ஆளுமை - பாகம் 8

மேகலா : தர்மபுத்திரனுக்கு, ‘ராஜசூய யாகம்’ நடத்த வேண்டும் என்று ஆசை வருகிறது. ஆனால், கிருஷ்ணரோ, ’ஜராசந்தனை அழிக்காமல் ராஜசூய யாகம் நடத்த முடியாது… அதை மீறி நீ செய்தாலும், யாகம் பாதியிலேயே நின்று விடும்’ என்று எச்சரிக்கிறார்…. அதற்கான காரணத்தை பாண்டவர்கள் கேட்க, ’ஜராசந்தன் 100 அரசர்களை ருத்திரருக்கு பலி கொடுத்தால், இந்திரலோகப் பதவி கிடைக்கும் என்ற ஆசையில், 86 அரசர்களை சிறைபிடித்து விட்டான். இன்னும் 14 அரசர்களை பிடித்து விட்டால், அவனை யாராலும் வெல்ல முடியாது… அதனால் அவனை அழிக்க வேண்டும்… யாதவ குலத்தையே மதுராவிலிருந்து விரட்டியடித்தவன்’ என்று சொன்னதும், தர்மபுத்திரன் ஜராசந்தனுக்குப் பயந்து, ராஜசூய யாகத்தையே நிறுத்துவதாகக் கூறினான். இதைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணர், ‘ஒரு காரியத்தை நடத்த வேண்டாம் என்று சொல்வதற்குக் கூட, அவனால் முடியாது என்ற தகுதி இருக்க வேண்டும். ஆனால் ஜராசந்தனை அழிக்கும் வல்லமை கொண்ட பீமனும், அர்ஜுனனும் இருக்கும் போது, முயற்சியே எடுக்காமல் யாகத்தை நிறுத்துவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல. எடுத்த காரியம் எப்படி ஆனாலும் சரி, ‘முயற்சி’ என்ற ஒன்று இல்லாமல் போனால், எந்த காரியமும் நடக்காமல் போகும்… ‘முயற்சியின்மை’ புகழைக் கெடுக்கும்’ என்று எடுத்துச் சொல்ல…, பீமனும், அர்ஜுனனும் ஜராசந்தனை அழிக்கத் தயாரானார்கள். இருவரும் கிருஷ்ணருடன் மகத தேசத்துக்குச் சென்று, அங்கு ஜராசந்தனுடன் பீமன் மல்யுத்தப் போரை நடத்தி, அவனை இருகூறாகக் கிழித்துப் போட்டான். இரு கூறுகளும் ஒட்டிக் கொண்டு, மறுபடியும் ஜராசந்தன் உயிர் பெற்றான்… அங்கேயும் ஸ்ரீகிருஷ்ணரின் தந்திரம் தான் பலித்தது. பீமனுக்கு மறுபடியும் ஜராசந்தனைக் கிழித்துப் போடும் வாய்ப்பு கிடைக்க, இம்முறை கிருஷ்ணரின் சமிக்ஞையால், கிழித்த உடல்களை திசை மாற்றிப் போட்டான்… ஜராசந்தன் மாண்டான்.. தர்மபுத்திரனின் பயம் நீங்கி, ராஜசூய யாகத்தை நடத்தினான்… கிருஷ்ணர், ஒரு காரியத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானித்தால், சம்பந்தப்பட்டவர்கள் பயந்தாலும், பின்வாங்கினாலும், அவர்களை வைத்து, அந்தக் காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்…. ‘பகவத் கீதை’ பிறந்ததே, அர்ஜுனன் போரில் இருந்து பின்வாங்கியதால்தானே… கிருஷ்ணா…, ஆளுமையாளர்கள் எடுத்த காரியத்தை முடித்து வைப்பதற்காக செய்யும் முயற்சிகள், பின் வரும் சந்ததியருக்கும் பயனுள்ளதாகவும், பாடமாகவும் இருக்கும் என்பது தான், நான் கிருஷ்ணர் மூலம் அறிந்து கொண்ட உண்மை…

கிருஷ்ணர் : Oh! ஆளுமையாளர்களின் உபதேசம் பயப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, செய்யத் தயங்குபவர்களுக்கும், ஆலோசனையைக் கேட்பவர்களுக்கும் பயனளிப்பது என்கிறாய்… இதைத்தானே எல்லா அம்மாக்களும், அப்பாமார்களும், தங்கள் பிள்ளைகளின் பயத்தைப் போக்க, ஆதிகாலத்திலிருந்து போராடுகிறார்கள்… அப்போ, தன் பிள்ளைகளின் முதல் hero and heroine, அவங்க அம்மா, அப்பாதானே…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…, சரியாகச் சொன்னாய்… எனக்கெல்லாம், இன்னைக்கும் ஒரு வேலை செய்ய சோம்பேறித்தனப்பட்டால், எங்க அம்மா குரல், ‘கண்ணு பாத்தா, கையி செய்யணும்’, வைரமணி, வேலையெல்லாம் அப்படியே கிடக்கு’ – என்று மனசுக்குள் கேட்கும் கிருஷ்ணா… உடனே அந்த வேலையைச் செய்ய ஆரம்பிச்சிருவேன். எங்க அம்மாவும், அப்பாவும் இன்று வரை, என் மனசுக்குள் நிறைந்து ஆக்ரமித்திருப்பதாகத்தான்.., இன்று வரை, அவர்களுக்கு எது சரியெனப்பட்டதோ, அதன்படியேதான் என்னை இயக்குகிறார்கள் என்று நான் நம்புகிறேன்… Almost, நிறைய பிள்ளைகளுடைய மனநிலையும் இப்படித்தான் இருக்கும் கிருஷ்ணா… நான் ஏதாவது எங்க வீட்டு special குழம்பு செய்தால், அது சம்பந்தப்பட்டவர் நிகழ்ச்சி, என் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடும் கிருஷ்ணா… நான் மீன் குழம்பு செய்தால்…, இவ்வளவு ஏன், மீன் குழம்பு செய்யணும்னு நினைச்சாலே, என் கண்ணு முன்னாடி என் அப்பா நிறைஞ்சு நின்னுருவார்…. ‘சிவகாசி சமையல்’ shooting-ல், மீன் குழம்பு recipe செய்து காட்டும் போது, intro-வில், என் அப்பாவைப் பற்றி சொல்லி விட்டுத்தான், செய்முறைக்கே சென்றேன்… வெறும் லுங்கி, பனியன் costume-ல், கோயம்பத்தூர் உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு சென்ற போது, 5 கிலோ வஞ்சிரம் மீனை, fresh-ஆக பார்த்தவுடன், அப்பவே அவருக்கு நாக்கில் எச்சில் ஊறியது… முழு மீனையும் வாங்கி, குழம்பு வைத்து, ஊருக்கு எடுத்துச் சென்றார்…. – என்ற இந்த சம்பவத்தை channel-ல் கேட்ட நிறையப் பேர் என்னிடம், ‘என் அப்பாவும், மீன் குழம்பும்’ பற்றி சொல்லியிருக்கிறார்கள்… அத்தனைக்கு, பழைய நினைவுகள் மூலமாக, அம்மாவும், அப்பாவும் நம்மை முழுமையாக ஆட்கொண்டார்கள் என்றுதான் சொல்லுவேன்… இன்றும் நான் வீட்டில், ‘கறிச்சுக்கா’ வைக்கும் போது, அதன் வாசனையும், ருசியும் என் ஐயாம்மையையும், அம்மாவையும் இழுத்து வந்துரும் கிருஷ்ணா… இந்த உணவும் ருசியும், இன்றும் நம் அம்மாவையும், அப்பாவையும் நம்மிடமிருந்து பிரிக்க மறந்து போயின கிருஷ்ணா… இந்த உணவுகளோடு நிகழ்ந்த சம்பவங்கள், இன்னும் என் அப்பாவை என்னோடவே வைத்திருக்கிறது கிருஷ்ணா… இது என் அம்மா, அப்பாவின் ஆதிக்கமா… என் உணவின் ருசியின் ஆதிக்கமா….

கிருஷ்ணர் : இரண்டாவதாக இருக்கலாம்… இருந்தாலும், எப்பவுமே நாம் கடந்து வந்த இனிமையான பாதைகள் நம் மனதை ஆக்ரமித்து, பட்டா போட்டு உட்கார்ந்து விடும் மேகலா… அது பிறந்த வீட்டு சம்பவமாக இருந்தால், சொல்லவே வேண்டாம்… அதுவே நம் வாழ்க்கைத் தர்மமாகவும் ஆகி விடும்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

தன்னம்பிக்கை - பாகம் 3

தன்னம்பிக்கை - பாகம் 4