Posts

Showing posts from July, 2023

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 3

கிருஷ்ணர்   : நீ பேசப் பேச…., இதோ இப்பவே கிளம்பி ரிஷிகேஷ் போகலாமா என்று தோணுகிறது…. உன்னோட சிலிர்ப்பு எனக்குள் தொற்றிக் கொண்டது மேகலா…. சரி, அடுத்து எங்க போனீங்க…. ‘லக்ஷ்மண் ஜூலா’வா….. மேகலா  : கிருஷ்ணா…, லக்ஷ்மண் ஜூலா…. ரொம்ப….. தூரத்தில் இருக்கு….. அதற்கு முன் ராதாகிருஷ்ணர் கோயில் வருகிறது…, அங்கு சென்றோம். ராதையும், கிருஷ்ணரும், கங்கையின் மென்மையான சலசலப்பு சப்தத்தில் புல்லாங்குழல் இசைத்து தன்னை மறந்திருந்தனர். நம்ம ஊர் பக்கமெல்லாம், கோயிலுக்குள் camera-வைப் பிடுங்கி வச்சிருவாங்க… அங்கு அப்படியில்லை கிருஷ்ணா….  Photo எடுத்துக்கோங்க என்று ‘கைடு’ சொல்கிறார்…. கிருஷ்ணருடன் தோள் மேல கைதான் போடவில்லை… எல்லோரும் வளச்சி வளச்சி photo எடுத்தோம்….  அங்கிருந்து கிளம்பி, கடைவீதிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம்… கிருஷ்ணர்  : ஆமாம்…., பாதையெல்லாம் படிகளாக கொஞ்சம் குறுகலாகவும் இருக்குதே… நீ எப்படி நடந்து வந்தாய்…. இங்கு தேரோடும் வீதியில் கூட, சூப்பர் மார்க்கெட்டுக்கு ‘auto‘- ல போகும் party ஆச்சே நீ…. மேகலா  : கிருஷ்ணா…., நானெல்லாம் என் வாழ்க்கையில் இமயமலையைப் பார்ப்பேனா… ரிஷிகேஷ் செல்வேனா…,

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 2

மேகலா   : பரபரப்பான எங்கள் விமானப் பயணம், மேகங்களை விலக்கிக் கொண்டு பறந்தது. விமானி, எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்து, ‘டேராடூனை நோக்கிச் செல்லும் இந்த விமானம், ஹைதராபாத், போபாலைக் கடந்து, சரியாக 4.30 மணிக்கு டேராடூனைச் சென்றடையும்’ என்று சொன்ன சிறிது நேரத்தில், ஒரு சின்ன கோடு மாதிரி கங்கை நதி தெரிய ஆரம்பித்தது.   கார்த்தி, ‘கிரீச்’ என்று குரல் கொடுத்து, ‘கங்கை தெரிகிறது’ என்று சொல்லி, photo எடுக்க ஆரம்பித்தான்.   சற்று நேரத்தில், வீடுகளின் மேற்கூரை, கட்டம் கட்டமாகத் தெரிய ஆரம்பித்தது. விமானம் இன்னும் தாழப் பறந்து விமான நிலையத்தை வந்தடைந்தது. தடதடவென ஓடி, மூச்சிரைக்க நின்றவுடன், இடுப்பில் கட்டிய belt-ஐ அவிழ்த்து, டேராடூன் விமான நிலையத்தில் இறங்கினோம். மதுரை விமான நிலையம் அளவே இருந்த விமான நிலையத்தில், எங்கள் luggage-ஐ எடுக்கும் நேரத்தில், ஹரி, எங்களுக்கான ‘cab’ driver-க்கு phone பண்ணினான். அவர் காத்திருப்பதாகச் சொல்லவும், luggage-ஐ ட்ராலியில் ஏற்றி, விமான நிலையத்தின் வெளியில் வந்தோம்.   நான் என்னை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : ஏன்….? மேகலா  : ’இதெல்லாம் ந

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா! நான் எங்க போய் வந்திருக்கிறேன்னு சொல்லு பார்க்கலாம்…. கிருஷ்ணர்  : ஆமாம்…., அதானே…., ரொம்ப நாளாச்சு உன்னப் பார்த்து…. எங்க போயிருந்தாய்…? வாயெல்லாம் பல்லாக இருக்கே… கொஞ்சம் இரு… ஏய்…, நீ…, ஹரித்துவார், ரிஷிகேஷ் போகணும்னு அலப்பறை பண்ணிக்கிட்டு இருந்தயோ… போயிட்டு வந்திட்டயா…. நான் எப்படி மறந்து போனேன்…. மேகலா  : நீ எங்க கிருஷ்ணா…, மறந்து போன…, அதான் என் கூடவே வந்தாயே…  என் பலமாக…, உற்சாகமாக…., என் மன தைரியமாக…., கங்கையின் நெடும் பயணத்தின் சுகமாக…., இளம் காற்றாக…., இமயமலையின் நிமிர்ந்த தோற்றமாக,  என்னுடனேயே பயணித்ததை நான் அறியவில்லை என்று நினைத்தாயா….. கிருஷ்ணர்  : நீ இப்படிப் பேசுவதைக் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது மேகலா… உன் trip-ஐப் பற்றிச் சொல்லு மேகலா…. ஹரித்துவாரை நீ எப்படி ரசித்தாய்…? கங்கையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதா…. நீ அதில் முங்கினாயா…. இமயமலையை ரசித்தாயா…  இமயமலையையும், கங்கையையும் கதைகளில் சொல்லும் போதே சிலிர்த்துப் போவாயே…. நேரில் பார்க்கும் போது, உன் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் அறிய முடிகிறது…  இருந்தாலும், நீயே சொல்லு…. மேகலா  :

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 15 (நிறைவுப் பகுதி)

மேகலா   : கிருஷ்ணா…, இன்னொரு பாட்டும் இருக்கு கிருஷ்ணா…. “சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி தையா தைய தந்தத்தானா தையா தைய தந்தத்தானா அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள் புன்னகை மங்கையர் போற்றிப் புனைந்திடும் ஆடையடி செய்துமடி போடுங்கடி சிந்தனைச் சிற்பிகள் தேசத்தறிஞர்கள் செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள் எங்கள் மங்கல மாநிலம் காக்கும் மறவர் யாவரும் புவிவாழ்வில் உயரும் மக்கள் எல்லோரும் வாங்கி மகிழும் பொன்னாடையடி” —- என்ற இந்தப் பாடலை கேட்டாயா கிருஷ்ணா…. கைத்தறிச் சேலை நெய்யும் நெசவாளர்கள் பாடுவதாக வரும் பாட்டு… ஒரு பழமொழி உண்டு….  ‘காஞ்சிக்குச் சென்றால், காலாட்டிப் பிழைக்கலாம்’ என்ற சொலவடை, எத்தனை உண்மையானது….  கைத்தறிச் சேலையை நெய்யும் வேலையை போற்றிப் பாடும் பாட்டு… நெசவுத் தொழிலின் மகிமையை உணர்த்தும் பாட்டு…. கிருஷ்ணர்  : நம்ம நாட்டுக்கு ஏற்ற பாட்டு.  நெசவாளர்களும், உழவர்கள் போல்தான் மேகலா. உழவர்கள் பசிக்கு உணவூட்டுகிறார்கள்…, நெசவாளர்கள் மானம் காக்க ஆடை நெய்கிறார்கள்.  ‘சித்திரக் கைத்தறிச் சேலை’ என்று எத்தன