Posts

Showing posts from June, 2022

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 4

கிருஷ்ணர்   : என்ன திடீரென்று உரிமையைப் பற்றிப் பேசுகிறாய்? நீ அம்மா;   உன் பிள்ளையை வளர்க்கும் கடமை உன்னைச் சார்ந்தது என்ற பொறுப்பு உன் நினைவில் இருந்தால், உரிமையைப் பற்றி ஏன் யோசிக்கணும்…..   ஆடுற மாட்டை, ஆடிக் கறக்கணும் என்ற பழமொழியை யோசித்தாயா…. மாட்டின் மடியில் பால் கறக்க நினைப்பவன், மாட்டுக்குச் சொந்தமான கன்றினை தன் நாவால் நக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். கன்னுக்குட்டி பால் குடிக்க அனுமதிக்கணும். மாட்டினை தொழுவத்தில் கட்டி வைத்த கயிற்றை தன் கையில் வைத்துக் கொண்டு, பசு மாட்டின் தாடையைத் தடவிக் கொடுத்து, தாஜா பண்ணி, பால் கறப்பதில்லையா…. பசு மாடு, தனதென்று உரிமை பாராட்டி கன்றுக்குட்டியை அவிழ்த்து விடாமல், பால் குடிக்க விடாமல் செய்தால், பசு மாட்டிடம் பால் கறக்க முடியுமா….? மேகலா….,   நம்முடைய உரிமையை நாம் செயல்படுத்துவதற்குக் கூட, பக்குவம் தேவைப்படுகிறது; பொறுமை தேவைப்படுகிறது.   நன்றாக நினைவில் வைத்துக் கொள்…., கயிறு உன் கையில் இருக்கிறது. பால் கறப்பதும், கறக்க முடியாமல் போவதும், உன் சாமர்த்தியம். உரிமை, சுதந்திரம் என்று சொல்லி, பிள்ளைகளின் மனதில் வேறுபாட்டை விதைத்து விடாதே…. மேகலா  

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 3

மேகலா   : கிருஷ்ணா….   ‘நான், நானாக இருக்க வேண்டும்’ என்றால், என்ன கிருஷ்ணா….? கிருஷ்ணர்  :  ’எனக்குப் பிடித்த வேலையைச் செய்து, பிடித்த ஆடையை அணிந்து, பிடித்ததைச் சாப்பிட்டு, சுதந்திரமாக இருப்பேன்….’  என்பது தானே…. மேகலா  : இப்படி நெனக்கிறவங்க, ரொம்ப conscious ஆக,  யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்; என் மனசு என்ன சொல்லுதோ, அத மட்டும் தான் கேட்பேன்  என்று சொல்றவங்களாத்தானே இருக்காங்க…..  அப்போ, ‘அனுசரணை’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்……  பெரியவங்க சொல்றத கேட்கணும் என்பதற்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது….  ‘நான், நானாக இருப்பேன் என்பவர்கள்…., பிடிவாதம் பிடித்தவங்களாத்தானே இருக்கிறாங்க….  ஏன் கிருஷ்ணா, ஒரு அம்மா, அல்லது அப்பா…. அவங்களுக்கு, அவங்களோட பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், எதிர்காலம் இதிலெல்லாம் அக்கறை இருக்காதா…., அல்லது இருக்கக் கூடாதா…..  பிள்ளைகளின் மீதான அக்கறையை, ஏன் ‘தலையீடு’ என்று சொல்லணும்….. கிருஷ்ணர்  : நீ ஏன், பெற்றவர்களின் அக்கறையை மதிப்பதில்லை என்று பார்க்கிறாய்….?  தங்கள் தனித்தன்மையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நினையேன்.  அப்போ, நானாக வாழணும் என்று சொல்பவர்களின

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 2

மேகலா   : கிருஷ்ணா…… பொண்ணோட பெயர் ‘ஜனனி’. அவளோட மாமா மகள் தான் யோசிக்க வைக்கும் வசனம் பேசினாள். அவளுக்கு ஆரம்பம் முதலே, ஜனனி, அப்பா சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவது பிடிக்காது. ஆனால், கல்யாணம் வரைக்கும், அவளோட அப்பாவே முடிவெடுத்து விடுகிறார். அதனால், at least தனிப்பட்ட முறையில் மாப்பிள்ளையைப் பார்த்து, அவன் ஜனனிக்குப் பொருத்தமாய் இருப்பானா என்று முடிவு செய்யலாம் என்று வற்புறுத்தி, ஜனனியையும் கூட்டிக் கொண்டு, friends-உடன் மதுரை வந்து விடுகிறார்கள். வந்த இடத்தில், மாப்பிள்ளை ரொம்ப plain-ஆக, தான் +2 தான் படித்திருப்பதாகவும், தன் படிப்புக்கு ஏற்றவாறு, ‘குவாரி’ வேலையைக் கவனித்துக் கொள்வதாகவும் சொல்கிறான். ’எந்த வேலையாய் இருந்தால் என்ன, இதுவும் நம்ம வேலைதானே’ என்கிறான்.   அவன் அப்படி வெளிப்படையாகப் பேசியது, அவர்களுக்குப் பிடித்துப் போய் விட, கல்யாணத்திற்கு முழு சம்மதமும் தெரிவிக்கிறார்கள். அதன் பிறகுதான், கல்யாண ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது. கல்யாண வீட்டில் வைத்துத்தான், மாப்பிள்ளை வீட்டாரின் அலப்பறையில், ஜனனியின் மாமா பொண்ணு கேட்கிறாள்,  ‘என்ன ஜனனி இதெல்லாம்…., நீ இதுக்கா படிச்ச…. இப்படி எதுவும

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : என்ன மேகலா….. அடுத்த topic-உடன் உன் கூட பேச வந்திருவேன் என்று சொன்னாயே…. இத்தனை நாள் ஆகிப் போச்சு……; rest எடுக்கிறயோ….. மேகலா  : Rest எடுக்கிறேன் என்பதெல்லாம் ஒரு காரணமா கிருஷ்ணா…. என்ன தலைப்பு எடுக்கலாம் என்று ஒரு தடுமாற்றம்…. மாரியம்மன் கோயில் பூக்குழி ஆரம்பமாகியது….. தூத்துக்குடியில் ஒரு ‘பூச்சூட்டும் விழா’ என்று அடுத்தடுத்து பரபரப்பாய் இருப்பதற்கு காரணம் கிடைத்தது. அதைச் சாக்கு வைத்து, எழுதுவதையும் நிறுத்தி வைத்திருக்கிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! ரொம்ப busy-யோ…. மேகலா  : Busy-யெல்லாம் ஒண்ணுமில்ல கிருஷ்ணா….  என்ன எழுதலாம் என்பதில் ஒரு சின்ன தடுமாற்றம்; அவ்வளவுதான் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அரசியல் பேசலாமே…. மேகலா  : பேசலாம்…., அதை விட,  நான் இப்போ பார்த்துக் கொண்டிருக்கிற சீரியலில் இருந்து ஒரு வசனம் என்னை ரொம்ப யோசிக்க வச்சுது கிருஷ்ணா.  அதனை உன்னிடம் கேட்கட்டுமா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன…., புதுசா பம்முற….. பேசணும்னு வந்துட்டா, பம்முறதெல்லாம் உன்கிட்ட கிடையாதே…., என்ன விஷயம்…., கேளு… மேகலா  : இப்போ புதுசா ஆரம்பிச்ச சீரியல்தான் ‘எதிர்நீச

அழகு - பகுதி 22 (நிறைவுப் பகுதி)

மேகலா   : கிருஷ்ணா…. நான் drawing கத்துக்கிட்டேன். இங்க N. G. O. காலனியில, ‘அன்பு சார்’ கிட்ட water color painting கூட கத்துக்கிட்டேன். இவையெல்லாம் என்னோட interest-க்காக கற்றுக் கொண்டதே தவிர…., நான் பெரிய artist-லாம் கிடையாது. இருந்தாலும், நான் வரைந்த ‘பிள்ளையார்’ pencil sketch அழகாத்தான் வரைந்திருப்பேன். Drawing என்னோட genuine திறமை கிடையாது.   அன்பு சார் இந்த ஊரை விட்டுப் போன பிறகு, நானும், ராமாயணம், மகாபாரதம், கீதை என்று என் திசையை மாற்றிக் கொண்டேன். கிருஷ்ணர்  : அட்டா…. வட போச்சே…. நம்ம friend, exhibition நடத்தற அளவுக்கு collection வச்சிருப்பா…. எத்தனை அழகான திறமையைக் கை வசம் வச்சிருக்கா…. பாராட்டலாம் என்று நினைத்தேன்…. சே…., வட போச்சே…. பெருசா ‘மாயா சித்ராலயா’ student-னு பீலா விட்டயே…. post-ல வரும் எல்லாப் பாடங்களையும் பார்த்திட்டு, சும்மா cupboard-ல போட்டுருவயா…. வரைஞ்சு பாக்க மாட்டயா…. சரி, இதெல்லாம் இருக்கட்டும்…., உனக்குப் பிடித்த அழகான ஓவியங்களைப் பற்றிச் சொல்லு மேகலா…. மேகலா  : கிருஷ்ணா…. எனக்கு drawing-னா ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா…. ஆனந்த விகடன்ல கதைகளுக்கு வரையும் artist