தலைமுறை இடைவெளி - பாகம் 1
மேகலா : Hi கிருஷ்ணா…, கிருஷ்ணர் : என்னம்மா…, வந்துட்டியா… இன்னும் கொஞ்ச நாள் லீவ் எடுப்பன்னு நெனச்சேன்… சரி, ஏதாவது கொண்டு வந்திருக்கயா… மேகலா : ஐயோ கிருஷ்ணா… எதுவும் எடுத்து வரலயே… கிருஷ்ணர் : எழுதுவதற்கு தலைப்பு ஏதும் கொண்டு வந்திருக்கயான்னு கேட்டேன்… மேகலா : ஆமாம் கிருஷ்ணா… சமீபத்தில் நிறைய சமயங்களில், நிறைய இடங்களில், ‘தலைமுறை இடைவெளி’ என்பது அப்பட்டமாகத் தெரிவதாகத் தோன்றியது கிருஷ்ணா… இதை ஏன் நாம் கிருஷ்ணரிடம் விளக்கம் கேட்கக் கூடாது என்று யோசித்தேன்… அதைத்தான் தலைப்பாகக் கொண்டு வந்துள்ளேன் கிருஷ்ணா… கிருஷ்ணர் : நல்ல தலைப்பாக இருக்கிறது மேகலா… துவாபர யுகத்தில் வாழ்ந்த நாங்கள், கலியுகம் ஆரம்பமாவதை உணர்ந்தோம்… மக்களுக்கு தர்ம சிந்தனை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது… தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை என்பது போய், நல்லவனுக்கும் தீயவனுக்கும் சண்டை என்பது போய், பங்காளிகளுக்குள், அண்ணன் தம்பிகளுக்குள் சண்டையிடுவதைப் பார்க்க முடிந்தது… பரம்பொருளை நேரில் சந்தித்துப் பேசியது ஒரு காலம்… பரம்பொருளே நேரில் வந்து விஸ்வரூபம் காட்டினாலும்…, இது மாயை என்று சொல்லியது கலிகாலம்… நாத்திகம் பேசுவத...