Posts

Showing posts from February, 2021

ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 5

மேகலா   : அப்படிப்பட்ட ‘photos’ தானே trend ஆகுது கிருஷ்ணா! இன்னும் ஒரு விஷயம் தெரியுமா, கிருஷ்ணா? எங்களுடைய channel-ல் இன்று ஒரு recipe, upload பண்ணுகிறோம் என்றால், அந்த recipe-யைச் சாப்பிடத் தூண்டும் வகையில் photo எடுத்து upload பண்ணும் போது தான், அந்த still-ஐப் பார்த்து recipe பார்க்கும் views அதிகரிக்கும்.   இன்னும் சொல்லப் போனால், இந்த photos தான் எங்களுடைய one of the marketing tricks.  சிலர், photos எடுப்பதில் அதிகம் மெனக்கெடுவார்கள் கிருஷ்ணா! சில சமயம், நம்முடைய பதார்த்தங்களை display பண்றதுக்கான plates-ஐ வாங்கும் செலவு, நாம் செய்யும் பலகாரத்தின் cost-ஐ விட அதிகமாயிருக்கும் கிருஷ்ணா…. அந்த அளவுக்கு மெனக்கெட்டு photo எடுக்கும் போது, ‘photo’-வைப் பார்த்தாலே, நாக்கில் எச்சில் ஊறும் கிருஷ்ணா! கிருஷ்ணர்  : சரி…., நீ எடுத்த ‘photos’-லயே உனக்குத் திருப்தியான photo எது என்று சொல் பார்க்கலாம்….. மேகலா  :  சமீபத்தில் நான் எடுத்த ‘பால்கோவா’வின் photo, அதன் இனிப்பு, சுவை, வாசம் அனைத்தையும் சொல்லுவதாய் இருந்தது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்ன…. photo-வில் வாசம் கூட தெரிந்ததா….? மேகலா  : ஆம்மாம் க

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 123

                                 பீஷ்மரின் உபதேசம் மேலும் தொடர்கிறது மேகலா  : பீஷ்மர் தொடர்ந்து தருமபுத்திரருக்கு, ‘லட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்வாள், எங்கெல்லாம் இருக்க மாட்டாள்’ என்று உபதேசம் செய்தார்.  ‘பெரியவர்களுக்குப் பணிவிடை செய்வதில் ஊக்கமுள்ளவர்கள்; நல்ல மனம் கொண்டவர்கள்; பொறுமையும், முயற்சியும், திறமையும் உடையவர்களிடம் லட்சுமி வாசம் செய்வாள்  என்றும், நன்றி கெட்டவன்; தொழில் செய்வதில் முயற்சி இல்லாதவன்; ஒழுக்கம் தவறியவன்; கொடும் செய்கைகள் உடையவன் ஆகியோரிடம் லட்சுமி வாசம் செய்வதில்லை என்று விளக்கம் கூறிய பீஷ்மர், விஷ்ணு, பரமசிவன் ஆகியோரின் மகிமைகளைக் கூறுகிறார். விஷ்ணு, கருடனுக்கு அபயம் அளித்து, தன்னுடைய மகிமைகளை கருடனுக்கு உபதேசித்து அருளினார். ‘எல்லா ஜீவராசிகளுக்கும் நானே காரணமாகிறேன். எல்லாப் பொருள்களும் என்னிடமிருந்தே உண்டாகின்றன. இரவும் பகலும் என்னாலேயே தாங்கப்படுகின்றன. பிரளயம் வரும் பொழுது, என்னாலேயே எல்லாம் அவற்றின் முடிவை அடைகின்றன.  தர்மத்துக்குப் பெரும் ஆபத்து நேரிடும் போதெல்லாம், அதைக் காப்பாற்றுவதற்காக நான் அவதாரம் செய்வேன்.  எந்த ஜீவராசிக்கும் தீங்கு செய்யாமல், வ

ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 4

மேகலா   : Ye……’எஸ்’…… கிருஷ்ணா…. இன்னும் சிலர், கோவிலின் கோபுரத்தையும், கோவிலுக்குள் இருக்கும் சிற்பங்களையும் photo எடுத்திருப்பார்கள் கிருஷ்ணா. அதற்குப் பிறகு தான், கோவிலின் சரித்திரத்தைப் பற்றி அறிந்து கொள்ளவே நமக்குத் தோணும். சிற்பங்களைப் படமெடுத்திருப்பதைப் பார்க்கும் போது, அந்த சிற்பத்தின் தெளிவும், அழகும், அதைச் செதுக்கிய ஸ்தபதியின் வரலாறையே சொல்வதாக இருக்கும் கிருஷ்ணா….   ஆடை அலங்காரமும், நகைகளின் நுணுக்கமும் தெளிவாக படமெடுக்கப்பட்டிருக்கும்.  சிற்பக்கலையின் அருமை தெரியாதவங்க கூட, வியந்து பார்க்குமளவுக்கு, photographer தெளிவாய்ப் படமெடுத்திருப்பார் கிருஷ்ணா….. இன்னும் சிலர் இருக்காங்க கிருஷ்ணா, தான் எதிர்பார்க்கும் காட்சியைப் படமெடுக்க, விடிய விடியக் காத்திருந்து, குறிப்பிட்ட தருணம் வந்தவுடன், கண நேரம் கூடத் தாமதிக்காமல் photo எடுப்பார்கள்.   அதிலும், மொட்டு மலர்வது மாதிரியான காட்சியை, visual-ஆக எடுக்கணுமென்று நினைச்சா, camera-வை பூவின் அருகில், சரியான angle-ல் set பண்ணி காத்திருந்து, பூ மலர்வதை எடுப்பார்கள்.  இதில், photo-வில் காட்சியின் அழகை விட, cameraman-ன் காத்திருத்தல் ரொம

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 122

                                       பீஷ்மரின் உபதேசம் தொடர்கிறது மேகலா  : தருமபுத்திரர், ‘பகைவனோடு நட்பு கொள்ள வேண்டிய நேரம் வந்தால் என்ன செய்வது?’ என்று கேட்டார். பீஷ்மர், பகைவனிடமும் நட்பு கொள்ளும் வகையை விளக்கி விட்டு, அந்த நட்பு நம்பிக்கைப் பூர்வமானதாக இருக்கக் கூடாது என்று விவரித்தார். இதைக் கேட்ட தருமபுத்திரர் குழப்பமடைய, நம்பிக்கை வைத்த இடத்திலேயே கூட, அதை விலக்கிக் கொள்ள வேண்டிய நேரம் வரும். எல்லோரையும் நம்பி விடக் கூடாது; உரியவர்களிடத்தில் தான் நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பிக்க, எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொண்டு, பகைவரிடமும் நம்பிக்கை வைக்கலாம்.  ஒரு இடத்தில் ஒருவனுக்கு தீங்கு செய்து விட்டு, அவனை நம்பிக் கொண்டு வாழ முயற்சிக்கக் கூடாது. ’கழுகைப் போல பார்வை, கொக்கைப் போல பொறுமை, நாயைப் போல எச்சரிக்கை உணர்வு, சிங்கம் போன்ற பராக்கிரமம், பாம்பு போல நெருங்குவது தெரியாமல் பகைவனை நெருங்கும் தன்மை ஆகியவற்றை உடையவனாக அரசன் இருக்க வேண்டும்.  மென்மையானவனாகவே இருந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், கொடுமையானவனாகவே இருந்தால் யாரும் நம்ப மாட்டார்கள் என்ப

ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 3

மேகலா   : இப்ப பரவாயில்லை கிருஷ்ணா…. கல்யாணத்தில் எடுக்கும் ‘still photos’ – ஐயே, laminate பண்ணி வச்சிக்கிறாங்க… அதனால், photo-வில் ஒரு ‘உயிர்’ இருக்கிறது, கிருஷ்ணா… கிருஷ்ணர்  : நீ என்னவோ, அந்தக் காலத்து photos கதை சொல்லுது என்றாயே…. மேகலா  : ஆமாம்…. அதான் கதை சொன்னேன்ல….  அந்தக் காலத்து photos, பொம்மை போல் நின்று, அன்று நடந்த நிகழ்வுகளை ‘கதையாய்’ சொல்லுது. இன்றைய photos, உயிர்ப்பாக இருந்து, கல்யாணத்தையே கண் முன் காட்டுது… கிருஷ்ணர்  : வாவ்! வாவ்! Very good! சரி, B & W photos உயிர்ப்புடன் இருக்கும் still photos கிடையவே கிடையாதா மேகலா…  எல்லாமே பொம்மை போல நிக்க வச்சி எடுத்தது தானா…? மேகலா  : இல்ல கிருஷ்ணா…. கருப்பு வெள்ளை காலத்தில் கூட கல்யாணங்களில், photos எடுப்பதுண்டு கிருஷ்ணா…. அதிலும், பல photos, சந்தோஷத்தையும், நிறைவையும், உறவுகளையும், பந்தங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் கிருஷ்ணா. என் கல்யாணத்தையே எடுத்துக்கோயேன். எங்க அப்பா, ‘still photo’ எடுக்கும் போது இருக்கும் தோற்றம், சாதாரணமாக இருக்கும் கிருஷ்ணா….  எங்க அப்போவோட friend-ஐ வரவேற்க, அவர் கழுத்தில் மாலை போடும் போது, எங

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 121

மேகலா   : அதன் பின்னர், தருமபுத்திரர், ‘பெரியவரே! பிராமணர்களில் சிலர், தங்களுக்கு விதிக்கப்படாத வழி முறைகளை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய நிலை என்ன என்று அறிய விரும்புகிறேன்’ என்று கேட்டார். பீஷ்மர் சொன்னார், ‘அஹிம்சை, பிறரைப் பற்றிக் கூறாமை, யாகம் செய்வது, வேதம் ஓதுவது, விருந்தாளிகளை வணங்குவது, அடக்கம், உண்மை தவறாமை, தவம் புரிவது, தர்மத்தை மீறாமல் இருப்பது ஆகியவை பிராமணனுக்கு உரிய குணங்கள். இவற்றிலிருந்து விலகுகிற பிராமணன் தேசத்திலிருந்து விரட்டப்படத் தக்கவன்’. ‘திருடர்களால் பயம், மற்ற துன்பங்கள் ஆகியவை பெருகும் போது, க்ஷத்திரியன் அல்லாத மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்த ஒருவன், தீயவர்களை அடக்கி, தர்மப்படி தண்டனை விதித்து, மக்களைப் பாதுகாக்க முனைந்தால், அவன் அரசனாக அங்கீகரிக்கப்படத் தக்கவனா இல்லையா?’ என்று தருமபுத்திரர் கேட்க, பீஷ்மர் சொன்னார், ‘பெருகி வருகிற வெள்ளத்தைத் தடுத்து நிறுத்துகிற அணை போலவும், உதவியே இல்லாத நேரத்தில் உதவியாகவும், பணி புரிகிற மனிதன், பிராமணனானாலும், க்ஷத்திரியனானாலும், வைசியனானாலும், சூத்திரனானாலும், அவன் எல்லா மக்களாலும் பூஜிக்கத் தக்கவனே!  மக்களைக் காப்பாற்று

ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 2

கிருஷ்ணர்  : உனக்கு அதில் (photography) கொஞ்சம் திறமை உண்டோ…..? மேகலா  : ஐயய்யோ…. அப்படியெல்லாம் இல்லை கிருஷ்ணா…. எனக்குப் பிடிக்கும் என்று சொன்னேன்…. கிருஷ்ணர்  : சரி…., முதலில், ‘photos’-ஐப் பற்றிப் பேசலாம். உன்னைக் கவர்ந்த ‘photos’ ஏதாவது இருக்கா, மேகலா….? மேகலா  : இன்று technology விரிவடைந்த நிலையில்,  கண்ணெதிரே இருக்கும் காட்சியினை photo எடுக்கும் போது, சின்ன அசைவில், புல்லைக் கூட அற்புதமாய், அசையும் தோற்றத்திலேயே படமெடுக்கும் அற்புதமான கலைஞர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.  சில ‘photos’ காட்சியை கண் முன்னே நடப்பது போல் கொண்டு வரும். சில ‘photos’ சில உணர்வுகளை நுணுக்கமாய் வெளிப்படுத்தும். சில ‘photos’ பல கதைகளை சொல்லாமல் சொல்லும். எனக்கு ‘black & white photos’ ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Black & White photos-ஆ….! நீ, என்னமோ சொன்ன…. ’புது technology’, அசையும் புல்லைக் கூட அற்புதமாய்ப் படமெடுக்கும் என்றாயே…. பின்ன எப்படி….? மேகலா  : கிருஷ்ணா….. Photo-வோட clarity-க்காகச் சொல்லல கிருஷ்ணா….. Color photos வராத காலத்தில் எடுக்கப்பட்ட photos எல்லாம் நிறைய கதைகளைச்

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 120

                                                தர்மங்களில் உயர்ந்தது மேகலா  : அடுத்த தினம் காலையில் புறப்பட்டு, தருமபுத்திரரும் மற்றவர்களும் பீஷ்மரை அடைந்தனர். அவரை வணங்கிய தருமபுத்திரர், பீஷ்மரைப் பார்த்துக் கேட்டார்,  ‘மனிதர்கள் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருக்கும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவன், அவர்களுக்கெல்லாம் அதிபதி ஆவது எப்படி?  மற்ற எல்லோரும் அவனை வணங்கி நிற்கும் நிலை எப்படி உருவாகிறது?’. தனது இரண்டாவது நாள் விளக்கவுரையை பீஷ்மர் தொடங்கினார். ‘கிருத யுகத்தின் ஆரம்பத்தில், அரசனோ, ஆட்சி முறையோ, தண்டனை முறையோ கிடையாது. மக்களே தர்மம் தவறாமல் நடந்து கொண்டு, ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஒருவரையொருவர் காப்பாற்றுபவராகவும், இருந்தார்கள்.  காலப் போக்கில், இந்த நிலை மாறியது. மனிதர்கள் ஆசைக்கு வசப்படலானார்கள். விவேகத்தை இழந்தார்கள். ஒருவரையொருவர் துன்புறுத்தவும், அழிக்கவும் தலைப்பட்டனர். ’இந்த சீரழிவை சீர்ப்படுத்த தேவர்கள் கேட்டுக் கொண்டதால், பிரம்மா, ராஜதர்மத்திற்கான சாத்திரத்தை இயற்றினார். அதில், அறம், பொருள், இன்பம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. விவசாயம், வர்த்தகம் போன்ற தொழில்களை