’வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 2
மேகலா : எங்கள் வீட்டில் ஒரு முறை பூனை குட்டி போட்டிருந்தது கிருஷ்ணா. மாடிக்குச் செல்லும் ஏணிப்படிக்குக் கீழே ஒரு store room மாதிரி இருக்கும். அதில் ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. அங்கிருந்து மெல்லியதாக ‘முசுமுசு’வென்று சப்தம் கேட்டதும், நான், என் தம்பி எல்லோரும் எட்டிப் பார்த்தோம். பூனை குட்டி போட்டிருந்தது தெரிய வந்தது. பூனை அவஸ்தையோடு படுத்திருந்தது. அதன் வயிற்றை முட்டிக் கொண்டு, கண் முழிக்காத குட்டிப் பூனை சப்தம் தான் ‘முசுமுசு’ன்னு கேட்டுச்சு. நாங்க அந்த குஞ்சுப்பூனையைத் தூக்கலாமா என்று யோசிக்கும் போது, அந்தப் பக்கம் வந்த எங்க ‘ஞானக்கண்’ அண்ணன், ‘ன்னா…., பூனை இன்னும் ஒரு குட்டி போடப் போகுது. அதத் தொந்தரவு பண்ணாதீங்க’ என்றாரா…. நாங்க பயந்து ஓடியே போயிட்டோம். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு, பூனையின் நினைவாகவே இருந்த நான், பூனை எத்தனை குட்டி போட்டிருக்கோ என்ற பரபரப்பில், store room-க்குப் போயி, அட்டைப் பெட்டியின் மூடியை சற்றே விலக்கி எட்டிப் பார்த்தேன். பெரிய பூனை, ஒருசாய்ந்து சற்றே ஆயாசமாகப் படுத்திருந்தது. வெள்ளையும் கருப்புமாக ஒரு குஞ்சு, சாம்பல் கலரில் ஒன்று, மஞ்சள் brown கலரில் ஒன்