Posts

Showing posts from November, 2021

’வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 2

மேகலா   : எங்கள் வீட்டில் ஒரு முறை பூனை குட்டி போட்டிருந்தது கிருஷ்ணா. மாடிக்குச் செல்லும் ஏணிப்படிக்குக் கீழே ஒரு store room மாதிரி இருக்கும். அதில் ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. அங்கிருந்து மெல்லியதாக ‘முசுமுசு’வென்று சப்தம் கேட்டதும், நான், என் தம்பி எல்லோரும் எட்டிப் பார்த்தோம். பூனை குட்டி போட்டிருந்தது தெரிய வந்தது. பூனை அவஸ்தையோடு படுத்திருந்தது. அதன் வயிற்றை முட்டிக் கொண்டு, கண் முழிக்காத குட்டிப் பூனை சப்தம் தான் ‘முசுமுசு’ன்னு கேட்டுச்சு. நாங்க அந்த குஞ்சுப்பூனையைத் தூக்கலாமா என்று யோசிக்கும் போது, அந்தப் பக்கம் வந்த எங்க ‘ஞானக்கண்’ அண்ணன், ‘ன்னா…., பூனை இன்னும் ஒரு குட்டி போடப் போகுது. அதத் தொந்தரவு பண்ணாதீங்க’ என்றாரா…. நாங்க பயந்து ஓடியே போயிட்டோம். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு, பூனையின் நினைவாகவே இருந்த நான், பூனை எத்தனை குட்டி போட்டிருக்கோ என்ற பரபரப்பில், store room-க்குப் போயி, அட்டைப் பெட்டியின் மூடியை சற்றே விலக்கி எட்டிப் பார்த்தேன். பெரிய பூனை, ஒருசாய்ந்து சற்றே ஆயாசமாகப் படுத்திருந்தது. வெள்ளையும் கருப்புமாக ஒரு குஞ்சு, சாம்பல் கலரில் ஒன்று, மஞ்சள் brown கலரில் ஒன்

’வலிமை’ என்பதா...? 'Strong personality' என்பதா...? - பகுதி 1

கிருஷ்ணர்   : வா…. வா…. மேகலா…. எப்படி இருக்கிற….? மேகலா  : பிள்ளையார் சதுர்த்தியிலிருந்து, busy-யாக இருக்கேன் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : அப்போ…. நல்லாதான் இருக்க…. சரி…, அடுத்து என்ன topic-அ எடுத்திட்டு வந்திருக்க…..? மேகலா  : ‘வலிமை’ என்ற topic-ல பேசலாம் என்று நினைக்கிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன மேகலா…  ‘அடிதடி’ ரகளை…. பயில்வானோட சகவாசம் என்று ஏதாவது ஆரம்பிச்சிட்டயா… ‘வலிமை’ என்ற தலைப்பில் பேசலாம் என்கிறாய்…! மேகலா  : ஒண்ணுமே தெரியாதவர்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்ச குசும்புக்காரன் நீ….  வலிமை என்றால், ஆழம் பார்த்து அம்பு எய்பவன் என்பது தெரியாமலா நீ விளக்கம் கேட்கிறாய்… கிருஷ்ணர்  : Oh!  நீ, ‘strong personality’-யப் பத்தி பேசப் போகிறாயா….  சரி…. பேசலாம்….. நீ என்ன சொல்லப் போகிறாய் என்று நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மேகலா  : கிருஷ்ணா….. ‘வலிமை’ என்ற சொல்லே மந்திரம் மாதிரி எனக்குள்ளே ஒரு strength கூடுது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Strength கூடுதா…… இன்னும் ஒரு முறை உச்சரித்துப் பார்…. உன் பலம் என்னன்னு உனக்கே தெரியும்…. நீ எத்தனை தடைகளைத் தாண்டி ஜெயித்திருக்கிறாய

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 18 (நிறைவுப் பகுதி)

மேகலா   : கிருஷ்ணா….. மக்கள் பூ இறங்குவதும், தீச்சட்டி ஏந்தி வருவதும், கயறு குத்துவதும்….   இது பக்தியில்லை கிருஷ்ணா…, நம்பிக்கை.   நம் அன்னை, நாள்தோறும் உழைக்கும் நமக்கு, நாம் கேட்பதை எல்லாம் கட்டாயம் கொடுப்பாள் என்று ‘தாய் மகள்’ உரிமையோடு நம்புகிற நம்பிக்கை…. சிவன் கோயிலுக்கோ, பெருமாள் கோயிலுக்கோ செல்லும் போது, கோயிலுக்குச் செல்லும் பக்தனின் உணர்வு வரும்….   ஆனால், மாரியாத்தா கோயிலுக்குச் செல்லும் போது மட்டும், சொந்த வீட்டிற்குச் செல்லும் உணர்வு தான் வரும் கிருஷ்ணா.   பங்குனிப் பொங்கல் சமயங்களில், கோயிலுக்கு வரும் மக்கள், குடும்பம் குடும்பமாக அமர்ந்து பழம் சாப்பிடுவதும், தேங்காயை உடைத்து பங்கு போட்டு சாப்பிடுவதும், பார்க்கும் நமக்கு, அங்கிருந்தே வெளியே வர மனசே இருக்காது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : வாஸ்தவம் தான்….  எளிமை இருக்கும் இடங்களில், உரிமையும் இயல்பாக வந்து விடும் போல….  கொடையாக அள்ளித் தந்த அன்னைக்கு, நன்றியறிந்த மனுஷன், எரியும் நெருப்பில் கூட, பூவில் நடப்பது போல நடக்கத்தான் செய்வான். கிராமத்து பக்தி நெசம்மாவே மெய் சிலிர்க்கச் செய்கிறது. மேகலா  : மாரியாத்தா மீது கொண்ட பக்தி இப்பட

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 17

மேகலா   : கிருஷ்ணா…., நீ பேசும் போதே, அடுத்து ‘முளைப்பாரி’யைப் பற்றித்தான் கேட்கப் போகிறாய் என்று நினைத்தேன் கிருஷ்ணா… அப்படியே கேட்டுட்ட. முளைப்பாரி, கிராமத்து எளிய மக்கள் மட்டுமே வளர்ப்பது.   மாரியம்மன் கொடையோடு வீட்டுக்கு வீடு, முளைப்பாரி வளர்ப்பார்கள் கிருஷ்ணா.  இப்போ, நவராத்திரிக்குப் பரவலாக, நிறையப் பேர் கொலு வைப்பதற்காக முளைப்பாரி வளர்க்கிறார்கள் போல…. இது கட்டாயம் இல்லை. கிருஷ்ணர்  : சரி…., முளைப்பாரிக்கு என்னென்ன தானியங்களை முளைக்க வைப்பார்கள் மேகலா? மேகலா  : கிருஷ்ணா… இந்த முளைப்பாரியை கிராம மக்கள் எவ்வளவு சந்தோஷமாகவும், நம்பிக்கையுடனும் வளர்ப்பார்கள் என்று தெரிந்த அளவுக்கு…,  அதனுடைய சடங்கு, சம்பிரதாயம் எதுவுமே எனக்குத் தெரியாது  கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : தெரியாதா…. மேகலா  : Stop…. stop கிருஷ்ணா…. பேசப் போவது யார் கிட்ட… உலகத்துக்கெல்லாம் ஆச்சாரியரிடம்…. நாம் கற்றுக் கொண்டாவது சொல்ல வேண்டாமா என்று எனக்குத் தோணுச்சு…  அதனால், Google-ல் search பண்ணிட்டேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ‘சுத்தம்’….. நீ படித்து தெரிந்து கொண்டுதான் சொல்றயா…. முளைப்பாரி அனுபவம்லாம் கிடையாதா உனக்கு…. சரி, ச