Posts

Showing posts from September, 2023

வாழ்க்கையில் ஒருமுறையாவது... --- பகுதி 12

மேகலா   : Driver, மேலே ஏறும் போதே சொல்லி இருந்தார்… ’சில views நின்று ரசிக்கலாம்’ என்று…   சில இடங்களில் கங்கையையும், இமயமலையையும் பார்ப்பதற்கு தெய்வீகத்தன்மை உடையதாகவும், அழகாலேயே நம்மை பரவசப்படுத்துவதாயும் இருக்கும் என்றும் நாங்கள் பார்த்தோம் கிருஷ்ணா…  அதன்படிக்கு, மேலே ஏறும் போதே, ஒரு பாலத்தில் நின்று கங்கையின் ஆர்ப்பரிப்பான அழகைப் பார்த்து விட்டோம். ’இன்னும் ஒரு இடம் இருக்கிறது… அங்கு சென்றால்…, அந்த இடத்தை விட்டு அகல உங்களுக்கு மனமிருக்காது’ என்று driver சொன்னார்.   எனக்கு, மொத்த ‘ரிஷிகேஷுமே’ பேரின்ப வாசலாக இருந்தது…  இருந்தாலும், வரும் வழியை ரசித்துக் கொண்டும், driver சொன்ன மாதிரியான இடத்தையும் தேடிக் கொண்டே வந்தோம்…. ஒரு வளைவைக் கடக்கும் போது, மலைகளின் ‘இடுக்கு’ ஒன்றிலிருந்து நீர் ஒழுகி, அருவியாகக் கொட்டியது. கொட்டும் இடத்தில், சிறு குளமாக நீர் பரவி இருந்தது. அதிலிருந்து ஒரு ஓடையும், சன்னமான சலசலப்போடு ஓடியது. பாதையின் இடப்பக்கத்தில் ஒரு சரிவு… அப்படியே இறங்கி, அந்த அருவி பாயும் இடத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் ஒருமித்த குரலில், ‘ஹேய், நிப்பாட்டுங்க’ – என்றதும், driver-ம் ஏ

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 11

மேகலா   : …. இங்கு நாம் குனிந்து பார்க்கும்படிக்கு லிங்கமூர்த்தம் அமைந்திருக்கிறது. அவருக்கு மக்கள் கொண்டு செல்லும் கங்காதீர்த்தத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். எல்லோரும் உணர்ச்சிப் பெருக்கால், ‘ஹரஹர மஹாதேவ்’ என்று முழங்குகிறார்கள்… அந்த சமயத்தில்தான் நம் மெய்யும், மனமும் ஒரு சேர ஒரு அதிர்வலையை வெளிப்படுத்துகிறது.   என் கையில், கங்கையின் புனித நீர் இல்லை…, என் கண்களில் நீர் வழிந்தது. இறையனாரைத் தொட்டு விட நினைத்தேன்… தொட்டு விட்டேனா…, தெரியவில்லை…. மெய் சிலிர்த்துப் போனேன் கிருஷ்ணா….   யாரும் என்னை விரட்டவில்லை. மக்கள், தங்கள் பிரார்த்தனையை இறையனாரிடம் சேர்ப்பித்து மெள்ள நடந்து சென்றார்கள்… என் கண்கள், என்னை மறந்த நிலையில், மக்கள் குளிப்பாட்டிய நீரில் மூழ்கிய எம்பெருமானை, திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்று அடம் பிடித்தது. என்னோட குழு என்னை விட்டு விலகிச் சென்ற பின் தான் என் கால்களும் பின் தொடர்ந்தது… வெளியேறியதும், இடப்புறத்தில் அமர்ந்திருந்த அன்னையைப் பார்த்து வணங்கி வந்தோம்… கோயில் தரிசனம் முடிந்ததோ என்று நினைத்து, ராணிமாவும், மதனாவும் ஓரிடத்தில் உட்கார, ஹரியும், கார்த

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 10

மேகலா   : ….. அன்றைய தின நிகழ்ச்சிகளை நினைத்து நினைத்து தூக்கமே வரவில்லை கிருஷ்ணா… கிருஷ்ணர்  : அது அப்படித்தான் மேகலா….. நினைத்தே பார்க்காத புண்ணியபூமிக்கு வந்திருக்கிறாயல்லவா.  கண்களில் பார்த்த காட்சிகள் தான் நிழலாடுமே தவிர…, தூக்கம் வர கொஞ்சம் யோசிக்கத்தான் செய்யும்…  சரி…, அடுத்த நாள் எங்கு சென்றீர்கள்…. மேகலா  : ரிஷிகேஷில், இமயமலையில் உள்ள ‘நீல்கண்ட் மகாதேவ்’ கோயில் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : வாவ்! இமயமலையின் வளைவுகளில் வசிஷ்டர் சுற்றித் திரிந்த இடங்களில், விசுவாமித்திரர் போன்ற மஹரிஷிகள் யாகம் செய்து, தவம் செய்த பிரதேசங்களில் செல்லுகிறாய்.  இமயமலையின் பிரதேசங்களில் கால் வைப்பதற்கே பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்…  ஆமாம்…, நீங்கள் ரிஷிகேஷை நன்கு அறிந்தவரை உங்களோடு கூட்டிச் செல்லவில்லையே… இந்தக் கோயில் இருக்கும் இடத்தை, ‘Google map’-ல் பார்த்தீர்களோ…. மேகலா  : அது எனக்குத் தெரியல கிருஷ்ணா…. ஆனால் ஹரி, நாங்கள் புனிதப் பயணம் செல்லத் தயாரானவுடன், அங்கு சென்று வந்த என் அண்ணன் மகன் பாலாஜிக்கு phone பண்ணி, எங்கெங்கு செல்லலாம் என்று கேட்டிருக்கிறான். அவன் குறிப்பிட்டுச் சொன்னதுதான் இந்

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 9

மேகலா   : அப்போ, ஹரியிடமிருந்து phone வந்தது…. ‘நான் எதிர் திசையில் நிற்கிறேன்; கையை அசைக்கிறேன், பாருங்கள்’ என்றான்… பார்த்தேன்… எதிர் திசையில் ஒரு மணிக்கூண்டு இருந்தது….  அருகில், கையை அசைத்து, காவி வேஷ்டியில் ஹரி தெரிந்தான்…  ‘அம்மா, நீங்கள் நிற்கும் திசையில் சற்று தள்ளிதான் ‘ஆர்த்தி’ காட்டுவார்கள்… உங்களுக்குச் சரியாகத் தெரியாது; நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விடுங்கள், நன்றாக ஆர்த்தியைப் பார்க்கலாம்’ என்றான்… நாங்களும் எழுந்து, ஒரு டீ குடித்து விட்டு, ஹரி இருக்குமிடத்திற்கு செல்லலாம் என்று, ‘டீக்கடைக்கு’ சென்றோம். அங்கே, சுடச் சுட ‘ஜிலேபி’ சுட்டுக் கொண்டிருந்தார்கள். மொறு மொறுவென்றிருந்த ஜிலேபியை ருசித்து விட்டு, ’டீ’யைக் குடித்தோம்… அதன் பின், ஒரு பாலத்தைக் கடந்து, ஹரி இருக்கும் இடத்தை அடைந்தோம். பாலத்தில் நின்று பார்த்தால் கூட, நன்றாக ஆர்த்தியைப் பார்த்திருக்கலாம். ஆனால், வானம் நன்றாக இருண்ட பின் தான், ஆர்த்திக்கான ஆரம்பமே நடைபெறும் போல… இன்னும் எவ்வளவு நேரமாகுமோ…, அது வரையில் பாலத்தின் மீது ‘சும்மா’ நிற்க முடியாது… நேரமும் 5 மணிதான் ஆகியிருந்தது. மணிக்கூண்டு தாண்டி ஹரியைப்