Posts

Showing posts from August, 2021

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 7

மேகலா   : கிருஷ்ணா…. நம்ம நாட்டில், இராமாயணமும், மகாபாரதமும் இன்றுவரை மக்களால் மிகவும் மதிக்கப்படும் புராணங்கள். வேதங்களும், புராணங்களும், புலவர்களால் ஓலைச்சுவடியில்தானே எழுதி வைக்கப்பட்டிருந்தது. அச்சு இயந்திரம் இல்லாத காலத்தில், ஓலைச்சுவடிகளை பிரதி எடுக்க முடியாதல்லவா…. மகாபாரதத்தை, வைசம்பாயனார் எடுத்துரைத்தார். ‘சுகர்’ அதைக் கேட்டு வந்து, மற்றுள்ளோருக்கு மகாபாரதத்தைச் சொன்னார் என்று படித்தோமல்லவா…   இது மாதிரி, கதை சொல்வதில் விருப்பமுள்ளவர்கள், மகாபாரதம், இராமாயணம், பாகவதம் என்று கதையை பிறருக்குச் சொல்லிச் சொல்லியே, நாடு முழுவதும் பரவியது.  இப்படிக் கதை சொல்வதிலேயே விருப்பமுள்ளவர்களும் உருவாகி, புராணங்களின் தன்மை மாறாமல் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் இல்லையா…. கிருஷ்ணர்  : ஆமாம்…., கதை சொல்வதில் விருப்பமுள்ளவர்களால் தான், நம்முடைய புராணம் நிலைத்து இருக்கிறது என்பது உண்மைதான். இதெல்லாம், இந்தப் புராணத்தைக் கேட்கப் பிரியப்படுபவர்களுக்கு மட்டும் தானே சொல்ல முடியும்…. மேகலா  : இல்ல கிருஷ்ணா…. ‘சுகர்’ சொல்வது மாதிரியோ….. லவனும், குசனும் பாடியது மாதிரியோ இலக்கியமாகப் பேசினால் தானே மக்கள்

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 6

கிருஷ்ணர்   : சரி…, அந்தக் காலங்களில் பொழுது போக்கு என்று என்ன இருந்திருக்கும்…? மேகலா  : கிருஷ்ணா…. காலையில் இருந்து மாலை வரை, எல்லா வேலைகளுமே மனித உழைப்பால் மட்டுமே செய்து முடிக்கப்படும் வேலைகள். இரவு கிணற்றில் தண்ணீரை வாரி வாரி இறைத்து  (note பண்ண வேண்டிய விஷயம், current, motor இது எதுவுமே பரபரப்பாக புழக்கத்தில் இல்லாத காலம்)  குளித்து, சாப்பிட்டு படுத்தால், காலை சேவல் கூவும் பொழுதுதான், கண்ணு முழிப்பே வரும். இதில் ‘பொழுது போக்க’ என்று தனியாக நேரம் கிடைக்குமா கிருஷ்ணா…. உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா…. வண்டி மாடு கட்டி, சந்தைக்கு வியாபாரத்திற்கு வெளியூருக்குச் செல்பவர்கள், ஊருக்குத் திரும்பும் போது, அலுப்பில் வாண்டியோட்டுபவர்கள் தூங்கி விடுவார்கள்.  வண்டி மாடுகள், சென்ற பாதையை உணர்ந்து தானே திரும்பி வருமாம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : வீடு வந்து சேர்ந்திடுமா….? மேகலா  : அதெல்லாம் கரெக்டா வந்துரும் கிருஷ்ணா… அந்தக் காலங்களில், traffic-லாம் பெருசா கிடையாதுல கிருஷ்ணா…. அதனால, மாடுகளும், அசை போட்டுக் கொண்டே வீடு வந்து சேந்துரும்.  குறட்டை விட்டவரும் பாதுகாப்பா வந்துருவார்…. கிருஷ்ணர்  : சரி

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 5

மேகலா   : கிருஷ்ணா, எங்க பூலாவூரணியில, எங்க அப்பாவோட அக்கா, சிறு பெட்டிக்கடைதான் வைத்திருந்தார்களாம். அங்கு சீனி மிட்டாய், கருப்பட்டி என்று வைத்திருப்பார்களாம். இப்போ கிடைக்கும் தேன்மிட்டாய் கூட இருக்குமா என்று தெரியவில்லை. எல்லோருக்கும் தெரிந்த பொரிகடலையும் இருக்கும் போல…. எங்க அப்பாவுக்கு ஏதாவது சாப்பிடணும்னு தோணுச்சின்னா, வீட்டில் இருக்கும் பருத்தி, வத்தல் என்று ஏதாவது பொருளை எடுத்து வந்து, கடையில் கொடுத்து, தனக்கு வேண்டிய தின்பண்டத்தை வாங்கி சாப்பிடுவாராம். கிருஷ்ணர்  : ஏன் மேகலா, காசு கொடுக்க மாட்டாராமா…. மேகலா  : கிருஷ்ணா….  ’தின்பண்டம் வாங்கப் போகிறேன், காசு கொடுங்கள்’ என்றால் எங்க ஐயாமா காசு கொடுப்பாங்களா கிருஷ்ணா….  மேலும், பணப்புழக்கம் அவ்வளவாக கிடையாதுல கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : பண்டங்கள் இருந்தளவுக்கு பணப்புழக்கம் கம்மிதான். அதான் பண்டமாற்று முறை.  மக்கள் யாரும் பசித்திருக்கவும் இல்லை, சோம்பலாகவும் இல்லை…. ‘எளிய கிராம வாழ்க்கை’… மேகலா  : வியாபாரிகளுக்கும், பொருள் இல்லையே என்ற குறைபாடும் வருவதில்லை. வாங்குபவர்களுக்கும், பொருளுக்குப் பொருள் என்ற ரீதியில், வாங்குவதில் தட்டுப்பாட

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 4

மேகலா   : கிருஷ்ணா! உனக்கு இந்தப் பாட்டு ஞாபகம் இருக்கா… ‘காடு விளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே; காலமிருக்குது பின்னே கிருஷ்ணர்  : ‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்; கையுங்காலுந்தானே மிச்சம்’ – இந்தப் பாட்டா…? மேகலா  : ஆமா கிருஷ்ணா… ‘ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது’ – இந்தப் பாடல் சொல்லிருச்சே – காணி நிலமானாலும், நடவு வேலை, களை பறிப்பது, காய்கறி பறிப்பது, தண்ணீர் இறைப்பது, உரமிடுவது என்று எல்லா வேலைகளையும், குடும்ப உறுப்பினர்களே செய்வார்கள் கிருஷ்ணா… மாட்டைக் குளிப்பாட்டி, தீனி போட்டு, பால் கறந்து, காய்ச்சி, உறை குத்தி தயிராக்கி, கடைந்து, மோராக்கி, வெண்ணெய் எடுத்து…. இந்த வேலைகள் எல்லாம் regular வேலை. ஆடு, மாட்டை மேய்ச்சலுக்கு விடணும், அதன் இருப்பிடத்தை சுத்தப்படுத்தணும்; கோழியெல்லாம் கூட்டுக்குள் வந்ததா, முட்டையிட்டதா, முட்டையை அடைகாக்க வைத்தமா என்றும் சரி பார்க்கணும். நாளும் பொழுதும் ஓடி விடும்…  இதில், சமையலுக்கு என்று எங்கு நேரம் ஒதுக்க…? கிருஷ்ணர்  : தன் வீட்டு வேலைகளைத் தானே செய்தல், ஆடு, மாட