அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா…. உன் சத்தத்தையே கேட்க முடியவில்லையே…. நிறுத்தாமல் பேசுவியே… என்ன, தீபாவளி busy-யா…. தீபாவளி முடிஞ்சும் 1 வாரம் ஆயிருச்சே…. முருகனின் சூரசம்ஹாரம் கூட முடிந்து…., இன்று முருகனுக்கு திருக்கல்யாணம் கூட கோயிலில் முடிந்திருக்கும்… உன்னை ஆளையே காணோமே….. ஊர் நிலவரம் எதுவும் தெரியவில்லை…. என்ன…., ஒரு மாதிரி tired ஆகத் தெரிகிறாய்….

மேகலா : கிருஷ்ணா… என் மீது உனக்கு எவ்வளவு அக்கறை கிருஷ்ணா… தீபாவளி முடிந்து கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போனது கிருஷ்ணா…. வெள்ளிகிழமை, குலதெய்வம் கோயிலுக்குப் போகணுமின்னு ஹரி சொன்னதால்…. டாக்டரிடம் சென்று, treatment எடுத்து சரியாகி விட்டேன். வெள்ளிகிழமை, கருக்குவேல் அய்யனார் கோயிலுக்குச் சென்றிருந்தேன். நேற்று, சூரங்குத்து பார்க்க, மடவார்வளாகம் கோயிலுக்குச் சென்றிருந்தேன் கிருஷ்ணா…. இதோ, இன்று பழையபடி உடம்பு சீராகி விட்டது…. எனக்கும், உன்னுடன் பேசி ரொம்ப நாள் ஆனது போல் இருந்ததால், diary-யைத் தூக்கி விட்டேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எல்லாம் சரியாகி விடும் மேகலா….. இதோ, நீ பேசப் பேச, உன் குரலில் உற்சாகம் தெறிக்க ஆரம்பிக்கிறது… மனசுக்கும் நிம்மதியாக இருக்கிறது. அப்ப, நம்ம ‘topic’-ஐ ஆரம்பிக்கலாமா…. இந்த முறை என்னோட choice….. நானே, நேயர் விருப்பமாக, ‘தலைப்பு’ சொல்லுகிறேன் மேகலா…. ‘அந்தக் காலம் Vs இந்தக் காலம்’ என்ற தலைப்பில் பேசலாம்…. மக்களின் பழக்கவழக்கங்களிலிருந்து, சமுதாய மாற்றம், உணவு முறை, விவசாயத்தின் தன்மை, கல்வி, மக்களின் attitude, கலாச்சாரம், பண்பாடு, technology என்று, எது எது உண்டோ, அத்தனையும் பேசலாம்…..

மேகலா : வாவ்! கிருஷ்ணா….! எனக்கு, தலைப்புக்காக யோசிக்கிறதுக்கு வேலையில்லாமல் நீயே சொல்லி விட்டாய் கிருஷ்ணா…. புது வெள்ளம் தெறிச்சி வருவது போல, இந்தத் தலைப்பில் தகவல்களும் கரை புரண்டுதான் வரும் கிருஷ்ணா…. அந்தக் காலங்களில் மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து, அறிவு, செல்வம், பண்பு என்று எல்லாமும், இந்தக் காலத்தினோடு ஒன்றுபடுகிறதா, வேறுபடுகிறதா என்று பார்க்கலாம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாழும் வகையில் வேறுபடுதல் (difference) என்பது மக்களிடையே பெருசாக இருக்காது… ஆனால், மக்கள் பெருக்கத்தின் காரணமாக, வேகத்தின் காரணமாக…., வாழ்க்கை முறையில் சில மாறுதல்கள் (changes) அல்லது வளர்ச்சி என்று சொல்லலாம்…. இவை நிகழ்ந்திருக்கலாம்….. நீ ஏதாவது உதாரணம் சொல்லேன்….

மேகலா : கிருஷ்ணா… அந்தக் காலம் Vs இந்தக் காலம் என்று தலைப்பு கொடுக்கும் போது… அந்தக் காலம் என்பதை, எந்தக் காலக் கட்டம் என்று வரையறுக்கலாமா….

கிருஷ்ணர் : காலம் வரையறுக்கப்பட்டால், சுவாரஸ்யமான சில தகவல்கள், காலவரையறை காரணமாக விடுபட்டுப் போகலாம்…. உதாரணத்திற்கு, ‘பக்தி’ என்ற தலைப்பை எடுத்துக் கொள்வோம்…. நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்துப் பக்தியை நீ சுலபமாக உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். சென்ற தலைமுறையினர் என்று சொன்னால், …., நீ கூட சென்ற தலைமுறைதான்….! அதனால், ’அந்தக் காலம்’ என்பதற்கு வரைமுறை தேவையில்லை….

மேகலா : O. K. கிருஷ்ணா….மக்கள் பெருக்கத்தைப் பற்றியே முதலில் பேசுவோம் கிருஷ்ணா…. பாரத தேசத்தின் இன்றைய மக்கள் தொகை 141 கோடி என்று கணக்கெடுத்துள்ளார்களாம். இதையே, சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, பாரதியார் ஒரு கணக்கு சொல்கிறார் கிருஷ்ணா…

‘முப்பது கோடி முகமுடையாள் – உயிர்

மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்’ –

என்று பாரத தேசத்தை அடையாளப்படுத்துகிறார்.

கிருஷ்ணர் : அடேங்கப்பா…. மனுஷன் எதில் வளர்ச்சி கண்டானோ இல்லையோ, இதில் அசுர வளர்ச்சிதான். சரி…, ‘வளர்ச்சி’…, ‘வளர்ச்சி’ என்கிறார்களே, மனிதன் எதில் வளர்ச்சி அடைந்திருக்கிறான்…. உனக்குத் தெரிந்ததை சொல்லு மேகலா…

மேகலா : கிருஷ்ணா…. மக்கள் பெருக்கத்தினால், இந்த பூமி விரிவடைந்து கொண்டே செல்வது அவசியமாகிறது. மனுஷங்களுக்கும் ஓரிடத்திலிருந்து இன்னும் ஓரிடத்திற்கு நகர்வது என்பது அவசியமாகிறது…. இது மட்டுமல்ல கிருஷ்ணா…. வேகமும், ஆற்றலும்…, மனுஷங்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும், அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இதனால், தன்னைச் சுற்றியிருக்கும் இயற்கை செல்வங்களை, சாதனங்களை, தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். அதில் ரொம்ப முக்கியமானது வாகனம்… குதிரையையும், ஒட்டகத்தையும், யானையையும் பழக்கி தனக்கு வாகனமாக்கிக் கொண்ட மனுஷன், காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து சென்றால், இன்னும் வேகமாகச் செல்லலாம் என்ற அறிவைப் பெற்றதுதான்…, மனிதனின் அசுர வளர்ச்சியின் வெற்றிப் படிக்கட்டு….

கிருஷ்ணர் : மனுஷனுக்கு பறக்கணுங்கிற அறிவு எப்படித் தோணியிருக்கும்….

மேகலா : விலங்குகள் மீது சவாரி செய்த மனுஷனுக்கு, ஒரு வேளை முருகனும், பெருமாளும் தான் inspiration ஆக இருந்தார்களோ….

கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்லுற…..

மேகலா : நம்முடைய புராணங்களில், முருகனுக்கு வாகனம் மயில் என்றும், பெருமாளோட வாகனம் கருடன் என்றும் சொல்லப்பட்டிருக்குல்ல கிருஷ்ணா…. கண்ணதாசனோட ஒரு பாடலில்..,

‘பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்’

– என்று பாடியிருக்கார்ல கிருஷ்ணா…. பறவை பறப்பதைப் பார்த்து, தானும் பறக்கணும்னு மனுஷன் ஆசைப்பட்டதால்தானே விமானம் பிறந்தது. சைக்கிள், car, bus முதலிய வாகனங்கள், இன்றைய காலத்தில் உலகத்தில் சுலபமாகப் பயணம் செய்ய உதவுகிறது.

கிருஷ்ணர் : அப்போ….., அந்தக் காலங்களில் மக்கள் பயணம் செய்வதற்கு விலங்குகளைத்தான் நம்பியிருந்தார்கள் என்கிறாயா….

மேகலா : மாட்டு வண்டியில் செல்வதெல்லாம் நெடுந்தூரம் போவதற்குத்தான். கூப்பிடு தூரத்திற்குள் போக வேண்டுமென்றால், நடந்தே சென்று விடுவார்கள் கிருஷ்ணா. எங்க ஊரு ‘பூலாவூரணி’…. சிவகாசிக்கும் பூலாவூரணிக்கும் இடைப்பட்ட தூரம் என்பது, நடந்து செல்லும் தூரம் தான். எங்க பெரியக்காலாம்…, regular ஆக சிவகாசி வரணும் என்றால் நடந்துதான் வருவார்கள். அதன் பிறகு தான் ‘town bus’ என்ற பஸ் பிரயாணம். இப்போ, யாரும் நடந்து செல்வது என்ற பேச்சே கிடையாது…. இன்னும் சொல்லப் போனால், கொஞ்ச காலங்களுக்கு முன்பு ‘சைக்கிள்’ என்ற வாகனம் இருந்தது…. காய்கறி விற்பவர் கூட, சைக்கிள் கேரியரில் பெட்டியை வைத்து, காய்கறி விற்று வருவார். இன்று காய்கறி விற்பவர் கூட, two wheeler என்ற motorcycle-ல் வரப் பழகி விட்டார்கள். நடந்து செல்பவர்கள், கேட்கவும் வேணுமா…. அடுத்த தெருவுக்குப் போகணும் என்றால் கூட, car-ஐ எடுக்கும் பழக்கம் சர்வ சாதாரணமாகி விட்டது. அந்தக் கால மக்கள், எங்கு சென்றாலும் நடந்தே சென்றார்கள்; ஆரோக்யமாக இருந்தார்கள். இந்தக் கால மக்கள், நடப்பதற்கு சோம்பல்படுகிறார்கள். நடையே மறந்து போய் விட்டார்கள். அப்பப்போ, physio therapy மூலம், வளையாத எலும்புக்கு சுளுக்கெடுக்கிறார்கள்….

கிருஷ்ணர் : நீ என்ன சொல்ல வர்ற…. வாகனம் அதிகம் இல்லாத காலம் தான் ஆரோக்கியமானது என்கிறாயா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1