Posts

Showing posts from October, 2024

உள்ளத்தனையது உயர்வு - பாகம் - 4

மேகலா   : அடுத்து,   வெடுக்கு வெடுக்குனு பேசுறவங்க…., எதைக் கேட்டாலும், எடுத்தெறிஞ்சி பேசுறவங்க…, முதல் தடவை பார்க்கும் போதே வெறுப்பு வரும் மாதிரி நடந்து கொள்பவர்கள்…, உயர்ந்த உள்ளம் கொண்டவர்களாக இருக்க முடியாது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஏன் அப்படிச் சொல்ற… சில சமய சந்தர்ப்பங்களில், நல்லவங்க கூட, ஏதாவது பிரச்னை காரணமாக, மனம் தடுமாறிப் போகலாம்…. அதனால் அவர்கள் எரிச்சலாகப் பேசலாம்… அந்த நேரத்துல நீ அவங்கள பார்த்து…, இப்படிப்பட்டவங்க மோசமானவங்களாத்தான் இருப்பாங்க என்று எப்படிச் சொல்லுகிறாய்… எனக்கென்னவோ, நீ அவசரப்படுகிறயோ என்று தோணுது மேகலா…. மேகலா  : இல்ல கிருஷ்ணா…  எந்த situation-லும் பொறுமையாக பதில் சொல்பவர்கள் இருக்கும் போது, சாதாரணமாகப் பேசும் போதே…, ‘ஏண்டா இவங்க கிட்ட பேசுகிறோம்’ங்கிற மாதிரி பேசினால், நமக்கு எப்படி கிருஷ்ணா, அவர்கள் மீது மரியாதை உண்டாகும்….  ஒருவருடன் பேசும் போது, நமக்கு உரிமை வேண்டாம், நட்பு வேண்டாம்…, மரியாதை கூட வேண்டாம். ஆனால், வெறுப்பு ஏற்படாமல், சகஜமான மனநிலை கட்டாயம் இருக்க வேண்டும் அல்லவா…. அப்படி, சகஜநிலை இருந்தால்தான், அடுத்து நட...

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 3

கிருஷ்ணர்   : மகாபாரதம், நான்கு வேதங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது வேதமாகக் கருதப்படுகிறது மேகலா… அதற்கு, இப்படிப்பட்ட கதைகளும் ஒரு காரணம் தான். இதையெல்லாம் எடுத்துச் சொன்ன மகரிஷி வியாசரும் முக்கியமான காரணமாகிறார்… மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…  இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் படைத்ததனால், வால்மீகியும், வியாசரும், தர்மங்களையு, வேதத்தையும் அறிந்து கொள்ளும் அறிவையும், நமக்கு சுலபமாகக் கற்றுக் கொடுக்கிறார்கள் கிருஷ்ணா…  கண்ணதாசன் சொன்னது போல…, ‘படைப்பதனாலேயே நான் பேரிறைவன்’ என்பதனால், வால்மீகியும், வியாசரும் எங்களுக்கெல்லாம் பேரிறைவன் தான்…  ’ஒருவனுக்கு ஒருத்தி’, ’தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’…, அறிவு, திறமை, முயற்சி இவை மட்டுமில்லாமல் தெய்வத்தின் அருளும் மனிதனுக்கு மிக அவசியம் என்ற அடிப்படை நீதிகளை, இந்த இதிகாசத்தைப் படிப்பவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மைகள்.  இப்படி உயர்ந்த கதைகளின் மூலம், நம்மை சீர்படுத்தும் கதையை சொல்லுபவர்களின், மக்கள் மீதான அக்கறை…, அவர்களை தெய்வத்திற்கு நிகராக பார்க்கச் சொல்லுகிறது… மகரிஷிகளின் உள்ளத்தின் மேன்மை, இதிகாசங்களின்…, காப்ப...

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2

கிருஷ்ணர்   : இதிகாசம், புராணங்கள் இவற்றிலிருந்து, மனிதனின் உயர்ந்த உள்ளத்தைக் கூறேன்…. மேகலா  : இதற்கு எதற்கு இதிகாசத்தைப் புரட்டணும்… இருந்தாலும், அதையும் சொல்லுகிறேன்… சிம்பிளா…, போற போக்குல பஞ்ச் டயலாக் மாதிரி சொன்ன பழமொழி போதும் கிருஷ்ணா…, நம் முன்னோர்களின் உயர்ந்த உள்ளத்தைக் காட்ட… ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ – என்று நம் முன்னோர்கள், நமக்கு யோசனையாகச் சொல்லும் பழமொழி… சிறுக, சிறுக சேமித்து, பெருமையாய் வாழணும் என்று சொல்லும் போது, சிக்கனம், சேமிப்பு…, பெருமையாய் வாழ வாழ்த்து என்று, வாழ்க்கையை வாழும் முறையை, இவ்வளவு எளிமையாக, உயர்வாக யாரால் சொல்ல முடியும்…  நம்ம பெருசுகளுக்கு, வாழ்த்துவதற்கு பெரிய காரணம் எதுவும் தேவையில்லை கிருஷ்ணா… வாழ்த்த மனசு இருந்தால் போதும். ‘ஆல் போல் பெருகி அருகு போல் செழிக்கணும்’ – என்று மனம் நிறைந்து வாழ்த்துவார்கள் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : ஆஹா… ஆலமரம், எத்தனை பேர் வந்தாலும்…, நிழல் கொடுத்து இளைப்பாற இடம் கொடுக்கும். அது தவிர, ஆலமரத்தின் விழுதுகளும் கீழிறங்கி, அடிமரத்தின் வேருக்கு பலம் கொடுக்கும்… அருகம்புல், தான் முளைத்த இடமெல்லாம் பரவி, சு...

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

கிருஷ்ணர்   : என்னம்மா… எலெக்‌ஷன் முடிஞ்சிருச்சா…. ஒரே பரபரப்பாய் இருந்தயே… லீவு எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு…, ஒரேயடியா ‘லீவு’ எடுத்துட்டயோ… என்று பார்த்தேன்… என்ன விஷயம்…, இந்தப் பக்கம்…. மேகலா  : என்ன கிருஷ்ணா…, ஒண்ணுமே தெரியாதது மாதிரி பேசுகிறாய்… ஏதாவது ‘தலைப்பு’ சொல்லேன்… கிருஷ்ணர்  : நீ ஏதாவது யோசித்திருப்பாயே…, சொல்லு பார்ப்போம்…. மேகலா  : ‘உள்ளத்தனையது உயர்வு’ என்று யோசித்திருக்கிறேன்… Okay-யா கிருஷ்ணா… கிருஷ்ணர்  : Very good… ‘ வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு’ என்று உள்ளத்தின் உயர்வை, தாமரை மலர் நீட்டத்தை உதாரணம் சொல்லி, எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்…. சூப்பர் மேகலா… எங்கே உன் கருத்தை நீ சொல்லு… உன் உள்ளத்து உயர்வைப் பார்க்கலாம்…, சரி, இந்தத் திருக்குறளுக்கு அர்த்தம் சொல்லு பார்க்கலாம்… உனக்குத் தெரிகிறதா என்று பார்க்கலாம்… மேகலா  : கிருஷ்ணா…,  ஒரு குளத்தில், தாமரைப் பூ, பூத்திருக்கிறது என்றால்…, அக்குளத்தில் தண்ணீரின் அளவைச் சொல்லி விடலாம்… கிருஷ்ணர்  : எப்படி…? மேகலா  : கிருஷ்ணா…., இந்த ...