Posts

Showing posts from May, 2020

நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? பகுதி 6 (நிறைவு)

கிருஷ்ணர் : யாரோ ஒருவர், பாரதப் பிரதமருக்கு, twitter-ல் பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார் என்று சொன்னாயே...., அதுவும் தமிழில்.....! யார் அவர்......? தெரியவில்லையே....! தமிழில் எழுதியிருக்கிறார் என்றால், பிரதமர் கண்டிப்பாகப் படிக்க மாட்டார் என்ற தைரியத்தில் கண்டபடி எழுதியிருக்கிறாரா....? மேகலா : ஆமாம், கிருஷ்ணா! மழைக்குக் கூடப் பள்ளிக்கூடம் ஒதுங்காதவனெல்லாம், தன்னை மேதாவி என்று, தன்னைத் தானே நினைத்துக் கொண்டு, தனக்கு நிகர் இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது என்ற அகம்பாவத்தில், நேரே straight-ஆக பிரதம மந்திரிக்கே, ‘பகிரங்கக் கடிதம்’ ஒன்று எழுதியிருக்கிறான்கள்.... கிருஷ்ணர் : ஏய்.... இரு.... இரு.... நீ யாரைச் சொல்லுகிறாய்? நீ சொல்லும் போது, உன் முகத்தில் தெரியும் கோபம், வார்த்தையில் தெறிக்கும் உஷ்ணம், ‘உலக நாயகனையா’ சொல்லுகிறார்....? மேகலா : ‘உலக நாயகன்’...... ‘உலக்கை நாயகன்’ என்று சொல்லு, கிருஷ்ணா.... அவன் பெயரை விட்டுட்டு, பெருசா படிச்சு வாங்குன பட்டம் மாதிரி, பட்டப் பெயரில் கூப்பிடுகிறாயே... கிருஷ்ணர் : சரி.... சரி...... என்ன ஆச்சு...... ஆளு, பகிரங்கக் கடிதத்தில் விவகாரமாக

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 84

சண்டையும், சமாதானமும் மேகலா : ‘தர்மத்தின் பாதை சூட்சுமம் நிறைந்தது’ என்று கூறிய கிருஷ்ணர், ‘அர்ஜுனா! இதுதான் தர்மம் என்று ஒவ்வொரு சமயத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில் சொல்வது, தர்மசாஸ்திரங்களினாலும் இயலாத காரியம். மனதில் தூய்மையுடன், அறிவைப் பயன்படுத்தித்தான், ஒவ்வொரு நேரத்திலும், எது தர்மம் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்’ - என்று கிருஷ்ணர் கூறிய அறிவுரையைக் கேட்ட அர்ஜுனன், ‘மூவுலகங்களிலும் நீர் அறியாத விஷயம் என்பது எதுவும் கிடையாது. தர்மத்தை முழுமையாக அறிந்தவர் நீரே..... ஆகையால், நீரே எனக்குச் சொல்லும். என்னால் என் சபதத்தை மீற முடியாது. அந்தச் சபதப்படி என் சகோதரனைக் கொன்றால், அதன் பிறகு என்னால் உயிர் வாழவும் முடியாது. என்னுடைய வில்லாகிய காண்டீபத்தை வேறு ஒருவருக்குக் கொடுத்து விடுமாறு கூறியதை என்னால் மன்னிக்கவும் முடியவில்லை. தருமபுத்திரரும் உயிரோடு இருக்க வேண்டும்; என் சபதத்தையும் காப்பாற்றியாக வேண்டும். இதற்கு என்ன வழி என்று நீங்களே சொல்லுங்கள்’ என்று கிருஷ்ணரைக் கேட்டுக் கொண்டான். கிருஷ்ணர் சொன்னார், ‘அர்ஜுனா, தருமபுத்திரன் வேண்டுமென்றே உன்னைக் கோபிக்கவில்லை. உனக்குக்

நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 5

மேகலா : கிருஷ்ணா! இந்தக் காலக் கட்டத்தில் சுகாதாரத் துறை செய்த நல்ல காரியத்தைப் பற்றிக் கேட்டிருந்தாயல்லவா....? இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், மூச்சு விட சிரமப்படுவார்கள். அவர்களது சிகிச்சைக்குத் தரப்படும் ‘ventilator' கருவி மிகுந்த costly-யானது. அதனை 10,000 ரூபாய்க்கு எளிமையாகக் கிடைக்கும்படிச் செய்து, 10 நோயாளிகளுக்கு ஒரு ventilator பொருத்தும்படியான கண்டுபிடிப்புகளும் செய்யப்பட்டிருக்கின்றன. கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் என நினைக்கிறேன். இது உலகத்தோரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. அதிலும், அமெரிக்கா முதலான வளர்ந்த நாடுகள் கூட விழிப்படையாத சமயத்தில், நம் நாட்டில் நோய்த் தொற்று பரவுவதற்கு முன்னமேயே விழித்துக் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பது, இன்னமும் இந்தியர்களாலேயே நம்ப முடியவில்லை, கிருஷ்ணா! அதிலும், வெளிநாடுகளிலிருந்து வெளிவரும் செய்திகள், இந்தியாவின் பாதுகாப்பு விழிப்புணர்ச்சியைப் பாராட்டிப் பாராட்டியே, அவர்களது நாடுகளின் நடவடிக்கைகளை ‘ஒப்பீடு’ செய்து பார்க்கிறார்கள். அதிலும், 8-ம் தேதி, ’அனுமன் ஜெயந்தி’ அன்று, ‘பிரேசில்’ அதிபர், ‘போர் சமயத்தி

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 83

தருமனின் பொறுமையின்மையும், அர்ஜுனனின் கோபமும் மேகலா : கர்ணன் மாண்டான் என்று நினைத்து, அர்ஜுனனைப் போற்றிப் பேசிய தருமன், அர்ஜுனனிடம், ‘கர்ணனை சகித்துக் கொள்ளும் சக்தி எனக்கில்லை. யுத்தத்தில் இந்திரனை நிகர்த்தவன்; உக்கிரத்தில் எமனுக்கு நிகரானவன்; அஸ்திர வித்தையில் பரசுராமருக்கு ஒப்பானவன் என்று எல்லோராலும் போற்றப்படுகிற அந்தக் கர்ணனை நீ எவ்வாறு நாசம் செய்தாய்? அதை எனக்கு விவரித்துச் சொல்’ பொறுமையின்றி தருமன் வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்த பிறகு, அர்ஜுனன், ‘போர்க்களத்தில் நமது சேனை வீரர்கள், கர்ணனின் வீரத்தைக் கண்டு அச்சமடைந்திருக்கிறார்கள். அவர்கள் அச்சத்தைக் கண்டு, உமக்கு ஏதோ ஆபத்து நேரிட்டு விட்டது என்று நான் கவலையுற்றேன். ஆனால், இப்போது நீங்கள் நலமுடன் இருப்பதை இங்கே பார்த்து விட்டேன். மீண்டும் யுத்தத்தில் முனைவேன். இப்போது நடக்கப் போகும் யுத்தத்தில் நான் கர்ணனைக் கொல்வேன்’ என்று சபதம் செய்தான். இப்படி அர்ஜுனன் கூறியவுடன், கர்ணன் இறக்கவில்லை என்பதை அறிந்து, தருமபுத்திரர், அர்ஜுனன் மீது பெரும் கோபம் கொண்டார். ‘அர்ஜுனா! கர்ணனை எதிர்த்துப் போர் புரிய உனக்கு சாமர்த்தியம் கிடையா

நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 4

கிருஷ்ணர் : உரிமையைப் பற்றிப் பேசியவனை வெளுத்துத் தள்ளிட்டாங்கன்னு சொன்னியே; பாரு! மனுஷங்களோட நல்லதுக்காகத்தான் இத்தனை கடுமையான கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும். இது புரியாமல், அறியாமையில் ஆட்டம் போடுகிறவர்களை அடக்குவதற்கு அறிவுரை மட்டும் பத்தாது. ‘அடி உதவுவது போல, அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்’. என்றாலும், உலகெங்கும் கொரோனாவிற்கான பாதுகப்புகளும், நடவடிக்கைகளும் எடுத்திருப்பதில் இந்தியா தான் ‘role model'. பாதிக்கப்பட்டவர்களும், மற்ற நாட்டைக் காட்டிலும் ரொம்பக் குறைவு. அதற்கான மருத்துவ நடவடிக்கைகள், விரைவான செயல்பாடுகள், ஒரே நாளில் மருத்துவ மனை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் அத்தனையும், உலக அரங்கில், இந்தியாவை ஒரு வலிமை மிக்க நாடாகக் காட்டுகிறது. 'Hats off to Indian Government'. மேகலா : கிருஷ்ணா! தமிழ்நாடு அரசாங்கத்திற்கும், ஒரு special வாழ்த்து சொல்லு, கிருஷ்ணா.... கிருஷ்ணர் : Of course! கட்டாயம் சொல்ல வேண்டும், மேகலா! இதை ஒரு ‘போர்’ என்று வைத்துக் கொண்டால், ‘மோடி’ நாட்டின் படைத் தளபதி என்றால், தமிழ்நாடு முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமி ஒரு ‘மகாரதர்’ என்றே கொள்ள

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 82

மேகலா : யுத்தத்தில் பாண்டியன் கொல்லப்பட்டவுடன், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ‘இந்த யுத்தம் சீக்கிரமாகவே முடிக்கத்தக்கது’ என்று கூறினார் என்று சென்ற பகுதியின் கடைசியில் பார்த்தோம். அந்த நேரத்தில், அஸ்வத்தாமா, திருஷ்டத்யும்னனைப் பார்த்து, ‘அநியாயமான முறையில் என் தந்தையைக் கொன்ற உனக்கு, அந்தப் பாவத்திற்கான தண்டனை வழங்கும் நேரம் வந்து விட்டது. வா! என்னை எதிர்த்துப் போர் செய். உன்னை எமனுடைய இல்லத்திற்கு அனுப்புகிறேன்’ என்று கோபத்துடன் கூறினான். அஸ்வத்தாமாவின் யுத்த முனைப்பையும், கோபத்தையும் கண்ட கிருஷ்ணர், அஸ்வத்தாமாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள திருஷ்டத்யும்னனால் முடியாது என்பதை உணர்ந்தார். ’திருஷ்டத்யும்னனைக் கொன்று விடுவது என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டு அவனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் அஸ்வத்தாமாவைப் பார். திருஷ்டத்யும்னனைக் காப்பற்றுவதே இப்போது உன் கடமை’ என்று கூறி, ரதத்தை அஸ்வத்தாமா இருக்கும் இடம் நோக்கிச் செலுத்தினார். அஸ்வத்தாமாவின் மீது அர்ஜுனன் அம்புமழை பொழிந்தான். அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, சகாதேவன், திருஷ்டத்யும்னனைத் தனது ரதத்தில் அழைத்துச் சென்

நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 3

மேகலா : பாரதப் பிரதமர், 21 நாட்கள் ‘ஊரடங்கு உத்தரவு’ பிறப்பித்தார் என்று என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம் அல்லவா? அதை மக்கள் எப்படிக் கழித்தார்கள் என்ற தகவல்களுடன் இந்த வாரப் பகுதியை ஆரம்பிப்போம். கிருஷ்ணர் : ஆமாம் மேகலா! இன்றைய தலைமுறையினருக்கு, ‘ஊரடங்கு உத்தரவு’ என்ற சட்டமே தெரிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா? ‘சும்மா, virus பரவினால், உடல்நலம் பாதிப்படையும்; வெளியே வராதீர்கள்’ என்று சொன்னால், யார் கேட்பார்கள்? மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர், என்ன செய்வார்? சட்டம் போட்டு, மக்களை வெளியே வராதீர்கள் என்று கரிசனத்தோடு சொல்கிறார். சரி, மக்களின் reaction என்ன மேகலா? நான் ஒன்று கேட்க மறந்து விட்டேன். மார்ச் 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவின் போது, மாலை 5 மணிக்கு கை தட்டினாயா....? மேகலா : கிருஷ்ணா! நானும் ஷீத்தல் அப்பாவும், மாலை 4.50-லிருந்து காத்திருந்து, count-down....10...9....8...7....6...5... என்று எண்ணி, 4.59-க்கு வெளியில் வந்து, நான் பூஜை மணியை ஆட்டி, ஒலி எழுப்பினேன். ஷீத்தல் அப்பா கை தட்டினார். கிருஷ்ணர் : மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும், மற்றும் இதற்காக

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 81

மேகலா : பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், பீமனுக்குக் கர்ணனைக் கொல்ல வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது, சல்யன் பீமனிடம், அர்ஜுனன் கர்ணனைக் கொல்வதாகச் சபதம் செய்ததை நினைவு படுத்தியதும், பீமன், கர்ணனைக் கொல்லாமல் விட்டு விட்டான். அதன் பிறகு வீழ்ந்து விட்ட கர்ணனைத் தேரில் சுமந்து கொண்டு சல்யன் அங்கிருந்து நகர்ந்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். மேகலா : கிருஷ்ணா! கர்ணன் திரும்பத் திரும்ப தன்னையே புகழ்ந்து கொள்வதில் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது, இல்லையா கிருஷ்ணா? கிருஷ்ணர் : ஆமாம்......ஆமாம்.... அவன் பெற்ற சாபங்கள், அவனுடைய திறமை மீதான நம்பிக்கையைக் குறைக்கத்தான் செய்கிறது. தன்னுடைய நம்பிக்கை, தன்னை விட்டுப் போகாமல் இருக்கும் வரை, தன்னால், தான் அறிந்த அஸ்திரங்களை இயக்க முடியும் என்பது அவனுடைய கணிப்பு..... மேகலா : சல்யன் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நன்றாகச் செய்கிறான் கிருஷ்ணா......! எனக்கே எரிச்சல் வருகிறது.... கிருஷ்ணர் : சரி....., அடுத்து என்ன, பார்ப்போம்.... பாண்டியனின் பராக்கிரமும் வீழ்ச்சியும் மேகலா : யுத்த களத்து நிகழ்ச்சிகளை, திருதராஷ்ட