Posts

Showing posts from May, 2023

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 9

மேகலா   : இன்னொரு கில்லாடிய இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல கிருஷ்ணா… அந்தக் கில்லாடிய நான், 20 வருடங்கள் வளர்த்து ஆளாக்கியிருக்கிறேன். அவளுக்குத் தையலில் ஆர்வம் உண்டு என்று எனக்குத் தெரியாது கிருஷ்ணா… School-ல் படிக்கும் போது, wire கூடை பின்னியிருக்கிறாள். எங்க அம்மாவுக்கு ஒரு ‘நெல்லிக்காய் knot கூடை’ பின்னி gift பண்ணியிருந்தாள். எங்க அம்மா, அவர்களுடைய பாட்டுப் புத்தகத்தை அதில் வைத்துத்தான் சங்கத்திற்கு எடுத்துச் செல்வார்கள். யாராவது அந்தக் கூடையை ஏறிட்டுப் பார்த்தால், ‘எங்க ஷீத்தல் பின்னியது’ என்று மகிழ்ந்து சொல்வார்கள்….. கூடை பின்னத் தெரிந்தவளுக்கு, தையல்கலையில் ஆர்வம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை கிருஷ்ணா… கிருஷ்ணர்  : Oh! இத்தனை நேரமும் நீ ஷீத்தலைப் பற்றித்தான் கூறினாயா…. அவளுக்கு tailoring தெரியுமா…. மேகலா  : கிருஷ்ணா…., அவள் tailoring வேலை பார்த்து சம்பாதிக்கவும் செய்கிறாள்…. கிருஷ்ணர்  : Oh! boutique வைத்திருக்கிறாளா…. Designer blouse தைப்பாளா…. மேகலா  : Stop…. stop…. blouse-லாம் இப்பத்தான் தைக்க ஆரம்பித்திருக்கிறாள் கிருஷ்ணா… ஆரம்பத்தில் அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒர

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 8

மேகலா  : இந்த tailoring வேலையில், இன்னொரு சுவாரஸ்யமான வேலை ஒன்று இருக்கிறது கிருஷ்ணா…. Market-க்குக் கொண்டு போகப் பயன்படுத்தும் பை என்று social media-வில் கற்றுக் கொடுக்கிறார்கள். அதாவது, வீட்டில் இருக்கும் அரிசி bag-களை waste பண்ணாமல், அதனை ‘base’ ஆக வைத்து, மேலே பழைய nighty துணிகளை அழகாக விரித்து, strong ஆன பைகளை உருவாக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள். அது, கொஞ்சம் பெரிதாக தைத்து விட்டால், market போகும் போது எடுத்துச் செல்வதற்கு useful ஆக இருக்கும். இப்படி waste துணிகளை reuse பண்ணி bags தைப்பதற்கு நிறைய பெண்கள், வேற வேற size-களில் கற்றுத் தருகிறார்கள். என் தங்கச்சி ராணிமா கூட, எனக்கு ஒரு bag தைத்துக் கொடுத்திருக்கிறாள். புது dress வாங்கும் போது, கடையில் கொடுக்கும் big shopper bag-ஐ விட, இப்படித் தைக்கும் bag, சாமான்கள் வாங்குவதற்கு ரொம்ப useful ஆக இருக்கும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! எந்த அளவுக்கு, சமையல் வேலை பெண்களுக்கு கை கொடுக்கிறதோ, அந்த அளவுக்கு, தையல் வேலையும், அதைச் சார்ந்த, reuse, repair வேலைகளும் கை கொடுப்பதாகத்தான் இருக்கிறது… மேகலா  : எனக்கு, மதனா, ஒரு ‘பிடி’ gloves தைத்துக்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 7

கிருஷ்ணர்   : Oh! நுணுக்கமான கைவேலையோடு சாமர்த்தியமும் இருந்தால் தானே பிரயோஜனம்… நுணுக்கமான இந்த வேலையை 2 நாளில் நீங்கள் கேட்ட design-ல் செய்து கொடுப்போம் என்று சொன்னால்…., அவர்கள் எத்தனை பேரை வைத்து வேலை வாங்கணும். அப்போ, கைவேலைக்காரர்களுக்கு வேலையும் கொடுக்கிறார்கள்….   தானும் வாழ்ந்து, இன்னும் சிலரையும் வாழ வைப்பதுதான், உழைப்பின் மகிமை… மேகலா  : நீ இவர்களையே இவ்வளவு பாராட்டுகிறாயே… எங்க tailor ஒரு commercial tailor….. அவருக்கு தீபாவளி time-ல், blouse தைத்த பின்பு, அதற்கு பட்டன் வைக்க நேரம் கிடைக்காது கிருஷ்ணா. சட்டைக்கு பட்டன் வைக்க மட்டும் ஒரு மாற்றுத்திறனாளி பையனிடம் சட்டைகளைக் கொடுத்து விடுவார். ஒரு சட்டைக்கு 10 ரூபாய் charge பண்ணி, அந்தப் பையனிடம் கொடுத்து, அவர் தைக்கும் சட்டைக்கெல்லாம் பட்டன் தைத்து விடுவார். Tailor-ஐ , tailor என்று கூப்பிடுவது போல, சட்டைக்கு பட்டன் தைப்பவரை ‘காஜா போடுபவர்’ என்றும் சொல்லுவோம் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : சின்ன tailor கடை வைத்திருக்கும் tailor, தனக்கு உதவியாகத்தான் காஜா போடுபவரை வைத்திருக்கிறார். ஆனால், அதுவே அவருக்கு வேலை வாய்ப்பாகவும் அமைந்து விட்டத

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 6

கிருஷ்ணர்   : ஏன் மேகலா…., சமையல் தவிர்த்து, வேற தொழில் கைத்தொழிலாகச் செய்வதற்கு, குறிப்பாக பெண்களுக்கென்ற கைத்தொழில் வேற எதுவும் இருக்கா மேகலா….? மேகலா  : இருக்கு கிருஷ்ணா….  Tailoring வேலையில் இன்று பெண்கள் கலக்குகிறார்கள் கிருஷ்ணா…  இந்த தையல் வேலையிலேயே embroidery work செய்தல்…., dress design பண்ணுதல்…., bridal design blouse stitch பண்ணுதல் என்று இந்தத் துறையில் கூட, exclusive masters கூட இருக்காங்க கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : பொதுவாக ஒரு பட்டன் பிஞ்சி போனால் கூட, tailor-இடம் போகாமல், நாமே stitch பண்ணுவது நல்லதுதானே…. இந்தத் தையல் வேலையைக் கற்றுக் கொடுப்பதற்கு institute இருக்கா மேகலா… மேகலா  : இருக்கு கிருஷ்ணா…. சட்டைக்கு பட்டன் repair பண்ணுவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் கிருஷ்ணா. ஆனால், ஒரு blouse-ஐ வெட்டி தைப்பதற்கு, institute சென்று கற்றுக் கொள்ளத்தான் செய்யணும் கிருஷ்ணா…  சமையல் வேலை பலருக்கு ரொம்பப் பிடிக்கும் என்பது போல், சிலருக்கு தையல் வேலை மீது, சிறு வயது முதலே ஒரு பிடிப்பு இருக்கும்.  எங்களுக்கு school படிக்கும் போதே தையல் class உண்டு. அதில் basic, அதாவது தையல் கலையை, ஊசிய