அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 3
மேகலா : உறவுகளின் அருமையே தெரியாதவர்கள்…. உலக மக்களோடு தொடர்பு கொள்கிறார்கள்…..! ‘Phone-ஏ உலகம்’ என்று மணிக்கணக்கில் அதனோடேயே மல்லுக்கட்டுவது மட்டும் சரி என்கிறாயா…. அது மட்டுமல்ல கிருஷ்ணா…, பிள்ளைகள் வெளியில் சென்று விளையாடுவது என்பதே கிடையாது. அந்தக் காலங்களில், சின்னப் பிள்ளைங்க ஓடிப் பிடித்து விளையாடுதல், ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு, கண்ணாமூச்சி விளையாட்டு என்று வீட்டிற்கு வெளியே விளையாடச் செல்வதும், விளையாடும் போது, முகமெல்லாம் வியர்த்தும், உடம்பெல்லாம் அழுக்கேறிப் போவதும், சகஜமான ஒன்று… இன்று சின்னப்புள்ளைகளுக்கு வியர்ப்பது என்பதே கிடையாது….. கல்லிலும், மண்ணிலும் புரண்டு விளையாடுவதை, ‘சின்னப் பிள்ளைகளே வேண்டாம்’, அம்மாமர்களே அனுமதிப்பது கிடையாது. எப்பவும், video games விளையாடணும்…. இல்லையா…., cartoon படம் பார்க்கணும்…., அப்பத்தான் சாப்பாடே சாப்பிடுவார்கள்…. நீ என்னதான் சொல்லு கிருஷ்ணா… சின்னப் பிள்ளைகள் உலகம் கூட, அந்தக் காலம் தான் பொற்காலம்…. கிருஷ்ணர் : ஏன் இப்பவும், பிள்ளைகள் ground-க்குப் போய் கிரிக்கெட் விளையாடுவதில்லையா… அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களே…., மால