Posts

Showing posts from May, 2022

அழகு - பகுதி 21

கிருஷ்ணர்   : ஆம்மாம்……, பூக்களை….., பூக்களாகப் பார்ப்பதை விட, photo-வாகப் பார்க்கும் போது, அதற்கு அழகு மேலும் கூடி விடுகிறது மாதிரி இருக்கும் இல்லையா…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. என்னுடைய தோட்டத்தில், சின்னதாக 1 ரூபாய் size-ல் ஒரு பூ இருக்கிறது. அது செடியிலிருந்து வால் மாதிரி புறப்பட்டு அதன் உச்சியில் சின்ன பஃப் மாதிரி இருக்கும்….  சும்மா பார்க்கும் போது சாதாரணமாக இருக்கும் அந்தப் பூ, close-up-ல் photo எடுத்து பார்க்கும் போது, தோட்டத்தின் சூழலில் பூ ஒய்யாரமாகத் தெரியும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஸ்….ஸ்….. ஆமாம்ல; photography-யில interest இருப்பவங்க, ரசிச்சு photo எடுக்கும் போது…., காற்றில் அலையும் கூந்தலின் ஒரு முடி அசைவதைக் கூட மிக அழகாக எடுத்து விடுவார்கள்.  அதிலும், இயற்கையான சூழலில் photo எடுக்கும் போது, photo மட்டுமே ஆயிரம் கதை சொல்லுமே…. மேகலா  : கிருஷ்ணா…., எனக்கு ஒரு photo ஞாபகத்துக்கு வருது கிருஷ்ணா….. நடிகர் சிவாஜி கணேசன், ஒரு முறை காசி சென்றிருந்த சமயம்…., shooting கிடையாது…., கங்கையில் நின்று கொண்டு, கைகளை உயரே தூக்கி, இருள் விலகாத வைகறை விடியலில் ‘சூரிய நமஸ்காரம்’ செய்யும் p

அழகு - பகுதி 20

கிருஷ்ணர்   : இயற்கை சூழலை அழகாய் கொடுத்தது இருக்கட்டும்…. இப்போ, ஏதாவது simple….., ஆனா cute-ஆன அழகினைச் சொல்லேன் கேட்கிறேன். மேகலா  : ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு… அங்கு துள்ளிக் குதிக்குது கன்னுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப் பசு பாலை நன்றாய் குடிக்குது கன்னுக்குட்டி’ -இந்தப் பாட்டில் உனக்கு என்ன தெரியுது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன அருமையான பாட்டு மேகலா… முதல் வரியில், மேய்ச்சலில் பசு மேய்வதைப் பார்க்கிறேன்…. அதைத் தொடர்ந்து, துள்ளி வரும் கன்னுக்குட்டியைப் பார்க்கிறேன். வந்த கன்னுக்குட்டியை, நாவால் நக்கி, பசு தாய்மையில் கனிவதைப் பார்க்கிறேன். பசு அருகில் வந்ததும், கன்னுக்குட்டி, மடியை முட்டி முட்டி பால் குடிப்பதைப் பார்க்கிறேன். எளிமையான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, அழகான காட்சியை மாலையாகக் கோர்த்திருக்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை…. மேகலா  : இந்தப் பாட்டை வாசிக்கும் போதே, கண்ணெதிரே காட்சி அழகாய் விரிகிறதல்லவா…  இப்படி சின்னச் சின்ன சந்தங்கள், அழகான காட்சியை camera மாதிரி படம் பிடித்துக் காட்டுவதைப் பார்க்கலாமா….? கிருஷ்ணர்  : பார்க்கலாமே….. அடுத்த பாட்டு என்ன…., சொல்லு

அழகு - பகுதி 19

மேகலா   : இன்னும் ஒரு மறக்க முடியாத அனுபவம் உண்டு கிருஷ்ணா…. நான் U. S. A. சென்ற போது, ‘நயாகரா நீர்வீழ்ச்சி’ பார்க்க சென்றிருந்தோம் கிருஷ்ணா…. நயாகரா நீர்வீழ்ச்சி, Canada, U. S. A. என்ற இரண்டு நாடுகளின் எல்லைகளில், Buffalo என்ற ஊரில் அருவியாகக் கொட்டுகிறது கிருஷ்ணா…… அந்த அருவியை தூரத்தில் நின்று பார்ப்பதற்கே, கப்பல் மாதிரியான boat-ல் தான் சென்று பார்க்கப் போக வேண்டும். நாம் எட்ட நின்று பார்ப்பதற்கான இடத்தை அடைந்ததும், நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் சென்று பார்க்க விருப்பமுடையவர்கள் அதற்கான boat-ல் அனுமதி பெற்று செல்ல வேண்டும். கிருஷ்ணர்  : பார்ரா…. பெரிய பெரிய அனுபவமெல்லாம் கை வசம் வச்சிருக்க போல…. Falls-அ கிட்ட போய் பார்த்தோம்னு சொல்றயே….. தண்ணீர் உங்களைத் தெறிக்க விடலயா…. மேகலா  : கிருஷ்ணா, நாங்க சென்ற போது, மைனஸ் டிகிரி கிருஷ்ணா….. தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறல…., அவ்வளவுதான், கிருஷ்ணா…. எனக்கு உடம்பில விரல்நுனியை கூட வெளியில காட்ட முடியல….. ஸ்வெட்டர் போட்டு, அ துக்கு மேல ஜெர்க்கின்ஸ் போட்டு, கையை அதற்குள்ளே சுருக்கி கதகதப்பு ஏற்றினாலும்….,  அதையும் மீறி உடம்பு உதறுது. ஷீத்தல் கூட கேட்டா

அழகு - பகுதி 18

கிருஷ்ணர்   : சரி…., விமானம் take-off ஆகும் போது எப்படி இருக்கும்? நீ எப்படி அதை enjoy பண்ணினாய்….? மேகலா  : கிருஷ்ணா…., நானெல்லாம் ஆகாய விமானத்தில் பறப்பேனா என்பதே என்னாலேயே நம்ப முடியாதது. நான் airport-க்குள் நுழைந்து, boarding pass எடுத்து, luggage-ஐ, belt- ல் ஏற்றி விட்டு, checking எல்லாம் முடித்து, விமானத்திற்குள் நுழைந்ததே அதிசயமான ஒன்று. அதிலும் முன்னப் பின்ன அறியாத ஒரு சூழலில் என்னைப் பொருத்திக் கொள்ளவே திணறிப் போனேன் கிருஷ்ணா…. அதிலும், U. S. A போன போது, Bangalore to Delhi, domestic plane-ல் சென்று, domestic airport-க்குள் நுழைந்து, அங்கிருந்து international airport-க்குப் போகணும். அங்கு, U. S. A – க்குச் செல்லும் விமானத்தின் பிரிவு பார்த்து செல்ல வேண்டும்…, அதுவும் தனியாக….  எப்படிப் போனேன்…., எப்படி வந்தேன் என்று…. இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை.  இதெல்லாம் முடிந்த பின்,  விமானத்திற்குள், எனக்கான seat-ஐ சரி பார்த்து அமர்ந்தவுடன், ஒரு…, நிம்மதி, அதற்கும் மேல ஒரு குஷி வரும் கிருஷ்ணா…. அதை வார்த்தையால சொல்ல முடியாது…. கிருஷ்ணர்  : விட்டால், seat-லேயே குதிச்சிருப்பயோ…. மேகலா