பெண்களால் முடியும் - பாகம் 6
மேகலா : கிருஷ்ணா…., பவானி ஆற்றங்கரையில் விவசாயம் பார்த்துக் கொண்டிருப்பவர் கிருஷ்ணா…. மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சார்ந்த பாப்பம்மாள். விவசாயத்தின் மீது கொண்ட நம்பிக்கையில், முதலில் 4 ஏக்கர் நிலம் வாங்கி, ‘இயற்கை முறை’யில் (organic) விவசாயம் பார்க்க ஆரம்பித்தார்… அது, இன்று 10 ஏக்கராக பெருகியிருக்கிறது… பிறருக்கு ஆரோக்கிய உணவு கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் விவசாயம் பார்ப்பதை அறிந்த சமூக ஆர்வலர்கள், அவரை பெருமையுடன் கொண்டாடுகின்றனர். இதைக் கேள்வியுற்ற மத்திய அரசாங்கம்…, இன்று, பாரதத்தின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள் கிருஷ்ணா….. கிருஷ்ணர் : விருதுக்கு ஆண், பெண் பேதம் கிடையாது. ஆனாலும்…, பாப்பம்மாளுக்கு விருது வழங்கியதில், விருது, நிமிர்ந்து, உயர்ந்து நிற்கிறது மேகலா…. வாவ்…. பெண்களால் முடியும்…. மேகலா : கிருஷ்ணா…., விருது வழங்கப்பட்ட பெண்ணைத்தானே இப்போ பார்த்தோம். பிரதமந்திரியே ஒரு பெண்ணின் காலில் விழுந்த சம்பவம் நினைவிருக்கிறதா கிருஷ்ணா….. கிருஷ்ணர் : மறக்க முடியுமா மேகலா… ‘சின்னப்புள்ள’… இவரும், எளிய, அழகான கிராமத்தைச் சேர