Posts

Showing posts from February, 2022

அழகு - பகுதி 9

கிருஷ்ணர்   : சில இடங்களில், கட்டுப்பாடாய் இருப்பதுதான் அழகு மேகலா….. School, hospital, கோயில்…, இது தவிர இன்னும் ஒரு இடம் இருக்கிறது. ‘ராணுவம்’…. Military campus-க்குள் நுழைந்து பார்த்தால் தான் தெரியும்…   ‘கட்டுப்பாடு’ என்பது, ஒரு ஒழுங்கு… அது, எவ்வளவு அழகானது….   இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் தான், ராணுவத்தில் சேருவார்கள்.   ஒட்ட வெட்டிய hair style… முறுக்கி விடப்பட்ட மீசை மட்டுமல்ல…,   சூரியன் உதிக்கும் முன்னயே எழுவது…., பயிற்சி எடுப்பது…., சீருடை அணிந்து, march past பண்ணுவது என்று…, தேசத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் அழகு இது…. மேகலா  : கட்டுப்பாடு என்பது, ஒரு ஒழுங்கு… ‘ஒழுங்கு’ என்பது தெளிவான அழகு என்று நீ சொல்லும் போதே, ராணுவத்தின் அழகு கம்பீரமாகத் தெரியுது கிருஷ்ணா…. இன்னும் ஒரு அழகு…. எனக்கு ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா….. பறவைகள் வானத்தில் பறக்கும் போது…, நீ பார்த்திருக்கிறாயா கிருஷ்ணா….  ஒற்றைப் பறவையாய் பறப்பதில்லை. ஒரு கூட்டமாய் பறக்கும் போது, ஆகாய விமானம் பறப்பது போல இருக்கும்.  ஒரு பறவை கூட, இப்படி அப்படி நகர்ந்து பறப்பதில்லை. ஒற்றுமையாய்தான் பறக்கும்

அழகு - பகுதி 8

மேகலா   : எண்ணெய் தடவிய கூந்தலை இழுத்து உச்சியில் கட்டிய கொண்டையும், வெறுமனே மஞ்சள் மட்டும் பூசிய கருத்த முகமும்…, பின் கொசுவம் வைத்து கணுக்கால் தெரிய கட்டிய சேலையும், முன் பக்கத்தில், ‘கட்’ இல்லாத வெள்ளைக் கலர் blouse…, எடுப்பாகத் தெரியும் முன் பல்லும்…., இப்படியெல்லாம் வர்ணிக்கக் கூடிய கொல்லங்குடிக் கருப்பாயியை, அழகாக, மிக அழகாக வானத்து நிலாவாகக் காட்டியது எது கிருஷ்ணா….   ‘குயில்’ மாதிரி யாரிடமும் முறைப்படி கற்றுக் கொள்ளாமல், தானாகப் பாடும் அந்தப் பாட்டுத் திறன் தானே…. ‘சீவிச் சிங்காரிச்சி சிவகெங்கைக்கு நாங்களெல்லாம் தேரோட்டம் பாக்கப் போறோம் வாரீயா…. மச்சான் செவலக்காளை வண்டி பூட்டித் தாரீயா’ ‘ஆத்தோரம் தோப்புக்குள்ள காத்திருக்கேன் என்று சொல்லிச் சொல்லி நேத்து வரை ஏன் வரல கண்ணம்மா’ – இந்தப் பாட்டைக் கேட்டாயா கிருஷ்ணா…..  இதில் எந்த வார்த்தையாவது இலக்கியத் தரம் வாய்ந்ததா…., இல்லை. ஆனால், ஒரு அழகான காதலை அற்புதமாகச் சொல்லும் ஒரு சிறு ‘டயலாக்’.  அதை சாதாரணமாக, ஆனால் ‘ரிதமோடு’ பாடி விட்டார்…., இந்த அசாதாரணமான பெண்.  இந்தப் பாடலை விட, அதில் தெரியும் கிராமத்துக் காதல் எவ்வளவு அழகு…. அதை விட

அழகு - பகுதி 7

மேகலா   : ஆமாம் கிருஷ்ணா… காலை breakfast time. அதற்காக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு அம்மா சின்ன முனகலாய் சப்தம் கேட்டு சுற்று முற்றும் பார்த்தார்கள். எங்கிருந்து சப்தம் வருகிறது என்று புரியவில்லை. தன் மகளைக் கூப்பிட்டு, ‘உனக்கு ஏதாவது சப்தம் கேட்கிறதா’ என்று கேட்க, அவளும், ‘ஆமாம்மா, எனக்கும் கேட்குது’ என்று சொல்ல, இருவரும் தேட ஆரம்பித்தார்கள். ‘சப்தம்’ வீட்டுக்கு வெளியிலிருந்து வந்த மாதிரி கேட்டதால், ‘இங்கிருந்து என்ன சப்தம்’, ஏதோ நாய், குட்டி போட்டு முனகுவது மாதிரி கேட்குதே’ என்று சுற்றிச் சுற்றி பார்க்க, கண்களில் எதுவும் தட்டுப்படவில்லை. மகள், ‘போம்மா உனக்கு வேற வேலையில்லை’ என்று அலுத்துக் கொண்டே உள்ளே போய் விட்டாள். அம்மாக்கு மனசு கேட்காமல், வீட்டின் முன்னால், கழிவு நீர் ஓடும் குழாயில் இருந்து சப்தம் அதிகமாகக் கேட்க, அந்த concealed வாய்க்காலுக்குள் பார்ப்பதற்காக, கீழே குனிந்து பார்த்தாள். கைக்கு எட்டாத தொலைவில் ஏதோ அசைவது மாதிரி தெரிகிறது. நன்றாகப் படுத்துக் கொண்டு உற்றுப் பார்க்கிறாள்.   இவளுடைய வினோதமான செயலை, அருகில் இருப்பவர் video படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்.   உற்றுப் ப

அழகு - பகுதி 6

மேகலா   : வீர தீரச் செயல்கள் புரிபவர்கள் கூட, நமக்கு ஹீரோ மாதிரியும், உலகத்திற்கே அழகு அவர்களிடமிருந்து தான் supply ஆவது மாதிரியும் தான் தெரியுது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : எப்படிச் சொல்லுற…. மேகலா  : கிருஷ்ணா…. இந்தியாவின் தங்க மகள் என்று மக்களால் பெருமையாகப் பேசப்படும் பி.டி.உஷா…, ground-ல் ஓடி வந்து, வெற்றிக் கோடைத் தாண்டி வந்து, தரையில் அமர்ந்து, ‘புஸ் புஸ்ஸுனு’ மூச்சு வாங்கும் போது…,  அவர் முகத்தில் வழியும் வியர்வை கூட, தாமரைப் பூவில் வழியும் தண்ணீரைப் போல அழகாய்த் தெரியும் கிருஷ்ணா. பொதிகை channel-ல் இந்தியாவின் நதிகளையும், மலைகளையும், அழகான விளைநிலப் பிரதேசங்களையும் வரிசைப்படுத்தி, தேசத்திற்கே பெருமை சேர்த்த பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் என்று ஒவ்வொருவராக, தேசபக்தி பாடலின் பின்னணியில் ஒரு clipping காண்பிப்பார்கள். அதில் மான் கூட்டம் ஓடி வரும்; அவைகளுக்கு நடுவில் பி.டி.உஷாவும் தன் நீண்ட கால்களைத் தரையில் பதித்து ஓடி வருவார். நீண்ட அவருடைய கால்களில் தெரியும் அழகில், மொத்த இந்தியாவும் தலை நிமிரும் கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : அடேயப்பா…. எத்தனை பெருமையாய் சொல்லுகிறாய்…. இந்தியாவில், பொதுவ