அழகு - பகுதி 21
கிருஷ்ணர் : ஆம்மாம்……, பூக்களை….., பூக்களாகப் பார்ப்பதை விட, photo-வாகப் பார்க்கும் போது, அதற்கு அழகு மேலும் கூடி விடுகிறது மாதிரி இருக்கும் இல்லையா…. மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. என்னுடைய தோட்டத்தில், சின்னதாக 1 ரூபாய் size-ல் ஒரு பூ இருக்கிறது. அது செடியிலிருந்து வால் மாதிரி புறப்பட்டு அதன் உச்சியில் சின்ன பஃப் மாதிரி இருக்கும்…. சும்மா பார்க்கும் போது சாதாரணமாக இருக்கும் அந்தப் பூ, close-up-ல் photo எடுத்து பார்க்கும் போது, தோட்டத்தின் சூழலில் பூ ஒய்யாரமாகத் தெரியும் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ஸ்….ஸ்….. ஆமாம்ல; photography-யில interest இருப்பவங்க, ரசிச்சு photo எடுக்கும் போது…., காற்றில் அலையும் கூந்தலின் ஒரு முடி அசைவதைக் கூட மிக அழகாக எடுத்து விடுவார்கள். அதிலும், இயற்கையான சூழலில் photo எடுக்கும் போது, photo மட்டுமே ஆயிரம் கதை சொல்லுமே…. மேகலா : கிருஷ்ணா…., எனக்கு ஒரு photo ஞாபகத்துக்கு வருது கிருஷ்ணா….. நடிகர் சிவாஜி கணேசன், ஒரு முறை காசி சென்றிருந்த சமயம்…., shooting கிடையாது…., கங்கையில் நின்று கொண்டு, கைகளை உயரே தூக்கி, இருள் விலகாத வைகறை விடியலில் ‘சூரிய நமஸ்காரம்’ செய்யும் p