Posts

Showing posts from November, 2022

வழிப்போக்கர்கள் - பகுதி 5

மேகலா   : ‘சுற்றலாம்…., சுவைக்கலாம்’ என்றால் என்னண்ணு சொல்லு….. கிருஷ்ணர்  : ஊர் சுற்றி வந்து, நல்ல சமையல் எங்கு என்று தேடிப் போவார்களா….. மேகலா  : Correct கிருஷ்ணா….  மணப்பாறை முறுக்கு, செட்டிநாடு கைசுத்து முறுக்கு, காஞ்சீபுரம் இட்லி, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவி பால்கோவா  என்று, இவை தயாரிக்கும் இடங்களுக்கே சென்று, ‘மாஸ்’ லெவலில் செய்யும் பலகாரங்களை video எடுத்து, மக்களிடம் சுவைபட காட்டுகிறார்கள். இன்னும் சொல்லப் போனா…., YouTuber சிலர் சென்று, சாப்பிட்டு, certificate கொடுக்கும் hotel-க்கு, அதைப் பார்ப்பவர்கள், தேடிச் சென்று சாப்பிடும் அளவுக்கு, வழிப்போக்கர்களின் சாப்பாட்டு சேவை கை கொடுக்கிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஓ! இதப் பார்றா…. நீ தான் வழிநெடுகிலும், ‘அடையாறு ஆனந்த பவன்’, ‘ஸ்டார் பிரியாணி’ கடைகளெல்லாம் இருக்கும் என்றாயே…., இதெல்லாம் பத்தாதாமா…. மேகலா  : கிருஷ்ணா! என்னதான் பிரபலமான hotel-களில், பசிக்கு உணவு சுவையாக இருந்தாலும், ரோட்டுக்கடை ஆயா சுடும் ஆப்பமும், தக்காளி சட்னியும் எத்தனை சுவையாக இருக்குது என்று யாராவது சாப்பிட்டுப் பார்த்தால்தானே தெரியும். வழிப்போக்கர்கள் இங்கெல்லாம் ச

வழிப்போக்கர்கள் - பகுதி 4

மேகலா   : ஒரு சமயம், பக்கத்து ஊரிலிருந்து, மதுரைக்கு ஒரு வழிப்போக்கன், மனைவி குழந்தையோடு வந்து கொண்டிருந்தான். கால்நடையாகவே வந்ததால், களைப்பும் அலுப்பும் ஒரு சேர, தன் மனைவியிடம், வழியில் செழித்து வளர்ந்திருந்த ஒரு ஆலமரத்தைக் காட்டி, இங்கு தங்கி இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்றான். அவன் மனைவிக்கு களைப்பினில் தாகம் எடுத்தது. வழிப்போக்கனும், அங்கிருந்த குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன் என்றான். அவன் மனைவியும், தன் குழந்தையை, அருகில் இறக்கி வைத்து விட்டு, ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினாள். அப்போது, காற்று அடித்தது. ஆலமரத்து இலைகள் அசைந்தன. அப்போது அதில் சிக்கியிருந்த அம்பு ஒன்று, வழிப்போக்கன் மனைவி மேல் குத்தி, அவள் அங்கேயே இறந்து போனாள். தண்ணீர் கொண்டு வரச் சென்ற வழிப்போக்கன் சப்தம் கேட்டு, திரும்பி வந்து பார்த்தான். அவன் மனைவி, இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாள். திகைத்துப் போன வழிப்போக்கன், அவள் மார்பில் குத்திய அம்பினை எடுத்து, ‘இந்த அநியாயத்தைச் செய்தது யார்?’ என்று கதறினான். அப்போது, ஆலமரத்தின் மறுபக்கத்தில் இருந்த வேடனைப் பார்த்ததும், ‘இப்படி அநியாயமாய் என் மனைவியைக

வழிப்போக்கர்கள் - பகுதி 3

கிருஷ்ணர்   : வழிப்போக்கர்களின் தகவல் பரிமாற்றம், மக்களுக்கு உபயோகமாக இருந்திருக்கிறது என்பது வரலாற்று உண்மை. மேகலா  : கிருஷ்ணா…, உனக்கு ஒன்று தெரியுமா…? நம்முடைய ராமேஸ்வரம் பகுதி, வெப்பமான பகுதிதானே… அந்தக் காலங்களில், இங்கு விவசாயம் என்று சிலாகித்துச் சொல்லும்படி பெருசா எதுவும் கிடையாது அல்லவா…. அந்த சமயங்களில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தினர், ராமேஸ்வரம் வந்திருக்கின்றனர். இந்தப் புண்ணிய ஸ்தலங்களைச் சுற்றி விவசாயம் பெருசாக இல்லாததைப் பார்த்த ஒரு விவசாயி இங்கேயே தங்கி விட்டார். ராமேஸ்வரத்தைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளில் சல்லிசாகக் கிடைத்த ஒரு தரிசு நிலத்தை விலைக்கு வாங்கி, அங்கேயே தங்குவதற்கும் குடிசை அமைத்துக் கொண்டு,  நிலத்தைப் பதப்படுத்தி, பண்படுத்தி, சொட்டு நீர் பாசனம் மூலம், அதை விளைநிலமாக்கி, இயற்கை உரங்களாலேயே, காய்கறி விளைய வைத்து, அந்த நிலத்தை சோலைவனமாக்கி, இன்று அந்த நிலத்தை பெரிய அளவில் விவசாய நிலமாக்கி விட்டார் கிருஷ்ணா….  ஒரு சாதாரண வழிப்போக்கன், தரிசு நிலத்தை, விளைநிலமாக்கி, இந்த புண்ணிய பூமியை சொர்க்க பூமியாக்கிய கதை, இன்று ‘வைரலாகி’, இந்தியா மு

வழிப்போக்கர்கள் - பகுதி 2

மேகலா   : ஆம் கிருஷ்ணா….. ஸ்ரீரங்கத்தில், வைஷ்ணவியாக கோலோச்சிய அன்னையின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, அன்றைய ஜீயர், அன்னையை வேறு இடத்தில் கொண்டு போய் வைக்கச் சொல்ல, மக்கள், திருக்கண்ணபுரத்தில் அன்னையைக் கொண்டு போய் வைக்கின்றனர். வழிப்போக்கர்களால், மாரியம்மனாக வழிபடப்பட்டாள். விஜயநகர மன்னர்கள், சோழ நாட்டுக்குப் படையெடுத்து வந்த சமயம், அன்னையிடம் வேண்டிக் கொண்டார்கள். போரில் வெற்றி பெற்றால், இந்த இடத்தில் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டனர். போரில் வென்ற மன்னர்கள், அன்னைக்கு கோயில் கட்டி, எல்லோரும் வழிபடும்படிச் செய்தார்காள்.   எல்லாச் சமயங்களிலும், பக்தர்களைக் காப்பாற்றுவதால், அந்த அன்னை, மக்களுக்காக சமயபுரத்தாளாக வணங்கப்பட்டாள்….. கிருஷ்ணர்  : வாவ்…. இந்த வழிப்போக்கர்களுக்கும், நம்முடைய கோயில்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கு மேகலா…. மேகலா  : கிருஷ்ணா…., கோயில்களில் பிரம்மாண்டமாக கொலு வீற்றிருக்கும் இறைமூர்த்தங்கள், வழிப்போக்கர்களால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்றாலும்…, நம்ம பிள்ளையார், எல்லா ஊர்களிலும், இந்த வழிப்போக்கர்களை வேடிக்கை பார்ப்பதற்கென்றே, அரச மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கி