வழிப்போக்கர்கள் - பகுதி 5
மேகலா : ‘சுற்றலாம்…., சுவைக்கலாம்’ என்றால் என்னண்ணு சொல்லு….. கிருஷ்ணர் : ஊர் சுற்றி வந்து, நல்ல சமையல் எங்கு என்று தேடிப் போவார்களா….. மேகலா : Correct கிருஷ்ணா…. மணப்பாறை முறுக்கு, செட்டிநாடு கைசுத்து முறுக்கு, காஞ்சீபுரம் இட்லி, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவி பால்கோவா என்று, இவை தயாரிக்கும் இடங்களுக்கே சென்று, ‘மாஸ்’ லெவலில் செய்யும் பலகாரங்களை video எடுத்து, மக்களிடம் சுவைபட காட்டுகிறார்கள். இன்னும் சொல்லப் போனா…., YouTuber சிலர் சென்று, சாப்பிட்டு, certificate கொடுக்கும் hotel-க்கு, அதைப் பார்ப்பவர்கள், தேடிச் சென்று சாப்பிடும் அளவுக்கு, வழிப்போக்கர்களின் சாப்பாட்டு சேவை கை கொடுக்கிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ஓ! இதப் பார்றா…. நீ தான் வழிநெடுகிலும், ‘அடையாறு ஆனந்த பவன்’, ‘ஸ்டார் பிரியாணி’ கடைகளெல்லாம் இருக்கும் என்றாயே…., இதெல்லாம் பத்தாதாமா…. மேகலா : கிருஷ்ணா! என்னதான் பிரபலமான hotel-களில், பசிக்கு உணவு சுவையாக இருந்தாலும், ரோட்டுக்கடை ஆயா சுடும் ஆப்பமும், தக்காளி சட்னியும் எத்தனை சுவையாக இருக்குது என்று யாராவது சாப்பிட்டுப் பார்த்தால்தானே தெரியும். வழிப்போக்கர்கள் இங்கெல்லாம் ச