Posts

Showing posts from March, 2026

பேச்சுத்தமிழ் - பாகம் 13

மேகலா   : கிருஷ்ணா…., இன்னைக்கு நீ கொடுக்கும் பதிலெல்லாம் சூப்பர் counter கிருஷ்ணா…. ச்சும்மா இடது கையால மலையப் புரட்டுற வேலையைச் செய்திருக்கிற கிருஷ்ணா… இதப் பார்ரா…, கோவர்த்தனமலையைச் சுண்டு விரலால தாங்கிப் புடிச்சவன் நீ… இந்த மலையப் புரட்டுற வேலையெல்லாம் உனக்கு ஜுஜுபி… உனக்குப் போயி உதாரணம் காட்டுறேனே… உதாரணத்தையும், உதாரணம் காட்டுறவங்களையும் jolly-யா deal பண்ற ஆளு நீ… கிருஷ்ணர்  : ‘ கடப்பாரையவே தூக்க முடியாதவன், மலையப் புரட்ட முடியுமா ’… போங்க boss…, என்னைக் கலாய்க்காதீங்க… மேகலா  : ஐயோ…, உன் கன்னத்தைக் கிள்ளி திருஷ்டி கழிக்கணும் கிருஷ்ணா… நீ பேசும் பேச்செல்லாம் ‘பன்ச் டயலாக்’… ஆஹா…. கிருஷ்ணா…,  நாங்கெல்லாம் ‘குண்டக்க மண்டக்கன்னு பேசுவோம்’…, குத்து மதிப்பா அர்த்தம் புரிஞ்சிக்குவோம்… தத்துப்பித்துன்னு உளறுவோம்… சம்பந்தப்பட்டவங்க வந்து ரெண்டு வப்பு வச்சா, ‘குய்யோ முறையோன்னு’ புலம்புவோம்…. கிருஷ்ணர்  : ஆமா…, நீ என்ன…, ஆசிரியப்பா…, வெண்பா என்ற இலக்கணங்களை வைத்து செய்யுளா எழுதுற… குத்து மதிப்பு, குண்டக்க மண்டக்க, தத்து பித்துன்னு rhiming-ஆ பேசுற… மேகலா  : இல்...