வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 8
மேகலா : கிருஷ்ணா…., அப்போ time 2, 2 1/2 தான் ஆகியிருந்தது. நாங்க hotel-லிலிருந்து வெளியேறி, கலகலப்பான அந்தக் கடைவீதியில் சுற்றிக் கொண்டிருந்தோம். எல்லா ஊர்களிலும் மாதிரி ஹரித்துவாரிலும், கோயிலிருக்கும் பகுதியைச் சுற்றித்தான் shopping center இருக்கு கிருஷ்ணா… அதிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பொருட்கள் விற்கும் கடைகள் தான் அதிகம் இருந்தது… அங்கு ஒரு platform கடையில், travel bags-ஐப் பார்த்ததும் ராணிமா விலை கேட்க, வேறொரு customer-இடம் பேரம் பேசிக் கொண்டிருந்த கடைக்காரன், நாங்கள் பேரம் பேசுவோம் என்று, ‘ஏக் சௌ ருப்யா’ என்று கறாராகப் பேசினான். அந்த bag-ன் capacity, color, design என்று பார்த்ததும், பேரமே பேசாமல் 5 bags வாங்கினோம்…. கிருஷ்ணர் : ஐந்து bags-ஆ… எதுக்கு…., இங்கு வந்து கடை போடவா…. மேகலா : இல்ல கிருஷ்ணா…. நாம் துணி எடுத்து தைத்தாலும், 100 ரூபாய்க்குள்ள தைக்க முடியாது. ஹரித்துவார் வந்து சென்றதன் ஞாபகமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று ‘ராணிமா’ சொல்லி, அவள்தான் வாங்கினாள்… எனக்கு ஒரு bag கொடுத்தாள் கிருஷ்ணா….. கிருஷ்ணர் : வேற என்னென்ன வாங்குனீங்க…. மேகலா : ஆதி, ஒரு M. G. R. கண்