Posts

Showing posts from December, 2020

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 2

கிருஷ்ணர்   : ஏன், கதவில், சித்திர வேலைப்பாடு உன்னைக் கவர்ந்ததோ….? மேகலா  : ஹை! Correct-ஆய்ச் சொல்லிட்டயே…. ஆனால், ஒரு திருத்தம்… சித்திரம் இல்ல கிருஷ்ணா…, சிற்பம். சிற்ப வேலைப்பாடு மட்டுமில்ல கிருஷ்ணா…, அதன் சுத்தம்…. ‘யப்பா’, ஒரு தூசு இல்லாமல் விளக்கி வைத்த ‘வெங்கலக் குத்து விளக்கு’, தங்கமாய் மின்னுமே, அது மாதிரி,  ‘சொர்க்கத்தின் கதவு’ இதுதானோ என்று சொல்லுமளவுக்கு, சுத்தமான கதவு; கோயிலின் கர்ப்பக்கிரகமே இதுதானோ என்று நம்மை மயக்கும் சிற்ப வேலைப்பாடுகள்.  வாயிலின் இருமருங்கிலும், இடை சிறுத்த தேவ மாந்தர்களின் சிற்பங்கள். அதன் அழகைக் கடந்து செல்ல என்னால் முடியவில்லை…. கிருஷ்ணர்  : எத்தனை photos எடுத்தாய்….? மேகலா  : ராணிமா cross பண்ணிப் போய் விட்டா கிருஷ்ணா. அவளைக் கூப்பிட்டுக் காட்டினேன். அதில் தவழும் கண்ணன் வேறு தவழ்ந்து கொண்டிருந்தாரா….. நிறைய்….ய photos எடுத்தோம். நான் தேவமாந்தர் பெண்ணோடு, ‘selfie’ எடுக்க try பண்ணினேன். எனக்கு ‘ஆங்கிள்’ சரியா கிடைக்கல. ‘ராணிமா’ எடுத்திட்டா. Photos எடுத்த பின்பு, கோயிலுக்குள் நுழைந்தோம் கிருஷ்ணா. நாங்கள் கோயிலுக்குள் நுழைந்ததும்,  பிரகாரத்தின் இடப்புற

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 115

                                    காலத்தின் வலிமை பற்றி வியாசர் மேகலா  : திரௌபதி பேசிய பிறகு, அர்ஜுனன், ‘உலகிலுள்ள மக்களையெல்லாம் காப்பாற்றுவது தண்டனை நீதியே! தண்டனை சாத்திரம் இல்லையென்றால், உலகில் நியாயம் இருக்காது. குற்றங்களுக்குரிய தண்டனையை தீர விசாரித்து அளிக்கும் அரசன் இல்லாவிட்டால், மக்கள் எந்தக் கட்டுப்பாட்டுக்களுக்குள்ளும் அடங்க மாட்டார்கள்.  கல்வி கற்றல், ஒரு வேலையை முழுமையாகச் செய்து முடித்தல் என்பதற்குக் கூட, அரசனின் கண்டிப்பு அவசியம் தேவை. அரசே! முழுமையான சிறப்புப் பெற்ற காரியம் என்று இந்த உலகில் எதுவும் இல்லை. நன்மையும், தீமையும் கலந்ததாகத்தான் எல்லாக் காரியங்களுமே இருக்கின்றன.  பெரியவர்கள் சென்ற பாதையில் செல்வதுதான் நமக்கிருக்கும் வழி.  எனவே, ஆட்சியை நடத்துங்கள். மக்களைக் காப்பாற்றுங்கள். தவறு செய்பவர்களைத் தண்டியுங்கள். யாகங்களை நடத்துங்கள். தானங்களை வழங்குங்கள். பகைவர்களைக் கொல்லுங்கள். ஆயுதமேந்தி ஒருவன் நம்மைத் தாக்க வந்தால், அவனை நாம் தாக்குவதாலோ, கொலை செய்வதாலோ, எந்த விதமான பாவமும் நமக்கு வராது என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன. உமது சந்தேகங்களையும், குழப்பங்களையும்

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 1

  கிருஷ்ணர்   : ஹாய் மேகலா! என்ன, உன்னை இந்தப் பக்கம் ஆளையே காணோமே…. எங்க போன….? கல்யாணம் இரண்டு நாள் தானே நடந்திருக்கும். உனக்கு மட்டும் பத்து நாட்களாகத் தொடர்ந்ததோ… ஒரேயடியாக லீவு எடுத்திட்டயே….. மேகலா  : எனக்கு மட்டும் special விருந்தா…. அப்படியெல்லாம் யாராலும் கொடுக்க முடியுமா கிருஷ்ணா? கல்யாண வீடு function-க்கு முன்னாடியே நான் பிள்ளையார்பட்டி போகணுமென்று decide பண்ணியிருந்தேன் அல்லவா…..  ‘நிவர்’ புயலாலும், ’புரெவி’ புயலாலும் அந்த program, cancel ஆகிப் போச்சுல்ல கிருஷ்ணா….  எனக்கு மனசு சமாதானமே ஆகல கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : வெளியவே போக முடியாம மழையா மேகலா…? மேகலா  : வானிலை அறிக்கை சொன்ன நாளிலெல்லாம் பெருசா மழையில்லை கிருஷ்ணா… ‘கல்யாண வீடு’ முடிந்த பின், மழை ‘round’ கட்டி அடித்தது. Dec 10-ம் தேதி திண்டுக்கல்லில் ஒரு கல்யாண வீடு நடக்க இருந்தது. வேலை, அலுப்பு…. என்று தொடர்ந்து வந்த சலிப்பினால், திண்டுக்கல் கல்யாண வீடு attend பண்ணணும்; அதோட சேர்ந்து பிள்ளையார்பட்டியும் சென்று விட வேண்டும்….  ஒரு நாள் முன்னமேயே கிளம்பிச் சென்று, எங்காவது தங்கியிருந்து…., ஒரு இரண்டு நாட்கள் வேலையிலிருந்து

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 114

                          யுதிஷ்டிரரின் மனக் குழப்பம் (சாந்தி பர்வம்) மேகலா  : இறந்தவர்களுக்கெல்லாம் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த பிறகு, திருதராஷ்டிரன் முதலானோர், நகரத்திற்கு வெளியே, கங்கைக் கரையிலேயே ஒரு மாத காலம் தங்கினார்கள். அந்த சமயத்தில், வியாசர், நாரதர், கண்வர் போன்ற பல மஹரிஷிகளும் அங்கே வந்தார்கள். பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்த தருமபுத்திரருக்கு ஆறுதல் கூறினார்கள். நாரதர், தருமபுத்திரரைப் பார்த்து, ‘தர்மத்தின் வழியில் நின்று, இந்தப் பூமி உன்னால் வெல்லப்பட்டது. பாண்டவனே! நீ மனமகிழ்ச்சியுடன் இருக்கிறாயா, அல்லது உன்னைச் சோகம் பீடித்திருக்கிறதா?’ என்று கேட்டார். அதற்கு தருமபுத்திரர் சொன்னார்,  ‘கிருஷ்ணருடைய கருணையினாலும், பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பலத்தினாலும் இந்தப் பூமி என்னால் வெல்லப்பட்டது.  ஆனால், என் மனதில் துக்கம் தான் மிஞ்சியிருக்கிறது.  பிள்ளைகளையும், உறவினர்களையும் இழந்து நாங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, ஒரு தோல்வியாகவே எனக்குக் காட்சி தருகிறது.  எங்களால் யுத்தத்தில் கொல்லப்பட்ட கர்ணன், எங்களுக்கெல்லாம் மூத்தவன் என்பதை அறிந்து, என் மனம் வேதனையை அனுபவிக்கிறது.

நீங்க..., நல்லவரா..., கெட்டவரா...? - பகுதி 6 (நிறைவு)

  மேகலா   : கிருஷ்ணா…! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன குழப்பம்…? நல்லவங்களைத் தேடுவது உனக்கு அவ்வளவு கஷ்டமாப் போச்சா….? மேகலா  : பிரபலங்களில், நல்லவங்களைத் தேடும் போது, குறைகளை ஒதுக்கி விட்டு, நிறைகளை மட்டும் எடை போடலாம்…  குறைகளை விட, நிறைகளை அதிகம் பார்த்து, நல்லவர்களை அடையாளம் காணலாம். ஆனால், எங்களை மாதிரி சாதாரண மக்களிடையே நல்லவர்களைத் தேடுவதில் தான் குழப்பமே வருகிறது கிருஷ்ணா.  நல்லவர்களை எப்படி அடையாளம் பார்ப்பது கிருஷ்ணா…? கிருஷ்ணர்  : பொறுமையாய் இரு…. பொறுமையான கண்களுடன் பார் மேகலா…..  சில சமயங்களில், நல்லவர்களாக இருப்பவர்கள், பல சமயங்களில் நம் மனதுக்குப் பிடிக்காத மாதிரி நடந்து கொள்வார்கள். பொது இடங்களில், நம் மனதுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்பவர்கள், personal-ஆக நல்ல attitude இல்லாமல் இருக்கலாம்.  இப்படி ஒவ்வொரு விஷயமாக யோசித்துப் பார்க்கும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக நல்லவர்களை அடையாளம் காணலாம் மேகலா. எப்படியிருந்தாலும், குறைகளோ, நிறைகளோ; நம் மனதுக்குப் பிடிக்குது, பிடிக்கவில்லை என்ற கண்ணாடியைக் கழட்டி வைத்து விட்டுப் பார்க்கணும் மேகலா…. மேகலா  :

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 113

மேகலா   : காந்தாரி, ஸ்ரீ கிருஷ்ணரின் வம்சம் அழிய சாபம் கொடுத்தாள் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இவ்வாறு காந்தாரி மிகவும் கோபமுற்றுத் தன்னை சபித்த போது, கிருஷ்ணர் புன்சிரிப்புடன் அதற்குப் பதில் சொன்னார். ‘க்ஷத்திரியப் பெண்மணியே! நீ சொன்னது போல் நிகழ்ச்சிகள் நடந்தேறப் போகின்றன என்று எனக்கும் தெரிந்துதான் இருக்கிறது.  என்னுடைய குலமாகிய விருஷ்ணி குலம் அழியத்தான் போகிறது. அதில் சந்தேகமில்லை. என்னைத் தவிர அந்தக் கூட்டத்தை அழிப்பவன் ஒருவன் இல்லை.  ஆகையால், அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டே அழிவார்கள். கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார், ‘காந்தாரி! சோகத்தில் உன் மனதை ஆழ்த்தி விடாதே.  பெரியவர்களின் வார்த்தைக்குச் சற்றும் மதிப்புத் தராமல் அழிவை விரும்பியே செயல்பட்ட துரியோதனனின் நடத்தையைச் சற்று நினைத்துப் பார். தடுக்காதது உன் குற்றம் அல்லவா?  அப்படிப் பார்த்தால் உன்னுடைய குற்றத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் நாசமடைந்தார்கள் என்றல்லவா ஆகிறது? நீ செய்த அந்தத் தவறை என் மீது போடுவது என்ன நியாயம்? இறந்தவன், தன்னை விட்டு ஓடி விட்டவன், காணாமல் போய் விட்டவன் ஆகியோரை நினைத்து ஒருவன் துக்கமடைந்தால

நீங்க..., நல்லவரா..., கெட்டவரா...? - பகுதி 5

கிருஷ்ணர்   : மேகலா….. ஏதாவது ஒரு கதை சொல்லேன்… மேகலா  : கிருஷ்ணா…., நாம, ‘நல்லவர்கள்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரமாய் ஆராய்ந்து வருகிறோமே…. இப்ப எப்படி….? கிருஷ்ணர்  : உன்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு கதையைச் சொல்லு…. அப்புறம் பார்க்கலாம்…. மேகலா  : கிருஷ்ணா! ஒரு முறை சத்தியலோகத்தில், படைக்கும் கடவுள் பிரம்மா முன்பாக, கூடை கூடையாக ரோஜாப்பூக்களைக் கொண்டு வந்து குவிக்கிறார்கள். பன்னீரும் குடம் குடமாய்க் கொண்டு வரப்படுகிறது. அப்பொழுதுதான் பிழிந்தெடுத்த மலைத் தேனும் கொண்டு வந்து இறக்கி வைக்கிறார்கள். ‘எல்லாம் கொண்டு வரப்பட்டதா’ என்று சரிபார்த்த பிரம்மனும், தான் பிடிக்க வேண்டிய மண்ணையும் எடுத்து வைத்து, மனித உருவம் படைக்க அமர்கிறார். வழக்கமாய் இல்லாமல், இன்று special கவனத்துடன் பிரம்மன், படைக்கும் வேலையைச் செய்கிறாரே என்று எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுக்கு, ‘என்ன, ஏது’ என்று அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.  அதனால், பிரம்ம லோகம் வந்து, பிரம்மன் மண்ணைக் குழைத்து உருவம் செய்வதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிரம்மனும், சரஸ்வதியும் அங்கிருக்க, கவனம் சிதறாமல், தன் வேலையை ஜரூராகச் செய்து

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 112

  காந்தாரி கொடுத்த சாபம் மேகலா  : யுத்த களத்தில் விளைந்த நாசத்தைப் பார்த்து, பெரும் சோகமுற்ற காந்தாரி, கிருஷ்ணரைப் பார்த்துப் பேசினாள். ‘மாதவா! யுத்தத்தில் கணவன்மார்களை இழந்து, தாங்க முடியாத சோகத்தின் காரணமாகத் தலைவிரி கோலமாகக் கதறும் என் மருமகள்களைப் பார்! ஜனார்த்தனா! இந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு, சோகம் என்னும் தீயினால் நான் எரிக்கப்படுகிறேன். ‘கிருஷ்ணா! யுத்த களத்தைப் பார்த்துப் பழக்கமே இல்லாத பெண்கள் கூட்டம், இங்கே, தலையில்லாத உடல்களையும், வெட்டி எறியப்பட்ட தலைகளையும், துண்டு துண்டாகக் கிடக்கும் அங்கங்களையும் கண்டு மயக்கம் அடைவதைப் பார்!  முன் ஜென்மங்களில் என்ன பாவம் செய்து இப்போது இந்தக் காட்சியை நான் காண்கிறேனோ”? இவ்வாறு புலம்பிய காந்தாரி, துரியோதனன் வெட்டப்பட்டு, வாழை மரம் போல் பூமியில் விழுந்து கிடப்பதைப் பார்த்தாள். ‘மகனே’ என்று கதறினாள். பின்பு மீண்டும் கிருஷ்ணரைப் பார்த்து, ‘கிருஷ்ணா! யுத்தம் செய்பவர்களிடையே உயர்ந்தவனும், எல்லா விதமான அஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவனும், அடங்காத கோபம் கொண்டவனுமான என் மகன், வீரப்படுக்கையில் படுத்திருப்பதைப் பார்! எல்லா மன்னர்களுக்கும் தலைம