தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 2
கிருஷ்ணர் : ஏன், கதவில், சித்திர வேலைப்பாடு உன்னைக் கவர்ந்ததோ….? மேகலா : ஹை! Correct-ஆய்ச் சொல்லிட்டயே…. ஆனால், ஒரு திருத்தம்… சித்திரம் இல்ல கிருஷ்ணா…, சிற்பம். சிற்ப வேலைப்பாடு மட்டுமில்ல கிருஷ்ணா…, அதன் சுத்தம்…. ‘யப்பா’, ஒரு தூசு இல்லாமல் விளக்கி வைத்த ‘வெங்கலக் குத்து விளக்கு’, தங்கமாய் மின்னுமே, அது மாதிரி, ‘சொர்க்கத்தின் கதவு’ இதுதானோ என்று சொல்லுமளவுக்கு, சுத்தமான கதவு; கோயிலின் கர்ப்பக்கிரகமே இதுதானோ என்று நம்மை மயக்கும் சிற்ப வேலைப்பாடுகள். வாயிலின் இருமருங்கிலும், இடை சிறுத்த தேவ மாந்தர்களின் சிற்பங்கள். அதன் அழகைக் கடந்து செல்ல என்னால் முடியவில்லை…. கிருஷ்ணர் : எத்தனை photos எடுத்தாய்….? மேகலா : ராணிமா cross பண்ணிப் போய் விட்டா கிருஷ்ணா. அவளைக் கூப்பிட்டுக் காட்டினேன். அதில் தவழும் கண்ணன் வேறு தவழ்ந்து கொண்டிருந்தாரா….. நிறைய்….ய photos எடுத்தோம். நான் தேவமாந்தர் பெண்ணோடு, ‘selfie’ எடுக்க try பண்ணினேன். எனக்கு ‘ஆங்கிள்’ சரியா கிடைக்கல. ‘ராணிமா’ எடுத்திட்டா. Photos எடுத்த பின்பு, கோயிலுக்குள் நுழைந்தோம் கிருஷ்ணா. நாங்கள் கோயிலுக்குள் நுழைந்ததும், பிரகாரத்தின் இடப்புற