Posts

Showing posts from April, 2026

பேச்சுத்தமிழ் - பாகம் 17

கிருஷ்ணர்   : Oh! நெசம்மா…, நீ சொன்னது மாதிரி, ‘கொங்கு தமிழ்’ கேட்பதற்கு ரொம்ப இதமா இருக்கு மேகலா…. மேகலா  : கிருஷ்ணா…, இந்த கொங்கு தமிழ் மேல சினிமாக்காரங்களுக்கு ஒரு அதீத காதல்… ‘சின்னக்கவுண்டர்’ படத்துல, குளத்தில விஷம் வச்சிட்டாங்க என்பது குற்றச்சாட்டு… அது பஞ்சாயத்துக்கு வந்திருச்சி… இடையில் டவுனுக்குப் போய் வர வேண்டிய அவசியம் hero-வுக்கு வருது… தனக்குப் பதிலாக தன் அம்மாவை பஞ்சாயத்தில் நிறுத்தி வைத்து விட்டு, ‘குறிப்பிட்ட நேரத்தில் வருகிறேன்; அப்படி வரவில்லையென்றால், விஷம் கலந்த குளத்துத் தண்ணீரை அம்மா குடிப்பாங்க’ என்று சொல்லி விட்டு கிளம்புகிறார்…. கிளம்பும் போது, விஜயகாந்த் கண் கலங்குவார்… அப்போ, அவங்க அம்மா, ‘நீ ஏன் கண்ணு மறுவுற.., அம்மா நான் இருக்கோம்ல…, போயிட்டு வா…’ என்று சோகமாகப் பேசினாலும்…, கொங்கு தமிழ் கம்பீரமாகப் பேசும்… சாதாரணமாக, பெரியவங்க, சின்னவங்கள, ‘ஏங்கண்ணு, ஒன்ர அப்பாரு ஊட்ல இருக்காரா’…, அப்படீன்னு, ‘கண்ணு’ன்னுதான் கூப்பிடுவாங்க…. கிருஷ்ணர்  : வாவ்! கொங்கு தமிழ் ரொம்ப வெள்ளந்தியாக, கிராமீய மணம் வீசும்படி இருக்குதுங்கோ… மேகலா :  கிருஷ்ணா…., பேச்...