வழிப்போக்கர்கள் - பகுதி 5

மேகலா : ‘சுற்றலாம்…., சுவைக்கலாம்’ என்றால் என்னண்ணு சொல்லு…..

கிருஷ்ணர் : ஊர் சுற்றி வந்து, நல்ல சமையல் எங்கு என்று தேடிப் போவார்களா…..

மேகலா : Correct கிருஷ்ணா…. மணப்பாறை முறுக்கு, செட்டிநாடு கைசுத்து முறுக்கு, காஞ்சீபுரம் இட்லி, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவி பால்கோவா என்று, இவை தயாரிக்கும் இடங்களுக்கே சென்று, ‘மாஸ்’ லெவலில் செய்யும் பலகாரங்களை video எடுத்து, மக்களிடம் சுவைபட காட்டுகிறார்கள். இன்னும் சொல்லப் போனா…., YouTuber சிலர் சென்று, சாப்பிட்டு, certificate கொடுக்கும் hotel-க்கு, அதைப் பார்ப்பவர்கள், தேடிச் சென்று சாப்பிடும் அளவுக்கு, வழிப்போக்கர்களின் சாப்பாட்டு சேவை கை கொடுக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஓ! இதப் பார்றா…. நீ தான் வழிநெடுகிலும், ‘அடையாறு ஆனந்த பவன்’, ‘ஸ்டார் பிரியாணி’ கடைகளெல்லாம் இருக்கும் என்றாயே…., இதெல்லாம் பத்தாதாமா….

மேகலா : கிருஷ்ணா! என்னதான் பிரபலமான hotel-களில், பசிக்கு உணவு சுவையாக இருந்தாலும், ரோட்டுக்கடை ஆயா சுடும் ஆப்பமும், தக்காளி சட்னியும் எத்தனை சுவையாக இருக்குது என்று யாராவது சாப்பிட்டுப் பார்த்தால்தானே தெரியும். வழிப்போக்கர்கள் இங்கெல்லாம் சென்று சாப்பிடுவது அவர்களை அடையாளப்படுத்துகிறது. இன்னும் ஒண்ணு….. இந்த காஞ்சீபுரம் இட்லி, செட்டிநாடு கை சுத்து முறுக்கு…., என்று வீட்டிலிருந்தபடிக்கே, நம்முடைய இட்லி மாவில், மிளகு தட்டிப் போட்டு செய்தால், அது காஞ்சீபுரம் இட்லி ஆகிவிடுமா…. காஞ்சீபுரத்துக்கோ, காரைக்குடிக்கோ சென்று, பாரம்பரியமாக செய்பவர்களைத் தேடிப் பிடித்து, அவர்கள் இந்த இட்லிக்கென்றே பிரத்யேகமாக மாவு அரைத்து, அதில் சேர்க்க வேண்டிய பொருளைச் சேர்த்து, அதற்கான பெரிய பெரிய சட்டிகளில் வேக வைப்பதைக் காட்டும் போது…., நம்ம வீட்டில் டம்ளரில் ஊத்தி வேக வைக்கும் காஞ்சீபுரம் இட்லி…, வெறும் ‘மிளகு இட்லி’யாகப் போய் விடுகிறது என்று அப்பத்தானே புரிகிறது…. நிஜமாகவே இந்த பாரம்பரியத்தைத் தேடி ஊர் ஊராக அலைந்து சேகரிக்கும் தகவல்கள், அந்த ஊர் மணத்தையும், அவர்களின் கை மணத்தையும், மற்றும் அந்த உணவின் வரலாற்றையும் கூறுவதாக இருக்கும். வழிப்பயணிகள் அல்லது வழிப்போக்கர்கள், உணவு விஷயத்தில் செய்யும் வேலை மகத்தானது கிருஷ்ணா…. இன்னும் ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா…. இப்படிச் செல்லும் இடங்களில், அதாவது ஒரு YouTuber, காரைக்குடிக்குச் சென்று, அங்கு கைச்சுத்து முறுக்கு மற்றும் பலகாரங்கள் செய்து வியாபாரம் பண்ணும் பெண்மணியிடம், கைச்சுத்து முறுக்கு, அதிரசம் மேலும் பல பலகாரங்களின் செய்முறைகளைப் பார்த்து பேட்டி எடுக்கிறார். அதை நடத்துபவர், தான் ஒற்றை ஆளாக நின்று வியாபாரம் செய்யும் போது பட்ட கஷ்டங்களையும், தடங்கல்களையும் சொல்லி, அதைத் தாண்டி அவர்கள் முன்னேறியதைக் கூறுகிறார். அப்போ அவர்களுடைய வாழ்க்கை பின்னணி, அவர்களின் தைரியம், தன்னம்பிக்கை, தன்னைப் போல ஒரு பெண்ணுக்கு வேலை கொடுத்து, அவர்களை வாழ வைத்ததன் நியாயம்…., இவையெல்லாம் பார்க்க நேரும்… எனக்கெல்லாம்…. நமக்கும் 40 வயதாக இருந்தால், இந்தப் பெண்ணைப் போல, இன்னும் சிலருக்கு வாழ்வளித்திருக்கலாம் என்று தோணும்…. அவர்களின் பலகாரங்களின் ருசி…, உழைப்பின் மேன்மை…., இதையெல்லாம் வெளிக் கொண்டு வரும் ஊர் சுற்றி வரும் வழிப்போக்கர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்…

கிருஷ்ணர் : பார்க்கும் பல பேர்களில், யாரோ ஒருவருக்காவது, நாமும் இதை மாதிரி செய்தால் என்ன…, என்று தோன்றினால்…., அது அந்த உழைப்புக்கும், கைமணத்துக்கும் கிடைத்த வெற்றிதானே….

மேகலா : இதுவும் ஒரு விஷயம் தான்…. இன்னொரு விஷயம் என்னன்னா….. ஊர் ஊராகச் சுற்றி வந்து, அங்கங்கே ருசியான பலகாரங்களைச் சாப்பிட்டுப் பார்த்து video போடும் ‘வழிப்போக்கர்கள்’ பெருகி விட்டார்கள் என்பதும் உண்மை கிருஷ்ணா…. அதனால், சந்து பொந்துக்குள்ளிருந்து சுற்றிய கை முறுக்கு, ஓரமாக ஒதுங்கி இருந்த பிரியாணி, அல்வா, பால்கோவா என்ற இவையெல்லாம் பல முறை வெளிச்சத்துக்கு வந்து விட்டது….

கிருஷ்ணர் : சரிதான்…. சாப்பாட்டுக் கடை இமயமலையின் உச்சியில் இருந்தால் கூட, தேடிச் சென்று படம் எடுத்து விடுவார்கள் போலயே…

மேகலா : துட்டு கிருஷ்ணா…. எல்லாம் துட்டு…. அங்கே ஒருவர் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தன் உழைப்பினால் முன்னேறினார் என்றால், அதையே படமெடுத்து காசு பார்ப்பதும் நடக்குதுல்ல….

கிருஷ்ணர் : சரி…. அவர்கள் எப்படியோ போகட்டும்…. நீ வழிப்போக்கர்களைப் பற்றிச் சொல்லு…. இன்றைய காலகட்டத்தில், வழி நெடுக அமைந்திருக்கும் hotel-களினால், வழிப் பயணம், வழிப்போக்கர்களுக்கு, பசியே இல்லாமல் சுகமாகப் போகிறது. இதே…., அந்தக் காலகட்டங்களில், வழிப்போக்கர்கள் உணவுக்கு என்ன செய்தார்கள் என்று தெரியுமா….?

மேகலா : கிருஷ்ணா…. ஒரு நாள், இரண்டு நாள் பயணம் என்றால், வழிப் பயணம் செல்ல முடிவெடுத்தவர்கள், கட்டுச் சாதம் கட்டி எடுத்துச் செல்வார்கள் என்று நினைக்கிறேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எப்படி நினைக்கிறாய்…. அந்தக் காலங்களில் தான், சத்திரம், சாவடி என்று இருந்திருக்கிறதே….

மேகலா : கிருஷ்ணா…. நாங்கெல்லாம் சின்னப் பிள்ளைகளாக இருந்த போது…., திருச்செந்தூருக்குப் போவோம் கிருஷ்ணா…. அப்போ…., மதுரை மாதிரி, திருச்செந்தூரில் hotels, வெரைட்டியாக சாப்பிடுவதற்குக் கிடைக்காது. அதனால், எங்க அம்மா, புளிசாதம் கட்டி எடுத்துச் செல்வார்கள். பொதுவாக, மொட்டை போட திருச்செந்தூர், குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் பொது மக்கள், புளிசாதம் கட்டித்தான் எடுத்துச் செல்வார்கள் கிருஷ்ணா. திருச்செந்தூர் கோயிலின் சுற்றுச் சுவரையொட்டி, நீண்ட corridor இருக்குமில்ல…, அங்கு குடும்பம் குடும்பமாக அமர்ந்து, கடல்காற்றை அனுபவித்துக் கொண்டும், கடலை ரசித்துக் கொண்டும், சந்தனம் பூசி, மாலையணிந்து விளையாடும் மொட்டை பேபியை கொஞ்சிக் கொண்டும், இந்த புளிசாதத்தை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருக்கும் மக்களை, திருச்செந்தூர் முருகனே ஆனந்தமாய் ரசிக்கிறான் என்பதுதான் உண்மை கிருஷ்ணா…. ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடியே, வழிப்பயணத்து உணவு புளிசாதம், லெமன் சாதம், கட்டு சாதம் என்றுதான் இருந்திருக்கிறது. எங்க பாட்டி சொல்லுவாங்க…. வியாபாரத்திற்காக, சாத்தூர் சந்தைக்கு வண்டி கட்டிக் கொண்டு போகும் பொழுது, கூடவே சமையல் சாதனங்களும் போகுமாம்….

கிருஷ்ணர் : ஏன்…., வழியில் பசித்தால் சோறு பொங்கி சாப்பிடவா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா….. மாட்டு வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் வியாபாரப் பொருட்கள் மட்டுமல்ல…, சமையலுக்கான பொருட்களும் செல்லுமாம். இது 100 வருஷத்துக்கு முந்தைய கதை…. இன்னும் அதற்கும் முன்னாலேயே சென்று பார்த்தால், இரண்டு நாள், ஏன் ஒரு வாரத்துக்குக் கூட கெட்டுப் போகாத கட்டு சாதம், புளிசாதம், துணியில் மூட்டையாகக் கட்டி, ஒரு கோலின் முனையில் கட்டித் தொங்க விட்டுச் செல்வதாக, ‘அம்புலி மாமா’ கதைகளில் படித்திருக்கிறேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : கதையில் படித்து, கதை விடுகிறாயா…. ஆனாலும், மகாபாரதத்தில், வனவாசத்திற்குச் சென்ற பஞ்ச பாண்டவர்கள் வழியில் கிடைத்த பழங்கள், கிழங்குகளை உண்டும், ஆற்று நீரில் குளித்தும் தான், தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்றும் படித்திருக்கிறோமே….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2