Posts

Showing posts from November, 2019

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 58

மேகலா : குருக்ஷேத்திரப் போரின் நான்காம் நாள் யுத்தத்தின் போது, பாண்டவர்கள் கை ஓங்கியிருப்பதைக் கண்ட துரியோதனன், பீஷ்மரிடம், ‘எந்த பலத்தினால் அவர்கள் (பாண்டவர்கள்) நம்மை விட மிஞ்சி நிற்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை’ என்று மனம் புழுங்கிக் கேட்டதும், பீஷ்மர், ‘துரியோதனா! கிருஷ்ண பகவானால் காக்கப்பட்டிருக்கிற பாண்டவர்களை வெல்லும் திறமையுடையவர்கள் இப்பூவுலகில் யாரும் கிடையாது. நீ தர்மங்களை அறிந்தவன். உனக்கு ஒரு விவரம் கூறுகிறேன்’ என்று சொல்லி, ‘விச்வோபாக்யானம்’ என்ற மகத்தான சரித்திரத்தைச் சொல்லி, ஸ்ரீ கிருஷ்ணரின் மேன்மையை துரியோதனனுக்கு விளக்கினார். பால பருவத்திலேயே, தன்னைச் சுற்றியிருந்த பிள்ளைகளுக்கு, ‘காளிங்கன்’ என்னும் பாம்பினால் துன்பம் ஏற்படுவதைத் தடுக்க நினைத்து, அந்தக் காளிங்கனை அடக்கி, யாதவ குலத்து மக்களைக் காப்பாற்றியவர். பெரும் மழை பெய்து, கோகுலமே வெள்ளத்தால் காணாமல் போகுமோ என்றிருந்த நிலையில், ஆடுகளையும், ஆநிரைகளையும், தன்னை அண்டிய ‘யது குலத்தையும்’ காத்தருள்வதற்காக, தன் சுண்டு விரலால், ‘கோவர்த்தன மலையையே’ குடையாகப் பிடித்து, ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு நாட்கள் நின்ற நிலைய

கதை கதையாம், காரணமாம் - பகுதி 9

மேகலா : சென்ற பகுதியில் சொன்ன கதையின் தொடர்ச்சியைப் பார்ப்போம்.... மழை வேண்டி யாகம் செய்யும் இடத்திற்கு ஒரு சிறுவன் கொண்டு வந்திருந்த பொருளைப் பார்த்து, பண்டிதர் திருப்தியுடன் சிரித்தார் என்று பார்த்தோம். அது என்ன பொருள் என்று உன்னை guess பண்ணச் சொல்லியிருந்தேனே, கிருஷ்ணா. சரியாக அனுமானித்திருப்பாய் என்று நினைக்கிறேன்..... கிருஷ்ணர் : பாலா..... இல்லையில்லை...... மலர்களா...... No....no..... வஸ்திரமா...... சாம்பிராணி.....? ஆங்..... கண்டுபிடிச்சுட்டேன். மழை பெய்தால், பண்டிதருக்குக் குடை பிடிக்கக் குடை கொண்டு வந்தானா.... பண்டிதர் மீது அத்தனை நம்பிக்கை; இவர் நிச்சயம் மழையைக் கொண்டு வருவார் என்று.... அப்படித்தானே...... மேகலா : Answer-ஐ நான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். பதில் தெரியாமல் முழிப்பவன் போல...., நாடகம் வேறு போட்டாயாக்கும்....! கதை எப்படி, கிருஷ்ணா....? கிருஷ்ணர் : கதை super, மேகலா.... மேகலா : யாகம் செய்தால், மழை வருமா என்று ஊரே வேடிக்கை பார்க்கத் திரண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் மட்டும், ’மழை வந்தால் நனைந்து விடுவோமே’ என்று குடை எடுத்து வந்த அவன் நம்பிக்கை, பண்ட

கதை கதையாம், காரணமாம் - பகுதி 8

மேகலா : சென்ற பகுதியில் ‘முயல்-ஆமை’ கதையைப் பார்த்தோம். தனது நண்பனான முயல் போட்டியில் தோற்றது கண்டு, முயலுக்கு ஆறுதல் கூறிய ஆமைக்கு ஒரு யோசனை வந்தது என்று சென்ற பகுதியின் முடிவில் பார்த்தோம். ‘நண்பா, வருத்தப்படாதே; வேண்டுமானால், நாளையும் இந்தப் போட்டியை நடத்தலாம்’ என்று ஆமை சொன்னது. முயலுக்கு சற்றே தெம்பு வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டது. பரிதாபமாகத் தலையை ஆட்டியது. உடனே, ஆமை, ‘சரி, இன்று ஓடும் இடத்தை நான் தேர்ந்தெடுக்கிறேன். இதோ, இந்தத் தோட்டத்தைச் சுற்றி ஓடி வந்து, அங்கிருக்கும் குளத்தைத் தாண்டி, இங்கே இருக்கும் வேப்ப மரத்தடிக்கு வரணும். சரியா....?’ என்றது. இந்த முறை முயல் தன்னை மிகக் கவனமாகத் தயார்படுத்திக் கொண்டது. மறுநாள், இருவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தனர். போட்டியைப் பார்ப்பதற்கு மற்ற மிருகங்களும் அங்கு வந்து சேர்ந்தன. முயலோ ரொம்ப பரபரப்பாக இருந்தது. ஆமை எப்பவும் போல நிதானமாக இருந்தது. போட்டி ஆரம்பமாகியது. முயல் வென்றே தீருவது என்று வேகமாக ஓடியது. ஆமை நிதானமாக நடந்தது. சுற்றியிருந்தவர்கள், ‘come on hare' என்றும், ‘come on tortoise' என்றும் குரல் கொடுத

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 57

மேகலா : துரியோதனன், யுத்த களத்தில், பீஷ்மரிடம், ‘உங்களிடம் ஒரு தயக்கம் தெரிகிறது. என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றினால், யுத்தத்தை ஊக்கமாக நடத்துங்கள்’ என்று கூறியதும், பீஷ்மர் கோபமுற்று, ‘துரியோதனா! நான் வயது முதிர்ந்தவன். எதிரில் இருக்கும் பாண்டவர்கள், இந்திரனாலும் வெல்ல முடியாதவர்கள். இருந்தாலும், பாண்டவர்களைத் தனியே நின்றே தடுக்கப் போகிறேன்’ என்று கூறியவர், பெரும் பயத்தை உண்டாக்கக் கூடிய கோர யுத்தம் நிகழ்த்தினார். யுத்த களத்தில் ரத்த ஆறு ஓடியது. யானைகளும், குதிரைகளும் தரையில் விழுந்து கிடந்ததால், தேர்கள் நகர முடியவில்லை. பீஷ்மர், ஒரு நெருப்பு வட்டம் போல் திகழ்ந்து, எதிர்த்து வந்தவர்களையெல்லாம் வீழ்த்திக் கொண்டிருந்தார். சுழன்று சுழன்று யுத்தம் புரிந்ததால், யுத்த களமெங்கும் பீஷ்மரே நிற்பது போன்ற ஒரு தோற்றம் உண்டாகி விட்டது. புயல் வேகத்தில் பாண்டவ சைன்யத்தை நாசம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையைக் கண்டு பொறுக்க முடியாத கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, ‘போர்க்களத்தில் எமன் போல பீஷ்மர் காட்சியளிக்கிறார். உன் வீரத்தால், வீரர்கள் அலறி ஓடுவதைத் தடுத்து நிறுத்துவாயாக’ என்றார்

கதை கதையாம், காரணமாம் - பகுதி 7

(அத்திவரதரைப் பார்க்க ஏதாவது ஏற்பாடு செய்யுமாறு நான் கிருஷ்ணரிடம் கேட்டதற்கு, என்னை ‘வடபத்ரசயனரை’ப் பார்க்குமாறு சொல்லியிருந்தார் அல்லவா? அதற்கு நான் ’ஏன்?” என்று கேட்டிருந்தேன். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதிலுடன் இந்தப் பகுதி தொடங்குகிறது) கிருஷ்ணர் : அட போம்மா.... ஏதோ...., 10,000 பேர் வந்து பார்த்தார்கள்; 20,000 பேர் வந்தார்கள் என்றால் கூட, நானும், ‘மேகலாவைப் பார்க்க வைப்போமே’ என்று யோசிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர், week-end என்றால், 2 லட்சம் பேர் தரிசிக்க வருகிறார்கள். அதிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான VIP-க்கள் வேறு. அத்தோடு நில்லாமல், கையில் ‘letter'-ஐக் கொடுத்து, recommendation-ஓடு அனுப்பி வைத்து, வரதரைக் கொஞ்சம் கூட rest எடுக்க விடாமல்....., இதில் உன்னை எப்படி அனுப்புவது என்றுதான் யோசிக்கிறேன். ஒரு நபருக்கு 1,000 ரூபாய்க்கு ticket என்றாலாவது, நீயும் ticket வாங்கிச் சென்று பார்த்து விடலாம். அவனவன், ரூபாய் 25,000-த்திலிருந்து, லட்சங்களைக் கையில் வைத்துக் கொண்டு, ‘வரதரையே விலைக்கு வாங்கி விடலாம்’ என்று முண்டியடித்துக் கொண்டிருக்கிறான். இத்தனையையும் செய்பவன் யார் என்று

கதை கதையாம், காரணமாம் - பகுதி 6

மேகலா : சென்ற வாரப் பகுதியில், சில சினிமாக்களில் வரும் வார்த்தை twist-களைப் பற்றிப் பேசினோம் அல்லவா....? அதில் பல வசனங்கள் ரொம்ப famous ஆகி விடும். இதே மதிரிதான், ‘வயல்ல ஆட்ரா’ என்று நாகேஷ், கையில் அரிவாளோடு கத்துவார். ஆட்டைக் கையில் பிடித்து வரும் சுருளிராஜன், ‘என்ன, நம்மள dance ஆடச் சொல்றாரோ’ என்று ஒரு மாதிரியாக முழித்துக் கொண்டு, ‘ஆடலைன்னா நம்மளை வெட்டிருவாரோ’ என்று வயலில் இறங்கி, ஆடுவார். திரும்பத் திரும்ப, நாகேஷ், ‘வயல்ல ஆட்ரா’ என்று கத்துவார். அதற்குள் ஒரு மாதிரி, ஆடு பயிரை எல்லாம் மேய்ந்து விடும். திரையில் பார்க்கும் போது, நமது மனசு, வேற கவனம் எங்குமில்லாமல் சிரித்து, அலப்பறையைக் கூட்டும். இப்படித்தான் கிருஷ்ணா....., யாராவது வந்து, ‘ஏங்க, இப்படியே போனா, Mount Road வந்துருமா’ என்று கேட்டால், 'Mount Road இங்க வராது; நாமதான் அங்க போகணும்’ என்பார்கள்! கிருஷ்ணர் : மேகலா, நான் ஒன்று சொல்கிறேன் பார். ‘ஏங்க இப்படியே Mount Road போகலாமா?’ ‘இப்படியும் போகலாம்; காரிலும் போகலாம்’.... எப்படி, ஐயாவோட joke? மேகலா : நீ தேறிட்ட கிருஷ்ணா....! இன்னொரு கேள்வி இருக்கு, கிருஷ்ணா.... ‘மத

கதை கதையாம், காரணமாம் - பகுதி 5

மேகலா : கிருஷ்ணா! ‘மாத்தி யோசி’ concept-ல் ஒரு கதையுடன் இந்த வார episode-ஐ ஆரம்பிப்பதாகக் கூறியிருந்தேனல்லவா...! இதோ! ஒரு Project Engineer, தன்னுடைய project work-ஐ முடிப்பதற்காக, தனி இடம் விரும்பினார். அதனால், அந்த ஊர் குளத்துக்கருகில் சென்று அமர்ந்து, தன் laptop-ஐ open பண்ணி வேலை பார்க்கத் தொடங்கினார். மரத்தின் மீது அமர்ந்திருந்த பறவை சப்தம் கேட்டு, அண்ணாந்து பார்க்க நிமிர்ந்த நேரத்தில், கையில் இருந்த laptop, கை தவறி குளத்துக்குள்ளே விழுந்தது. உடனே பதற்றமான அந்த இளைஞன், என்ன செய்வதென்று தெரியாமல், கண் கலங்கி அழுதான். கிருஷ்ணர் : ஏன்....? உடனே குளத்துக்குள் குதித்து, laptop-ஐத் தேடலாமே....! மேகலா : ஐயோ கிருஷ்ணா!அவனுக்கு நீச்சல் தெரியாது. ‘என்னுடையது, advanced technical வசதிகள் நிறைந்த laptop; யாரிடமும் இது மாதிரியான laptop கிடையாதே.... இதை நான் அமெரிக்காவில் வாங்கினேன். இந்த system இன்னும் இந்தியாவிற்கு வரவேயில்லையே’ என்று அழுது புலம்பினான். ‘Oh God! நான் என்ன செய்வேன். நாளைக்குள் இந்த project-ஐ முடித்துத் தருவதாக promise பண்ணியிருக்கேனே; வேற system இதை விட slow-வாக இருக்குமே’

கதை கதையாம், காரணமாம் - பகுதி 4

மேகலா : கிருஷ்ணா! உலகத்தைச் சுற்றி வந்து, அனுபவ அறிவை வெளிப்படுத்திய முருகனும், அம்மையப்பரைச் சுற்றி வந்து, புத்தியின் கூர்மையை வெளிப்படுத்திய பிள்ளையாரும், என் கதையில் நகைச்சுவையாக தங்கள் விளையாடலை எப்படி நடத்துகிறார்கள் பார்.... கிருஷ்ணர் : என்னம்மா! உன் comedy-க்கு பிள்ளையாரையும், முருகனையும் கூட விட வில்லையா...? மேகலா : இல்ல கிருஷ்ணா! கார்த்தி, God கதை சொல்லுங்கன்னு கேட்பான். ‘உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ....’ என்று நான் ஆரம்பித்தவுடன், ‘ஐயாம்மா! stop....stop..... இந்தக் கதை எனக்குத் தெரியும்; வேற கதை சொல்லுங்க’ என்பான். நான் உடனே, ‘இது நீ கேட்ட கதையல்ல, இது வேற’ என்று சொல்லி ஆரம்பிப்பேன். கிருஷ்ணர் : ஓஹோ....... ஏற்கனவே சொல்லியிருந்த கதை என்றால் கூட கேட்பவருக்கு சுவாரஸ்யமாய் இருப்பது மாதிரி, ‘அதாவது புதிய மொந்தையில், பழைய கள்ளு’ என்பது போலச் சொல்லணும்..... அச்சச்சோ.... எனக்கும் interest கூடுதே...., எங்க சொல்லு பார்ப்போம்..... மேகலா : சிவபெருமானுக்கு, Audi car manufacturer தன் புதிய தயாரிப்புக்களில் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறார். அன்னை பராசக்தியோ, ‘நமக்கு

கதை கதையாம், காரணமாம் - பகுதி 3

மேகலா : சென்ற பகுதியில், காகா, பாட்டியிடமிருந்து வடை திருடிய கதை உனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி, தந்திரமாய், புத்திசாலித்தனமாய் குழந்தைகள் வளரச் சொல்லிக் கொடுக்கும் கதைகள் எத்தனையோ இருக்கிறது என்றும் கூறியிருந்தாய் அல்லவா...? எதையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், தன் செயல்களால், சில கருத்துக்களைக் கூறும் ‘முல்லா கதைகளை’ நீ படித்திருக்கிறாயா, கிருஷ்ணா? கிருஷ்ணர் : ஒரு கதையை நீதான் சொல்லேன்..... மேகலா : கிருஷ்ணா! முல்லாவின் பெருமையை அறிந்த அரசர், முல்லாவைக் கூப்பிட்டனுப்பினார். முல்லா சிறந்த அறிவாளி என்றும், தத்துவ ஞானி என்றும் மக்கள் புகழ்ந்தார்கள். அரசர், முல்லாவைச் சோதிக்க விரும்பினார். அரசர், ‘முல்லா, நீர் இப்போது நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். பதில் உண்மையானால், உமக்கு விஷம் கொடுத்துக் கொன்று விடுவேன். பொய்யாகுமானால், உம்மை வாளால் வெட்டிக் கொன்று விடுவேன்’ என்று முல்லாவிடம் கூறினார். அதைக் கேட்ட முல்லா பயந்து விட்டார். எதைச் சொன்னாலும், சாவு நிச்சயம். இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்தார். பின்னர் முல்லா, ‘அரசே, நீங்கள் என்னை வாளால் வெட்டிக் க

கதை கதையாம், காரணமாம் - பகுதி 2

கிருஷ்ணர் : ’ஒரு மனிதன், தன் குடும்பத்திலுள்ள அனைவருக்குமாக உழைப்பானா, இல்லை தனக்கு மட்டும் உழைப்பானா’ என்று நான் கேட்டதற்கு, ”எல்லோருக்குமாகத்தான் உழைப்பான்’ என்று கூறினாய், அல்லவா? சரி! இது மனிதனின் பண்பு.... இது அப்படியே வளர்ந்து கொண்டே இருக்கும். தன்னிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு, உதவி செய்யும் வளர்ச்சி உருவாகும். அது அப்படியே வளர்ந்து, இந்த சமுதாயத்தின் மீது அக்கறையாக வளர வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்தப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். நம்ம party எப்படி....? இன்னும் ஒன்று சொல்கிறேன். மனுஷனுக்கு சமூக நலனில் அக்கறை வரும் போது, தியாக மனப்பான்மையும், சக மனிதர்களின் நம்பிக்கையில் அக்கறையும் கண்டிப்பாக வர வேண்டும். நம்முடைய அனுபவம் பொதுவாக எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விவேகத்தைக் கொடுக்கும் தான். நம்முடைய விருதுகளும், கைதட்டல்களும் நம்மைப் பக்குவப்படுத்தும் தான். உனக்கு ஒரு கதை சொல்கிறேன், கேள். ஒரு ஏகாளி, தன்னுடைய பொதிகளைச் சுமப்பதற்காக ஒரு கழுதை வைத்திருந்தான். அதற்கு நல்ல உணவு கொடுத்து, பொதி சுமக்கப் பழக்கியிருந்தான். முதலில் ஒரு மூட்டையை ஏற்றி வைத்

கதை கதையாம், காரணமாம் - பகுதி 1

மேகலா : கிருஷ்ணா! யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலத் தெரிகிறதே....! யார் வரப் போறாங்க, கிருஷ்ணா.....? கிருஷ்ணர் : நல்ல வேளை.... ‘நான் தான் கிருஷ்ணன்’ என்று என்னை அறிமுகப்படுத்திக்கணுமோ என்று நினைத்தேன்.... யாரும் வரவில்லை. உனக்காகத்தான் நான் காத்திருக்கிறேன். ஒரு வாரமாச்சே..., எங்கடா ஆளைக் காணோமே..... பெரிய tour (அமெரிக்கப் பயணம்) கதையைச் சொல்லி முடிச்சிட்டு, குற்றாலம், கொடைக்கானல் என்று rest எடுக்கப் போனாளோ.... ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி யார்’ என்ற சரித்திர உண்மையை அறிந்தாளோ, இல்லையோ என்று தவித்துக் கிடக்கிறேன். நீ மெதுவாக வந்து யாரை எதிர்பார்க்கிறேன் என்று கேள்வியா கேட்கிறாய்....? மேகலா : எனக்காகத் தவித்துக் கிடக்கிறாயா..... நெசம்மாவா.... நீ இப்படியெல்லாம் என்னிடம் பேசினால்..... நான் அப்படியே ice cream மாதிரி கரைந்து போய் விடுவேன், கிருஷ்ணா! கிருஷ்ணர் : அப்படியெல்லாம் கரைஞ்சு போயிராதம்மா.... எனக்கு அரட்டை அடிக்க, உன்னை விட்டால் வேறு யாருமில்லை.... மேகலா : கிருஷ்ணா, நீ என்னோடு சேர்ந்து கெட்டுப் போய் விட்டாய், கிருஷ்ணா! சரியான ’புரணி’ (gossip) பேசும் ஆ

ஸ்ரீ கிருஷ்ணாரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 56

மேகலா : குருக்ஷேத்திரப் போர் தொடங்க இருக்கிறது. தருமன், பீஷ்மரை வணங்கி விட்டு, துரோணாச்சாரியாரை நோக்கிச் சென்றான். துரோணரை வணங்கிய தருமனை நோக்கி, ‘தர்மபுத்திரா, பெரியவர்களை வணங்கிக் காரியத்தைத் தொடங்க நினைக்கும் உனக்கு, வெற்றி நிச்சயம் கிட்டும். நீ யுத்தத்தைத் தொடங்க நான் அனுமதி அளிக்கிறேன். மனிதன் தெய்வத்திற்கு அடிமைப்பட்டவன். செல்வமோ, யாருக்கும் அடிமைப்படாதது. ஆகையால், கௌரவர்கள் பக்கம் நின்று நான் யுத்தம் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கூறவும், துரோணரை ஜெயிக்கக் கூடிய வழி என்ன என்று தருமன் அவரிடம் கேட்கிறான். அதற்கு, துரோணர், ‘அஸ்திரம் எய்து என்னை வெல்வது என்பது யாராலும் முடியாது. ஆயுதங்களைப் பிரயோகிக்காமல் நான் கீழே போட்டால், அப்போது என்னை ஜெயிக்கலாம். அதுவும் என் நம்பிக்கைக்குரிய ஒருவனிடமிருந்து எனக்குத் துன்பத்தைத் தரும் செய்தியை நான் கேட்டால், அப்பொழுது ஆயுதங்களைத் தொடாமல் தேர்த்தட்டில் அமர்ந்து விடுவேன்’ என்று கூறினார். அடுத்ததாகக் கிருபரிடம் சென்று வணங்கி, அவரை வெல்லும் வழியையும் தருமன் கேட்க, கிருபர், ‘என்னை வீழ்த்துவது இயலாத காரியம்’ என்று கூறினார். அடுத்து, சல்லிய