxi இருக்கும் இடத்திற்கே வந்து விட்டோம்… ஹரி, driver-இடம் கேட்டான்… அவர், taxiயில் இன்னொரு வாசலுக்குக் கொண்டு வந்து நிறுத்தினார். அங்கிருந்து சிறிது தொலைவு நடக்க வேண்டும். அதற்கு auto-வை வரச் சொல்லி, எங்களை அதில் போகச் சொன்னார். அதன்படி சென்று, இன்னொரு முறை rope car-க்கு டிக்கெட் எடுக்கணுமோ என்று கேட்க, டிக்கெட் பரிசோதகர் பார்த்து விட்டு, எங்களை வேறு ஒரு rope car கிளம்புமிடத்திற்கு கூட்டிச் சென்றார் கிருஷ்ணா….   இதற்கு நடுவில், அரைகுறை இந்தியிலும், தெரியாத பழக்க வழக்கங்களாலும் கொஞ்ச நேரம் தான் என்றாலும் அல்லாடித்தான் போனோம்…  எனக்கு நடந்த களைப்பு வேற அயர்ச்சியாக்கியது… கிருஷ்ணர்  : Oh! அப்பாடி… இது மொழி

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 5

மேகலா   : கிருஷ்ணா….., நாங்கள் தங்கியிருந்தது ரிஷிகேஷில்…. அதனால், முதல் நாள் சுற்றியது, நாங்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றித்தான்… இரண்டாம் நாள், 1/2 மணி நேரப் பயணத்தில் ஹரித்துவாரை அடைந்தோம்.   நம்ம ஊரில், கோயில் நடை சாற்றுவது என்ற வழக்கம் இருப்பதால், கிளம்பும் நேரமெல்லாம் பார்த்து பரபரப்பாவோம்….  ஹரித்துவாரில் நாங்க பார்க்க நினைத்தது மலை மீது இருக்கும் ‘சண்டிதேவி’, ‘மானசதேவி’ கோயில்கள் இரண்டும் ஒரே மலையில்தான்; ஆனால், வேறு வேறு குன்றுகளில் இருக்கிறது. காலை breakfast-ஐ முடித்துக் கொண்டு, பரபரப்பேயில்லாமல் 9 மணிக்குக் கிளம்பினோம். சிறிது நேரப் பயணத்தில் ஹரித்துவாரை அடைந்தோம்.   போகும் வழியில், digital மயமான city தென்படாமல், எளிமையான நகரத்தைப் பார்த்ததால், பயணம் சலனமின்றி சென்றது.  ஹரித்துவாரத்தில் மலைக்கோயிலுக்கு அடிவாரத்தில் வந்து விட்டோம். அங்கிருந்து, மலை மீது இருக்கும் கோயிலுக்கு rope car-ல் தான் செல்ல வேண்டும். அதற்கான ticket-ஐ எங்கு எடுப்பது என்று ஹரி விசாரித்துக் கொண்டிருந்தான். அங்கு சென்று பார்த்தால்…, காத்திருப்போர்கள் கூட்டம், எங்களை மிரட்டியது. எனக்கு உள்ளூர பயம்… இத்தனை