Posts

Showing posts from April, 2023

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 5

மேகலா   : போய் பார்க்கல கிருஷ்ணா…. Food area Tamil channel-ல் பார்த்தேன் கிருஷ்ணா…. அதிலும், பிரியாணிக்கு ஆடு வாங்குவதிலும் கூட, ஒரு ரகசியம் சொல்லுகிறார்.   ஒரே எடை அளவுள்ள ஆடுகள்தான், எல்லா மட்டன் பீஸ்சும் ஒண்ணு போல வேகும் என்கிறார்.  ஒரு கிலோ பிரியாணிக்கு 400 gm வெங்காயம்…. 800 கிலோ பிரியாணிக்கு தேவையான வெங்காயம், அதற்கான தக்காளி, இஞ்சி பூண்டு paste என்று 1 நாள் முன்பே வாங்கி, வெட்டி ready பண்ணிக் கொள்ளணும்… இந்த மாதிரி cut பண்ணுவது, அரைத்து வைப்பது என்பதெல்லாம், ready பண்ணுவது மாதிரியே பிரியாணி பண்ணும் area-வைத் தனியாக select செய்து, இரண்டு வரிசைகளில் அடுப்புக்களை ready பண்ணுகிறார்கள்…. வெங்காயம், மசாலா, chicken piece போட்டு பிரியாணி பண்ணுவதற்கு 8 தேக்சா என்றால், அரிசியை 60% வேக்காடு போடுவதற்கு நான்கு தேக்சா என்ற கணக்கில், வரிசையாக அடுப்பு ready பண்ணி, போர் வீரர்கள் மாதிரி தேக்சாவை நிறுத்தி வைத்து விடுகிறார்கள்…. எப்போ தெரியுமா….?   பிரியாணி செய்யும் நாளுக்கு முந்தைய நாள் மதியம் 3 மணிக்கெல்லாம், தேக்சாக்களெல்லாம் சிப்பாய் மாதிரி அணி வகுத்து நிற்கிறது. அடுப்பில் விறகு கூட வைத்து, லோட

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 4

மேகலா   : Snacks-க்கு மட்டும் தனியா class இருக்கான்னு தெரியல கிருஷ்ணா…. ஆனால், எல்லா chef-ம், எல்லா snacks-ம் channel-ல்ல செய்து காட்டுகிறார்கள். ‘வெங்கடேஷ் பட்’ என்ற chef தன்னோட channel-ல்ல சொன்னது இதுதான் கிருஷ்ணா….   ‘செட்டிநாட்டு உணவான வெள்ளை அப்பம், கந்தரப்பம் என்ற பலகாரத்தைக் கற்பதற்கு, காரைக்குடியில் ஒரு ஆச்சி வீட்டுக்குச் சென்று, தவமாய்த் தவமிருந்து கற்றுக் கொண்டேன்’  என்பதுதான் கிருஷ்ணா… மற்றப்படி, catering course-ல், snacks item சொல்லித் தருகிறார்களா என்பது தெரியவில்லை கிருஷ்ணா…. ஒருவேளை, பெரிய அளவில் செய்பவர்களிடம், குருகுலம் மாதிரி வேலையில் சேர்ந்து முழுவதுமாகக் கற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன் கிருஷ்ணா… ஆனாலும்,   interest இருக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய கைப்பக்குவத்தை நம்பித்தான் செய்கிறார்கள். அது எல்லோருக்கும் பிடிச்சிப்போன பிறகுதான், அதைப் பெரிய அளவில் செய்கிறார்கள்.   எனக்குத் தெரிஞ்ச ஒரு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, பட்டறை மாதிரி போட்டு, தன் கைப்பக்குவத்தால் மட்டுமே, சேவு, மிக்சர், முறுக்கு, மைசூர்பாக், லட்டு என்று செய்து, முழுநேர தொழிலாகவே செய்கிறார்கள் கிரு

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 3

மேகலா   : கிருஷ்ணா…., இந்த snacks செய்து அசத்தும் குடும்பத் தலைவிகள் ஒருபுறம் இருக்க…, இன்று பெண் குழந்தைகள், கல்யாணத்துக்குப் பிறகு தன் profession-ஐ வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று யோசிக்கிறார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படியா…, ஆச்சரியமா இருக்கே….  இந்த வத்தல், வடாம் செய்வதில் youngsters அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களா…. மேகலா  : வத்தல்…., வடகம் செய்வதற்கு எல்லாம்…., கொஞ்சம் experience வந்த பிறகு…., குடும்பத் தலைவியான பிறகு…., ’எல்லாம் என் கைப்பக்குவத்தில்தான் செய்ய வேண்டும்’ என்ற வயசு வரும் போது தான் சிந்திப்பார்கள் கிருஷ்ணா…. நான் சொல்வது, baking சமாச்சாரம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! Correct….., correct….. சந்தியா கூட, B. B. A. முடிச்சிட்டு…., baking unit-ல தான படிச்சாள்…. நான் மறந்தே போனேன் மேகலா…. மேகலா  : கிருஷ்ணா…, traditional சமையலில்…., ‘எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தாங்க…., அம்மா சொல்லிக் கொடுத்தாங்க…. கண்ணளவு…., கையளவு…., குத்துமதிப்பு…., ருசி’ என்பதுதான் பிரதானமான ரகசியமாக இருக்கும்….  ஆனால், baking course படிக்கும் போது, ‘கையளவு’, measurement’ என்று சொல்லப்படும்.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 2

மேகலா   : நிச்சயமாக கிருஷ்ணா…. இன்றைய பெரிய பெரிய branded மசாலா பொடிகள் எல்லாம், முதன் முதலில் வீட்டிலிருக்கும் பெண்கள், சிறு முதலீடுகளில் ஆரம்பித்ததுதான் கிருஷ்ணா… சென்னையில், கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் ஒரு அப்பளக்கடை இருக்கும் கிருஷ்ணா… அந்தக் கடையில் இன்று வித விதமான size-களில், வித விதமான சுவைகளில் அப்பளம், வத்தல், கூழ்வடகம்…., இன்னும் ஊறுகாய், தக்காளித் தொக்கு, வத்தக் குழம்பு என்று பலவிதமான உணவுப்பண்டங்கள் இருக்கின்றன கிருஷ்ணா. இந்தக் கடை உரிமையாளர்கள், ஆரம்பத்தில் சின்ன லெவலில் அப்பளம், வடகம் தயாரித்து விற்கும் தொழில்தான் செய்தார்கள்.   அவர்களுடைய அப்பளம் பொரியும் போதே, அதன் வாசம் நம்மை சாப்பிடத் தூண்டும்…  அந்த சுவைதான், இன்று பெரிய கடை நிறுவி, கைகளால் செய்யும் வத்தல், வடகம், ஊறுகாய் என்று பல உணவுப் பொருட்களும் மக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது கிருஷ்ணா. இவர்களுடைய products தமிழ்நாடு முழுக்க supply-யும் பண்ணப்படுகிறது கிருஷ்ணா. முதலில் அப்பளம் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது…. இன்று இங்கு பல வித instant உணவுப் பொருட்கள் மட்டுமல்ல…., சாம்பார் பொடி, இட்லிப் பொடி, ரசப் பொடிகளு