கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 9

மேகலா : இன்னொரு கில்லாடிய இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல கிருஷ்ணா… அந்தக் கில்லாடிய நான், 20 வருடங்கள் வளர்த்து ஆளாக்கியிருக்கிறேன். அவளுக்குத் தையலில் ஆர்வம் உண்டு என்று எனக்குத் தெரியாது கிருஷ்ணா… School-ல் படிக்கும் போது, wire கூடை பின்னியிருக்கிறாள். எங்க அம்மாவுக்கு ஒரு ‘நெல்லிக்காய் knot கூடை’ பின்னி gift பண்ணியிருந்தாள். எங்க அம்மா, அவர்களுடைய பாட்டுப் புத்தகத்தை அதில் வைத்துத்தான் சங்கத்திற்கு எடுத்துச் செல்வார்கள். யாராவது அந்தக் கூடையை ஏறிட்டுப் பார்த்தால், ‘எங்க ஷீத்தல் பின்னியது’ என்று மகிழ்ந்து சொல்வார்கள்….. கூடை பின்னத் தெரிந்தவளுக்கு, தையல்கலையில் ஆர்வம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! இத்தனை நேரமும் நீ ஷீத்தலைப் பற்றித்தான் கூறினாயா…. அவளுக்கு tailoring தெரியுமா….

மேகலா : கிருஷ்ணா…., அவள் tailoring வேலை பார்த்து சம்பாதிக்கவும் செய்கிறாள்….

கிருஷ்ணர் : Oh! boutique வைத்திருக்கிறாளா…. Designer blouse தைப்பாளா….

மேகலா : Stop…. stop…. blouse-லாம் இப்பத்தான் தைக்க ஆரம்பித்திருக்கிறாள் கிருஷ்ணா… ஆரம்பத்தில் அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு aunty கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு மூணு மாசம் கற்றதன் பின்பு, social media-வில் கற்றுக் கொடுக்கும் video பார்த்துத்தான் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள் கிருஷ்ணா… ஹாங்காங், தாய்லாந்து videos-ல், அவர்கள் மொழியில் கற்றுக் கொடுப்பதைப் பார்த்து கற்றுக் கொண்டதுதான் ஏராளம். நான் அப்போ, Bangalore போன சமயமெல்லாம், demo videos-ஐ எனக்கும் காட்டுவாள். இதைப் பார்த்து, embroidery தைப்பது, phone pouch, bags, போர்த்திப் படுக்கும் ‘quilt’ என்று பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாள் கிருஷ்ணா…. ஆரம்பத்தில், தைப்பதெல்லாம் எனக்கு gift ஆகக் கொடுப்பாள்…. இப்பத்தான், online class சேர்ந்து, blouse தைக்கப் படித்திருக்கிறாள். இப்போ, Order பண்ணுபவர்களுக்கு, bag, pouch என்று தைத்துக் கொடுத்து சம்பாதிக்கிறாள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பரவாயில்லை மேகலா…. ஷீத்தலும் ஒரு ‘ஏகலைவன்’ போல, மொழி தெரியாது, கைவேலை பார்த்து, தானே கற்றுத் தெளிந்திருக்கிறாள் என்று சொல்… பெண்கள், இதை தொழிலாக செய்வதற்கு ஆரம்பப்புள்ளி வைக்கிறார்கள் என்றிருந்தாலும், தற்சமயம் வீட்டில் சும்மா இருக்காமல், தனக்குள் இருக்கும் திறமையை, மிகச் சாமர்த்தியமாக வளர்த்து, நேரத்தை பயனுள்ளதாக ஆக்குகிறார்களே…., அதுவே பெரிய விஷயம் தானே…. அப்போ, உன்னைச் சுற்றி, உன் பொண்ணு, உன் தங்கை, உன் அண்ணா மருமகள், அக்கா மருமகள் என்று உங்கள் family members-ஏ நிறையப்பேர் தையல் கலைஞர்களாக இருக்கிறார்களே. கேட்பதற்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது மேகலா….

மேகலா : என்னிடம் ஒரு travel bag ஒன்று இருக்கிறது கிருஷ்ணா… அதன் விலை 200 ரூபாய் மட்டும் தான்…, 1 நாள் dress எடுத்துச் செல்வதற்கு அழகாகவும், கச்சிதமாகவும் இருக்கும்…, அதை யார் தைத்துத் தந்தார் தெரியுமா…. ஒரு வயதான அம்மா… அவர்களுக்கு வந்த Orders எல்லாம் செவிவழித் தொடர்புதான்… இதை வைத்து ஏகப்பட்ட பேருக்கு travel bag தைத்துக் கொடுத்திருக்கிறார்கள். வைதேகிதான் இவர்களுக்கு P. R. O. இன்னொரு product இருக்கு கிருஷ்ணா… பிறந்த குழந்தைக்கு, ‘டயாபர்’ தைப்பது. முதுகுக்கு விரிக்கும் cotton சேலை துணி மெத்தை என்று, இதெல்லாம் தைக்கத் தெரியாதவர்கள் tailor-இடம் தான் கொடுக்கணும்… இதில், ராணிமா ‘கில்லி’. எங்கள் வீட்டில் பிறந்த நிறைய குழந்தைகளுக்கு அவள்தான் ‘டயாபர்’ தைத்துக் கொடுத்திருக்கிறாள். என்னதான் கடையில் வாங்கும் ‘டயாபரை’ உபயோகப்படுத்தினாலும், எளிய பருத்தித் துணியில் தைக்கும் ‘டயாபர்’, குழந்தையின் skin-க்கு நல்லதில்லையா… அந்த மாதிரி ‘டயாபர்’ தைத்து, குழந்தை அணியும் போது, மனசுக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் தெரியுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நிச்சயமாய்…. நீ சொல்லும் போது, நானும் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். ஒரு சின்ன கர்ச்சீப்பில் embroidery பண்ணிப் பார்த்தால்…., ஒரு plate பிரியாணி சாப்பிடும் போது கூட இத்தனை சந்தோஷம் வராது. அவ்வளவு சந்தோஷம் வரும்… கைவேலைக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு மேகலா….

மேகலா : நீ என்ன கிருஷ்ணா, embroidery-க்குப் போயிட்ட…., ரொம்ப நாள் tight ஆக இருந்த blouse-ஐ பிரித்து, அது free-யாக இருப்பதை feel பண்ணும் போது ஒரு சந்தோஷம் வரும்… யப்பா…., நீ சொன்ன மாதிரி…, பிரியாணி சாப்பிட்டாக் கூட, இந்த மனநிறைவும், சந்தோஷமும் வராது….. நான் என்னோட ‘பிடி gloves’-ஐப் பற்றிச் சோன்னேனில்லையா…. அது யார் தைத்தது தெரியுமா கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : Oh! ஆமாம்; மதனா தைத்தது என்றாய்… அப்போ…., உன் மருமகளும் தைப்பாளா…. very good மேகலா….

மேகலா : என்னோட ‘கார்த்தி’க்கு lunch box எடுத்துச் செல்லும் bag, ‘K’ என்ற initial போட்டு தைத்துக் கொடுத்திருந்தாள் கிருஷ்ணா… கார்த்தி, இன்னும் baby-யாக இருக்கும் போது, நாம் கடையில் lunch bag வாங்கித் தாரேன் என்று சொன்னால், என்ன சொல்லுவான் தெரியுமா…. ‘எங்க அம்மா தைத்துக் கொடுத்ததைத்தான், நான் school-க்குக் கொண்டு செல்வேன்’ என்று பெருமையாக சொல்லும் போது, நான் அப்படியே பூரிச்சிப் போயிருவேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : தைப்பவருக்கு, இதை விட பெரிய மகுடம் தேவையில்லை… வாவ்…. அற்புதம்….

மேகலா : மதனாவோட தையலில், finishing, super ஆக இருக்கும் கிருஷ்ணா… மதனாக்கு drawing-லயும் ரொம்ப interest உண்டு கிருஷ்ணா… Online class சேர்ந்து கற்று வருகிறாள்…. கிரி வரைந்த அதே ‘மதுபனி painting’ தான் கிருஷ்ணா…. ஆனால், மதனா வரைவது poster-ல்… இதை “Snippets of life” என்ற YouTube channel-ல் பதிவிடுகிறாள்….

கிருஷ்ணர் : வரைகிறாள் என்று சொல்லாமல், பதிவிடுகிறாள் என்கிறாயே…. anything special….

மேகலா : இந்த பதிவு, சில நொடிகள்தான் ஓடும் கிருஷ்ணா…. கை, வேகமாக வரையும் போது, சில சிறந்த கருத்துக்களை பதிவு செய்கிறாள். சில சமயம், drawing-ஐ விட, அவள் பதிவு செய்யும் கருத்துக்கள் சிறப்பாக இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பரவாயில்லை மேகலா… பிள்ளைகள் தங்களுக்கான நேரத்தை, வெட்டியில் பொழுது போக்காமல், தைப்பதும், வரைவதும் என்று இப்போ, புள்ளி வைத்துச் செல்கிறார்கள். இது அழகான வண்ணக் கோலமாக வாழ்த்துகிறேன் மேகலா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2