Posts

Showing posts from June, 2023

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 14

மேகலா   : ……. அந்தக் கோயிலின் ஒவ்வொரு சிற்பங்களும், மனிதனின் கற்பனைத் திறத்தின் உச்சம். சிற்பங்களின் முக பாவனைகளும், ஆடை அணிகலன்களும் நுணுக்கமாக செதுக்கப்பட்டு, அந்தச் சிலைகளுக்கே உயிரூட்டுவதாக இருக்கும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஹாய்சாலா மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், அவர்கள் பெயராலேயே இறையனாரும் ‘ஹாய்சாளேஸ்வரர்’ என்ற திருநாமத்தைத் தாங்கியிருக்கும் அற்புதமான கோயில்…  இறைவனின் திருவுருவம் மெய் சிலிர்க்க வைத்தாலும், அதைக் காட்டிலும் சிற்பங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள் சிலிர்க்கச் செய்வதுதான் யதார்த்தமான உண்மை….  தமிழ்நாட்டில், சிற்பங்களின் கலைக்கூடம் என்று எதைச் சொல்லலாம்… மேகலா  : கோயில்கள் நிறைய இருக்கும் ஊர், சிற்பங்களின் கலைக்கூடம் என்று சொல்லலாம் கிருஷ்ணா. அப்படிப் பார்த்தால், பல்லவர்கள், சிற்பக்கலையை தன் உயிர்மூச்சாகக் கருதியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சிற்பக்கலையின் கோயிலாகவே இருந்திருக்கிறது கிருஷ்ணா…. ஏன், ராஜசிம்ம பல்லவரே, சிற்பம் வடிப்பதிலே ஆர்வம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். சாதாரண மனிதர்களுக்கே, ஒரு கலையின் மீது ஈடுபாடு இருந்தால்…, அதை தெய்வப் பணி போலவே நினைத்து

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 13

மேகலா   : உண்மைதான் கிருஷ்ணா… இது (தச்சுத் தொழில்) ஆண்களுக்கான கைத்தொழில் கிருஷ்ணா…. இதுவரைக்கும் நாம் பார்த்து வந்தது, அதாவது, சமையல், tailoring இவையெல்லாம் ஆண் பெண் இருவருக்குமானது.   ஆனால், மர வேலைப்பாடுகள் பெரும்பாலும் ஆண்களுக்கான வேலையாக இருக்கிறது கிருஷ்ணா….  மர வேலைகளில், வீட்டுக்குத் தேவையான நிலை, கதவு, ஜன்னல் மற்றும் இதைச் சார்ந்த பொருட்கள் செய்வது தச்சர்களுக்கு காலம் காலமாக ஆகி வரும் வேலைதான் கிருஷ்ணா… அதில் exclusive ஆக, கதவுகளில் சிற்பம் வடிப்பது, carpenter-ரிலேயே தலைமை ஆசாரிதான் செய்வார் கிருஷ்ணா… இன்னும், sofa-க்களில், teapoy, corner table என்று வேலைப்பாடுகள் நிறைந்த ராஜஸ்தான் மரச் சாமான்கள், exhibition கூட அப்பப்ப நடக்கும் கிருஷ்ணா… நான் அப்படியொரு exhibition-ல் corner stand-ம், telephone stand-ம் வாங்கினேன். தமிழ் நாட்டில், மரச்சிற்பங்கள், கலை நயம் மிக்க மர பீரோ…, யானைதலை teapoy இவையெல்லாம் காரைக்குடியில் கிடைக்கும் கிருஷ்ணா. அந்தக் காலத்து செட்டி நாட்டு மக்கள், தங்கள் வியாபாரத்தை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் செய்து, பெரும் செல்வம் ஈட்டினர். சம்பாதித்த பணத்திற்கு, பர

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 12

மேகலா   : நீரோடும் பகுதியெல்லாம் engineering college, medical college என்று கட்டியதும், இந்த தொழில் காணாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : போனதெல்லாம் போகட்டும்…. எந்த ஒரு வேலையோ (work)…, செயலோ (action), பொதுமக்கள் விழிப்படைந்தால் அதற்கு விமோசனம் கிடைக்கும்…. நாம கைத்தொழிலைப் பற்றிப் பேசுவோம்…. மேகலா  : இந்த மாதிரி சின்னச் சின்ன கைத்தொழில்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் போது தான், ஊரில் இருக்கும் பெண்கள் ஒன்றுபட்டு, கடனுதவி பெற்று, தங்களுக்குள் உதவி செய்து கொண்டு, கிராமம் முழுவதிலும் குடிசைத் தொழில் செய்வது மாதிரி, வத்தல், வடகம் செய்வது, அல்லது கைச்சுத்து முறுக்கு செய்வது என்று, ஏதாவது ஒரு தொழிலை பிரதானமாகக் கொண்டு பாடுபடுகிறார்கள் கிருஷ்ணா….  இதில், சேலத்துக்குப் பக்கத்திலே, ‘ஆட்டையாம்பட்டி’ என்ற கிராமத்தில், வீட்டுக்கு வீடு கைச்சுத்து முறுக்கு செய்து தமிழ்நாடு முழுக்க, ஏன் உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.  அதே மாதிரி, சேலத்தில் ஒரு சந்தையில் ஒரு தெரு முழுக்க ‘ஜிலேபி’ என்ற ‘ஜாங்கிரி’ விற்பனை செய்யப்படுகிறது. ஆயாக்கடை இட்லி மாதிரி, எல்லாக் கடையிலும் ஒரே வி

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 11

கிருஷ்ணர்  : ரங்கோலி…, கோலம்…, நம்ம பாரத நாட்டிற்கு மட்டுமே சொந்தமாகும். அதிலும், குறிப்பாக, பெண்கள் மட்டுமே கொண்டாடும் அற்புதமான கலை…. மேகலா  : கிருஷ்ணா…, இதை நீ இவ்வளவு சிலாகித்துப் பேசும் போதுதான், இதன் தனிப்பட்ட மேன்மை எனக்கும் புரியுது கிருஷ்ணா….. உனக்கு ஒன்று தெரியுமா கிருஷ்ணா…. இன்று கல்யாண வீடுகளிலோ…., மற்ற விழாக்களிலோ, வரவேற்பு இடங்களில், பெரிய பெரிய கோலங்களை, அதில் கைதேர்ந்தவர்களை வைத்து வரைகிறார்கள் கிருஷ்ணா…. மண்டபத்திற்குள் enter பண்ணுவதற்கு முன்பாக, ஒரு 5 நிமிடம் கோலத்தை ரசிக்காமல் செல்ல முடியாது கிருஷ்ணா… பெரும்பாலும், இந்த மாதிரி வண்ணக்கோலங்களில், ‘ராதா கிருஷ்ணர்’, சோலையின் நடுவில் ஆனந்தமாய் நின்று புல்லாங்குழல் வாசிப்பது மாதிரியான கோலம் தான் வரையப்பட்டிருக்கும்.  வெறும் காசுக்காக மட்டுமே கோலம் வரைந்திருந்தால், இவ்வளவு உயிரோட்டமாக இருக்குமா என்று யோசிக்குமளவுக்கு இருக்கும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! கோலம் போடத் தெரியாதவர்கள், திறமையாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்…. எப்படியோ…, நமக்கான தனித்துவமான கலை. பெண்களின் கைகளில் லட்சுமிகரமாய் விளங்க வேண்டும்…. ஆமாம்…., நீ

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 10

கிருஷ்ணர்   : பரவாயில்லை மேகலா… பிள்ளைகள் தங்களுக்கான நேரத்தை, வெட்டியில் பொழுது போக்காமல், தைப்பதும், வரைவதும் என்று இப்போ புள்ளி வைத்துச் செல்கிறார்கள். இது அழகான வண்ணக் கோலமாக வாழ்த்துகிறேன் மேகலா…. ஏன் மேகலா…., தையலுக்கும், அது சார்ந்த மற்ற embroidery என்று பிற வேலைகளுக்கும், தனியார் institute இல்லாமல் கல்லூரியில் course இருக்கிறதா மேகலா…. மேகலா  : Oh! இருக்கு கிருஷ்ணா….. Fashion Technology course…., ஷீத்தல் college படிக்கும் போதே இந்த subject கல்லூரியில் உண்டு கிருஷ்ணா…. ஆனால், அந்த சமயத்தில், Sheethal-க்கு இந்த course-ல் seat கிடைக்கவில்லை…. இந்த course-ல் ஆடை வடிவமைப்பு, designs, interior decoration என்று அழகை வெளிப்படுத்தும் unique management என்று அனைத்தும் கற்றுத் தருகிறார்கள் கிருஷ்ணா… இந்த course படிப்பவர்களுக்கு, பெருசா mathematics knowledge இருக்கணும்கிறது அவசியமில்லை. ஆனால், புதுசா ஏதாவது designs பார்த்தால், உடனே அதை வரைந்து வைத்துக் கொள்ளுமளவுக்கு தெரியணும் என்று இந்த course பற்றின idea-க்களை Google-ல் படித்தேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : கையில் ’model’ இருந்தால், கலைஞர்கள