Posts

Showing posts from December, 2022

வழிப்போக்கர்கள் - பகுதி 10

மேகலா  : பாலைவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஒரு மகா முனிவர் கிருஷ்ணா… பல தவங்களைப் புரிந்தவர்… கிருஷ்ணர்  : ஓ! உத்தங்கரைச் சொல்கிறாயா….. ஆமாம், உத்தங்கர்…., சிறந்த மஹரிஷி… நான் துவாரகை செல்லும் போது, பாலைவனப் பிரதேசத்தில் சுற்றித் திரிந்த உத்தங்கரைச் சந்தித்தேன். மீதிக் கதையை நீ சொல்லு மேகலா…. மேகலா  : கிருஷ்ணா…., கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் பாண்டவர்கள் வென்றனர். அதன் பின்னர், கிருஷ்ணர், துவாரகை சென்றார். செல்லும் வழியில், பாலைவனப் பிரதேசத்தைக் கடக்கும் பொழுது, உத்தங்கர் என்ற மகரிஷியை சந்தித்தார். உத்தங்கர், கிருஷ்ணரைப் பார்த்து, நலம் விசாரித்தார். அஸ்தினாபுரத்திலிருந்து வரும் கிருஷ்ணரிடம், ‘உங்கள் ஆலோசனையால், கௌரவர்களும், பாண்டவர்களும், தங்கள் பகையை மறந்து நட்போடு இருக்கிறார்களா… இரு குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் அரசாட்சி நடத்துகிறார்களா’ என்று கேட்க…, கிருஷ்ணர் நடந்ததைக் கூறினார். குருக்ஷேத்திரத்தில் இரு தரப்புக்கும் பெரிய யுத்தம் நடந்தது…. அதில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்…. பீஷ்மர், துரோணர், துரியோதனன் உட்பட கௌரவர்கள் அனைத்து தரப்பினரும் உயிரிழந்த

வழிப்போக்கர்கள் - பகுதி 9

மேகலா   : கிருஷ்ணா…., நீ கேள்வி கேட்ட பின் தான், பிரமிக்கத்தக்க சம்பவம்…, வியப்பூட்டும் சம்பவம் என்பதெல்லாம் நினைவுக்கு வந்து, என்னை சிலிர்க்க வைக்கிறது கிருஷ்ணா…. திருமங்கையாழ்வார் கதையை நினைத்துப் பார்க்கவும், எழுதி மகிழவும் நீ எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறாய் கிருஷ்ணா.   உன் மனம் கவர்ந்த திருமங்கையாழ்வாரை, கலியனை, அந்தக் கொள்ளைக்காரனை, வழிப்போக்கர்களைக் கதற வைத்த கலியனையே மெய் விதிர்க்கச் செய்த உன் அற்புதமான திருவிளையாடலை…. கிருஷ்ணர்  : Build-up-லாம் போதும்…. கதையச் சொல்லு… மேகலா  : சோழப் பேரரசின் தளபதி கலியன் சிறந்த வீரர். கலியனின் வீரத்தை மெச்சிய சோழ மன்னன், அவரை, திருமங்கை என்னும் சோழ நாட்டின் குறுநிலப் பகுதிக்கு மன்னனாக்கி விடுகிறார். கலியன், குமுதவல்லி என்ற பெண்ணை மணம் செய்ய விரும்பி, குமுதவல்லியின் தந்தையிடம் பெண் கேட்டுச் செல்கிறார். குமுதவல்லியோ, ரங்கநாதரை வழிபடும் அடியவர் ஒருவரையே திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறுகிறார். அந்தப் பெண்ணின் மீது எழுந்த காதலால், கலியன், பெருமாள் மீது பெரும் பக்தி கொண்டு, ஆழ்வாராகவே மாறி விடுகிறார். காதல் மனைவி கேட்டுக் கொண்டதற்கிணங்க, தினந

வழிப்போக்கர்கள் - பகுதி 8

மேகலா   : அந்தக் காலங்களில் எல்லாம், bus travel, train travel பண்ணும் போது bore அடிக்காமல் இருக்க புத்தகம் வாசிச்சிக்கிட்டே போவாங்க… ஆனா…, லேப்டாப்பும் கையோடு போகும் executives-ஐ சாதாரணமாக, train travel-லும், flight travel-லும் பார்க்கலாம் கிருஷ்ணா…. காலையில் சென்னையில் கிளம்பி, மதியம் டெல்லியில் meeting attend பண்ணப் போகும் executives, meeting-க்கான முக்கியமான points-களை travel-லில் தான் குறிப்பு எடுப்பார்கள். அப்படி ஒரு சமயம், தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் அவர்கள், இந்த மாதிரி business meeting attend பண்ணுவதற்காக, வெளிநாடு கிளம்புகிறார். Meeting-க்கான notes-களை எடுக்க வேண்டும். Emigration முடிந்ததும், flight-க்காக wait பண்ணும் நேரத்தில், தன்னுடைய லேப்டாப்பை open பண்ணி வேலை பார்க்கிறார். அப்போ, சில காரணங்களால், அவர் செல்ல வேண்டிய flight, ‘கால தாமதம்’ என்று announcement வருகிறது. லக்ஷ்மி மிட்டலோட assistant-கள் பரபரப்பாகிறார்கள். Meeting time-க்குள் போக வேண்டுமே…., என்று அவரிடம் பம்முகிறார்கள். அவர் ரொம்ப கூலாக….., ‘It’s okay….., எனக்கு points எடுக்க இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது

வழிப்போக்கர்கள் - பகுதி 7

கிருஷ்ணர்   : ஏன் மேகலா…., வழிப்போக்கர்கள், வழிப்பயணத்தில் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தோம். நாட்டையே அபகரிக்கும் வழிப்போக்கர்களையும் பார்த்தோம். இடையில் தடங்கல்கள் ஏற்பட்டால், அதைச் சமாளிக்கும் வழிப்போக்கர்களைப் பார்த்திருக்கிறாயா…. மேகலா  : ஐயோ…, கிருஷ்ணா…., நானே உன்னிடம் சொல்லணும்னு நினச்சேன்…. இன்னைக்குத்தான் அதைச் சொல்லவே வாய்ப்பு கிடைச்சிருக்கு கிருஷ்ணா… கிருஷ்ணர்  : பெருசா என்னவோ சொல்லப் போறயா…. மேகலா  : கிருஷ்ணா….., நான் U. S. A. போயிருந்தேன் இல்லையா. அப்போ, இந்தியா திரும்பும் நேரத்தில், Air India pilots strike நடந்தது…., ஞாபகம் இருக்கா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! அதனால் உன்னுடைய travel-லில் ஏதும் தடங்கலா மேகலா…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா. U. S. A – யிலிருந்து கிளம்புவதற்குக் கூட, substitute pilot போட்டு தான் flight-ஐ எடுத்தார்கள். இடையில் ஜெர்மனியில், Frankfurt-ல் கொஞ்ச நேரம் நிற்க வேண்டும். அங்கு நிற்கும் போது…,  இதோ, இப்போ கிளம்பிரும் என்று காத்திருந்து, காத்திருந்து, காத்திருந்ததுதான் மிச்சமாகிப் போச்சு. வண்டியை எடுக்கும் வழியைக் காணோம்.  காரணம் என்ன என்று கேட்கும் போது….,

வழிப்போக்கர்கள் - பகுதி 6

மேகலா   : இப்பவும் சிலர், உலகம் முழுக்க சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று ஒரு குழுவாகக் கிளம்புவார்கள். அப்படிச் செல்பவர்களின் இலக்கு, ஊர் சுற்றிப் பார்ப்பது மட்டும் தான்….. 1 மாதம், 2 மாதம் வரையிலும் பயணம் செல்பவர்கள், தங்கள் வண்டிகளில் ஒரு சட்டி, பானை, மசாலா என்ற basic சாமான்களை வைத்திருப்பார்கள்.   வழியில் எங்காவது ஆளில்லாத இடங்களில், குளமோ, ஏரியோ தென்பட்டால், வண்டியை நிறுத்தி, குளித்து விட்டு, சமையலும் செய்வார்கள்….  பக்கத்து ஊர்களில் கிடைத்ததை வாங்கி வந்து, சமையல் செய்து, சாப்பிட்டு செல்வதாக சில ஆங்கிலப்படங்களில் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா. அதே மாதிரி, கடல்வழிப் பயணம் செல்பவர்களும், அதாவது மீன் பிடிக்கச் செல்பவர்கள், தாங்கள் செல்லும் படகில் இருந்தபடியே, கடலில் மீன் பிடித்து, குழம்பு வைத்து, சோறு பொங்கி சாப்பிடுவதை social media-வில் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இப்ப நீ….. என்ன சொல்ல வர்ற…. வழிப்போக்கர்களுக்கு, போகிற வழியில்…, சாப்பாட்டுப் பிரச்னையே இல்லை…. அப்படித்தானே….  சாப்பாடு கிடைக்காது என்கிற பட்சத்தில் கூட மனிதர்கள் ஏதாவது செய்து எடுத்துட்டுப் போறாங்க…. இல்லைய