Lock-down கலகலப்பு - பகுதி 1

கிருஷ்ணர் : ஹலோ..... மேகலா..... நீ எப்படி இருக்க.....? ஏன் இத்தனை நாளா என்னைத் தொடர்பு கொள்ளவேயில்லை......? சரி...... இந்தியாவில் கொரோனாலாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு.....?

மேகலா : என்ன கிருஷ்ணா....? நீயும் comedy பண்ணிக்கிட்டு இருக்க....! ‘உங்க ஊர்ல பூக்குழியெல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்குண்ணு’ குசலம் விசாரிக்கிற மாதிரியும், இங்குள்ள அரசியல்வாதிகள் கேட்பது மாதிரியும் கேட்குறியே.... என்னவோ, ‘மாதம் மும்மாரி பொழிகிறதா, காடு கழனியெல்லாம் நெறஞ்சு வழிகிறதா’ என்று மந்திரிமார்களைக் கேட்டு, நாட்டு நெலமையைத் தெரிந்து கொள்ளும் ராசா வீட்டுக் கண்ணுக்குட்டி மாதிரி கேட்குறியே....! உனக்கே இது ஞாயமாய்ப் படுதா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : மேகலா...... இப்படிக் கேட்டா, நீ எப்படி react பண்ணுகிறாய் என்று பார்ப்போம் என்றுதான் கேட்டேன்......

மேகலா : நீ பாட்டுக்குக் கேட்டுட்ட.... இங்கு என்னடான்னா..... இதற்கான முறையான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை..... இந்த வைரஸின் கோரத் தாண்டவம், நாட்கள் தாண்டி, வாரங்கள் தாண்டி, இன்னும் எத்தனை மாதங்கள் தலை விரித்து ஆடப் போகிறது என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த நோய்க்கு யார் முடிவு கட்டப் போகிறார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை..... இது இயற்கையின் சீற்றமில்லை...., கடவுளை நிந்திக்க. மனிதனின் தவறா என்றால்....., அதுவும் தெரியவில்லை....., தண்டனை கொடுக்க. அதிகார வர்க்கத்தின் வக்கிரமான போர்த்தொடுப்பா...., அதுவும் கண்டறியப்படவில்லை...., அறிந்து கொண்டு ஒதுக்கி வைக்க. என்னவென்று சொல்வது கிருஷ்ணா....? 21-ம் நூற்றாண்டில், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும், எத்தனை எதிர்ப்புகளை எதிர்கொண்டாலும், ‘வல்லரசு’ என்ற மிகப் பெரிய சாதனையை நோக்கி போய்க் கொண்டிருந்த வேளையில், ஒரு அசாதாரணமான நோய்த் தொற்று, மிகச் சாதாரணமாக, மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை உருக்குலையச் செய்து கொண்டிருக்கிறதே..... நீ என்னவோ, ‘எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது கொரோனா, உங்கள் ஊரில்’ என்று கேட்டு என்னை வெறுப்பேற்றுகிறாயே.....

கிருஷ்ணர் : சரி....., நான் இப்ப என்ன செய்யணும் சொல்லு.

மேகலா : நீ கடவுள்..... தீர்மானத்தைக் கையில் வைத்துக் கொண்டுதான் பேசுகிறாய். இருப்பினும், ‘என்ன செய்யணும், சொல்லு’ என்று கேட்கிறாய். மறுபடியும் சொல்லுகிறேன்.... ‘நீ கடவுள்’. இந்த ‘கொரோனா’ என்ற அசுரனை உலகத்தை விட்டே அனுப்பு. அதற்கான மருந்து; நோய் வராமல் தடுக்கும் ‘காப்பு மருந்து’, இந்த அறிவை மனிதனுக்குக் கொடு..... immediate-ஆக....

கிருஷ்ணர் : அவ்வளவுதானே....

மேகலா : நன்றாக நினைவில் வைத்துக் கொள். வாக்குக் கொடுத்திருக்கிறாய்....

கிருஷ்ணர் : செய்வோம்..... நீ கவலையை விடு..... வேறு என்ன topic-ல் பேசலாம்.... அதைச் சொல்லு....

மேகலா : வேற என்னத்தப் பேசுறது, கிருஷ்ணா...... lockdown என்று சொல்லி, வெளி உலகமே பார்க்காமல் இருக்கிறோம். நாலு இடங்களுக்குப் போனால்தானே, ‘நல்லது’, ‘கெட்டது’ தெரியப் போகுது. ‘வேலை’, அதை விட்டால், போனில் YouTube என்று பொழுது போகிறது. YouTube-லோ யாராவது, ‘கோயில்’, ‘இந்துக்கள்’ என்று எதையாவது பேசித் தொலைக்கிறார்கள். நமக்கு B.P ஏறுகிறது...

கிருஷ்ணர் : உனக்கு B.P ஏறுவது மாதிரி, யார், என்ன பேசிட்டாங்க....?

மேகலா : தன்னுடைய சம்பளமாக கோடிக் கணக்கில் பணம் புரட்டும் ஒரு சினிமா நடிகை, தன்னுடைய தேவைக்காக, BMW luxury car-ஐ வைத்துக் கொண்டு, ஒரு திரைப்பட விழாவிற்கு வந்தவர், விருது வாங்க மேடைக்கு, ‘தகதக’வென costume அணிந்து கொண்டு, மேடைக்கு ஏறினார். Anchor-ஆக இருப்பவர், அந்த நடிகையை இரண்டொரு வார்த்தைகள் பேசும்படி கூறினார். அவர் உதிர்த்த முத்துக்கள்; ‘நான் shooting-காக தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். அங்கு, தஞ்சை பெரிய கோயிலைப் பார்த்து வாருங்கள் என்று எல்லோரும் சொல்லி அனுப்பியிருந்தார்கள். நானும் பார்த்தேன்; அந்தக் கோயில், மிகப் பிரம்மாண்டமாக, ஒரு palace மாதிரி இருந்தது’....
கிருஷ்ணர் : கோயில், palace மாதிரி இருந்ததா....?

மேகலா : குறுக்க பேசாத, கிருஷ்ணா.... எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக B.P ஏறிட்டே வருது.

கிருஷ்ணர் : சரி....., சொல்லு....

மேகலா : ‘பக்கத்தில் தான் G.H-ம் இருந்தது. அங்குதான் shooting நடந்தது. அந்த ஆஸ்பத்திரியோ, சரியாகக் கவனிக்கப்படாமல், சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. நீங்க எல்லோரும் கோயிலுக்குப் போறீங்க; உண்டியலில் காசு போடுகிறீர்கள். அதற்குப் பதிலாக, ஆஸ்பத்திரியை maintain பண்ணுங்க’ என்று பெரிய்ய..... காந்திக்குப் பேத்தி மாதிரி பேசுனா, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : அதுக்கு எதுக்கு நீ காந்தி பெயரை இழுக்கிற..... காந்தி, ’கிராம ராஜ்ஜியம்’ என்றால் வேலை செய்வதற்கு, தானே இறங்கி செய்வார். முதலில் அந்த நடிகை, தன் படத்திற்கு வாங்கும் சம்பளத்தை, மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து விட்டுத் தானே பேசணும்; ஸ்...ஸ்...ஓ.... அதான் முதலில் அந்த நடிகையின் காரையும், காஸ்ட்யூமையும் பற்றி இவ்வளவு build-up கொடுத்தாயா....? இதை ஏன் விருது வாங்கும் விழாவில், கோயிலுக்குப் போகும் பக்தனிடம் 10 ரூபாய், 20 ரூபாய் காசைக் கேட்கணும்.....? நடிகர் சங்கத்தில், நடிகர்களின் list-ஐ எடுத்து, எல்லா நடிகர்களுக்கும் ஒரு mail அனுப்பி, ’அனைவரும், அவரவருடைய 1 நாள் சம்பளத்தைக் கொடுங்கள்; நான் ஆஸ்பத்திரியை சுத்தம் பண்ணப் போகிறேன்’ என்று புறப்பட்டிருக்கலாமே...? அப்பத் தெரியும், தன்னோடு வேலை பார்க்கும் சக நடிகர்களின் தாராள மனதைப் பற்றி. உண்டியலில் காசு போடும் பக்தன், தன் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்க வேண்டும் என்ற ஏக்கத்தோடும், செவி சாய்ப்பான் என்ற நம்பிக்கையோடும் போடுவது. நம்முடைய சமுதாயப் பார்வைக்கு, நாம்தானே முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

மேகலா : அதென்ன..... குறிப்பாக, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் என்று பெயர் சொல்லிப் பேசுவது; சென்னை சாந்தோம் சர்ச்சைச் சொல்லலாம்; நம்ம ஊரு சர்ச்சே எவ்வளவு பெரிசு கிருஷ்ணா.... அதுக்கு செல்வழிப்பதற்கு, பள்ளிக்கூடமும், ஆஸ்பிட்டலும் கட்டலாம் என்று சொல்லலாமில்லையா...

கிருஷ்ணர் : இப்படிப் பேசுவது, இன்று fashion ஆகிப் போச்சு....

மேகலா : இதைக் கேட்டுட்டு, கொந்தளிப்பவர்கள், முதலில் பேசுவது, நடிகையின் பிறப்பு.... கற்பு.... இத்யாதி.... இத்யாதி என்று நம்மால் வாசிக்க முடியாதபடிக்கு comments போடுறாங்க..... இதையெல்லாம் வாசிச்சும், கோயில் பெயரை mention பண்ணியதற்கு, ஒரு sorry கூடக் கிடையாது. நமக்குத்தான், ஒரு பொட்டப்பிள்ளையை இத்தனை அசிங்கமா பேசுறாங்களே என்று இருக்கு, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : வருத்தப்படாதே, மேகலா.... இறை நம்பிக்கை என்பது.... மனிதனுக்கு, அவனுக்குள் பொதிந்திருக்கும் அணுசக்தி மாதிரி..... நல்ல விதமாய் மனிதர்கள் சீண்டாமல் இருக்கிற வரைக்கும், அணுசக்தி நன்மையைத்தான் கொடுக்கும். சீண்டி விட்டாலோ, வெடித்துச் சிதறி விடும். அவள் அறிந்து சொன்னாளோ....., அறியாமல் சொன்னாளோ....., கோயில் என்ற சொல்லை வம்புக்கு இழுக்காமல் இருக்கும் வரையில், மனிதனுக்குள் இருக்கும் ‘மனிதம்’ அழகாய் வலம் வரும். கோயிலை உச்சரித்து, கேலி செய்து விட்டாலோ, மனிதனின் ‘மனிதம்’ மறைந்து போகும். உலகம் பிறந்த நாள் முதற்கொண்டே, மனிதனுக்கும், மனிதத்துவத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டமே இதுதானே......

மேகலா : என்ன கிருஷ்ணா...., உலக்க நாயகன் மாதிரி பேசுற.... எனக்குப் புரியலியே.....

கிருஷ்ணர் : மனிதன் - இரண்யகசிபு..... மனிதம் - பிரகலாதன். இரண்டுக்கும் நடுவில் போராட்டம்..... தூண் கூட வெடித்துச் சிதறியது....

மேகலா : புரிஞ்சி.... போச்சு......

கிருஷ்ணர் : அவ்வளவுதான்.... நீ கவலையை விடு..... சரி, மேலும் வேறு விஷயங்களோடு அடுத்த பகுதியில் பார்ப்போமா...

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2