எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 17

மேகலா : கிருஷ்ணா…., நீ பேசும் போதே, அடுத்து ‘முளைப்பாரி’யைப் பற்றித்தான் கேட்கப் போகிறாய் என்று நினைத்தேன் கிருஷ்ணா… அப்படியே கேட்டுட்ட. முளைப்பாரி, கிராமத்து எளிய மக்கள் மட்டுமே வளர்ப்பது. மாரியம்மன் கொடையோடு வீட்டுக்கு வீடு, முளைப்பாரி வளர்ப்பார்கள் கிருஷ்ணா. இப்போ, நவராத்திரிக்குப் பரவலாக, நிறையப் பேர் கொலு வைப்பதற்காக முளைப்பாரி வளர்க்கிறார்கள் போல…. இது கட்டாயம் இல்லை.

கிருஷ்ணர் : சரி…., முளைப்பாரிக்கு என்னென்ன தானியங்களை முளைக்க வைப்பார்கள் மேகலா?

மேகலா : கிருஷ்ணா… இந்த முளைப்பாரியை கிராம மக்கள் எவ்வளவு சந்தோஷமாகவும், நம்பிக்கையுடனும் வளர்ப்பார்கள் என்று தெரிந்த அளவுக்கு…, அதனுடைய சடங்கு, சம்பிரதாயம் எதுவுமே எனக்குத் தெரியாது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : தெரியாதா….

மேகலா : Stop…. stop கிருஷ்ணா…. பேசப் போவது யார் கிட்ட… உலகத்துக்கெல்லாம் ஆச்சாரியரிடம்…. நாம் கற்றுக் கொண்டாவது சொல்ல வேண்டாமா என்று எனக்குத் தோணுச்சு… அதனால், Google-ல் search பண்ணிட்டேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ‘சுத்தம்’….. நீ படித்து தெரிந்து கொண்டுதான் சொல்றயா…. முளைப்பாரி அனுபவம்லாம் கிடையாதா உனக்கு…. சரி, சொல்லு…., முளைப்பாரியின் பூர்வாங்கத்தைப் பற்றி.

மேகலா : கிருஷ்ணா…. கோயிலில் கொடியேறி, 7 நாட்கள் திருவிழா என்றால், முதல் நாளில், தானியங்களை விதைப்பார்களாம் கிருஷ்ணா….. தானியத்தை அவரவர் விருப்பப்படி, 1 தானியமோ, 2…, 3, என்று 9 தானியங்கள் வரை முளைக்கப் போடுவார்களாம் கிருஷ்ணா…. ‘புல்’ மாதிரி முளைக்கும் தானியமாக, ‘பெரும்பாலும் கேழ்வரகு’, தனியாகவும், இலைகளோடு செழித்து வளரும் தானியங்களை கலவையாகவும் போடுவார்கள் போல கிருஷ்ணா… இந்த தானியங்களை, இதற்கென தனி பூஜை ரூமில், முளைப்பாரிக்கென இருக்கும் மண்சட்டியில் முதலில் கொஞ்சம் மண்ணு போட்டு, அதன் மீது தானியத்தை தூவி, அதன் மீது தண்ணீர் தெளிப்பார்கள். ஓட்டை இல்லாத மண்சட்டியில் தூவிய விதைகள், ஈர மணலில் நனைந்து நனைந்து, இரண்டு நாட்களில் முளை விட ஆரம்பிக்கும். சாயந்திரமானால், அக்கம் பக்கத்து பெண்கள் எல்லாம் ஒன்றுகூடி தங்கள் முளைப்பாரி நன்றாக வளர வேண்டி, ‘ஆத்தா’ மீது பாடல் பாடி, கும்மி ஆடுவார்களாம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எனக்கு ஒரு கேள்வி…. இந்த முளைப்பாரியை அவரவர்கள் வீட்டில் வளர்ப்பார்களா…., யாராவது ஒருவர் வீட்டில் எல்லோரும் வளர்ப்பார்களா….

மேகலா : முளைப்பாரி வளர்க்கும் வீடு ‘சுத்த பத்தமாக’ இருக்கணும் இல்லையா கிருஷ்ணா…. ஐயப்ப பக்தர்கள், ‘குருசாமி’ வீட்டில் பஜனை பண்ணுவது போல…., முளைப்பாரி வளர்ப்பதற்கும், நல்ல அனுபவம் மிக்க ஒருவர் வீட்டில் தான் இதனை வளர்ப்பார்கள் கிருஷ்ணா. கோயில் கொடையின் கடைசி நாளில், முளைப்பாரிக்குரியவர்கள், தங்கள் முளைப்பாரியை குழுவாக எடுத்துச் சென்று, கோயிலுக்குக் கொண்டு போய் வைப்பார்கள் கிருஷ்ணா. பார்ப்பதற்கு ‘பச்…பச்’சென்று அழகாக இருக்கும் கிருஷ்ணா…. முளைப்பாரி உயரமாக வளர்வதற்கான சில வழிமுறைகளையும் செய்வாங்க போல… கும்பத்துக்குள் நொச்சிக்குச்சியை நட்டு வைத்து, வைக்கோல் பிரியையும் சுற்றி வைத்து, ஈரமண்ணை சாந்து மாதிரி பூசி, அதில் விதைகளைத் தூவினால், குச்சியின் உயரத்திற்கு முளைப்பாரியும் உயரமாக இருக்கும். அதன் வளர்ச்சியில், தங்கள் நம்பிக்கையும் வளர்ந்து, வேண்டுதலும் நிறைவேறியதாகவே நினைப்பாங்க கிருஷ்ணா…. நான் ஒரு முறை எங்க பூலாவூரணிக்கு போயிருந்த போது, எங்க சின்னையா மருமகள், சின்ன உலைமுடியில் முளைப்பாரி வளர்த்து (அநேகமாக அது கேழ்வரகு முளையாக இருக்கும்), கோயிலுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தாள்…. அதன் வளர்ச்சியைப் பார்க்கவே செழு செழுவென்று அழகாக இருந்தது.

கிருஷ்ணர் : அவங்க முளைப்பாரி மட்டும் செழிப்பு இல்லை மேகலா… அவங்க நம்பிக்கையும் அப்படித்தான்….. ஆமாம், மாரியாத்தாவுக்கு நீ ஏன் முளைப்பாரி வளர்ப்பதில்லை…

மேகலா : எனக்கு அதில் கொஞ்சம் பயமா இருக்கும் கிருஷ்ணா…, எங்க முளைக்காமல் போயிருமோண்ணு…. அதனால், நான் வேறு வேண்டுதல் வைத்துக் கொள்வேன் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : பயந்துட்டயா…. வேண்டுதல் நிறைவேறாமா போயிருமோண்ணு பயம்…. சரி…. நீ என்ன வேண்டுதல் வைப்பாய்….

மேகலா : மாரியம்மன் கோயிலுக்குத்தான் வேண்டுதல் வைத்துக் கொள்வேன் கிருஷ்ணா. சிவகாசி கோயில் வாசலில், கால் வாங்கி வைப்பதாக, கை, கண்மலர், புத்தகம் படிக்கும் குழந்தை, தவழும் குழந்தை, வீடு என்று நிறைய பொம்மைகள் இருக்கும் கிருஷ்ணா…. நாம் என்ன வேண்டுகிறோமோ, அந்தப் பொருளை வாங்கிக் கொண்டு, கருப்பசாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள பூசாரி, எல்லோர் முகத்திலும் நீர் தெளித்து, நம் வேண்டுதல் தட்டில் விபூதி பூசி, நெற்றிக்கு கருப்பு மையை இட்டு விடுவார். கருப்பசாமி உத்தரவு கொடுத்த பின், மாரியம்மன் கோயிலுக்கு, வேண்டுதலோடு சென்று, நம் கோரிக்கையையும், வேண்டுதல் பொருளையும் சுமந்து கொண்டு, மாரியம்மனை மூன்று முறை வலம் வந்து, நம் வேண்டுதலை இறக்கி வைக்கும் இடம் வந்ததும், நம் நம்பிக்கையையும் சேர்த்து இறக்கி வைப்போம் கிருஷ்ணா. இதுவரை மாரியாத்தா நம் நம்பிக்கையை கேட்காமல் இருந்ததே இல்லை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்! எளிமையான மண்வாசனை மணக்கும் பக்தி மேகலா…. ஆமாம், இதற்கு விரதம் ஒன்றும் கிடையாதாக்கும்….

மேகலா : என்ன…. இப்படிச் சொல்லிட்ட கிருஷ்ணா…. பங்குனி மாதத்தில், ஸ்ரீவி, பெரிய மாரியம்மன் பூக்குழி தொடங்கி, சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் வரைக்கும், N. V. சாப்பிடுவதில்லை; பொங்கல் சமயத்தில் ஒரு வேளை சாப்பிடுவது….. இரண்டு முறை குளிப்பது, சாயந்திரம் கட்டாயம் கோயிலுக்குச் சென்று, அம்மன் இன்று என்ன அலங்காரத்தில் கொலு இருக்கிறார் என்று எதிர்பார்ப்போடு செல்வது, வெளியில் வாங்கி சாப்பிடுவது கிடையாது…. மனம் முழுக்க மாரியாத்தா நிறைந்திருப்பாள். இரண்டு ஆண்டுகளாக, கொரோனா என்ற அசுரன் உள்ளே நுழைந்ததால், மாரியம்மனே பூக்குழியை ஒத்திப் போட்டு விட்டாள். இந்த வருடமாவது எளிய மக்களின் நம்பிக்கையை ஆத்தா consider பண்ணுவாளா என்று ஏக்கமாக இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எத்தனை பேருடைய நம்பிக்கை…. ஆத்தா consider பண்ண மாட்டாளா என்ன… சரி…. கிராம மக்களின் பக்தியை அப்படியே உன்னோட பக்தியாக convert பண்ணிட்ட…. கிராம மக்களின் பக்தியை இன்னும் சொல்லு மேகலா….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2