தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 1

 கிருஷ்ணர் : ஹாய் மேகலா! என்ன, உன்னை இந்தப் பக்கம் ஆளையே காணோமே…. எங்க போன….? கல்யாணம் இரண்டு நாள் தானே நடந்திருக்கும். உனக்கு மட்டும் பத்து நாட்களாகத் தொடர்ந்ததோ… ஒரேயடியாக லீவு எடுத்திட்டயே…..

மேகலா : எனக்கு மட்டும் special விருந்தா…. அப்படியெல்லாம் யாராலும் கொடுக்க முடியுமா கிருஷ்ணா? கல்யாண வீடு function-க்கு முன்னாடியே நான் பிள்ளையார்பட்டி போகணுமென்று decide பண்ணியிருந்தேன் அல்லவா….. ‘நிவர்’ புயலாலும், ’புரெவி’ புயலாலும் அந்த program, cancel ஆகிப் போச்சுல்ல கிருஷ்ணா…. எனக்கு மனசு சமாதானமே ஆகல கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வெளியவே போக முடியாம மழையா மேகலா…?

மேகலா : வானிலை அறிக்கை சொன்ன நாளிலெல்லாம் பெருசா மழையில்லை கிருஷ்ணா… ‘கல்யாண வீடு’ முடிந்த பின், மழை ‘round’ கட்டி அடித்தது. Dec 10-ம் தேதி திண்டுக்கல்லில் ஒரு கல்யாண வீடு நடக்க இருந்தது. வேலை, அலுப்பு…. என்று தொடர்ந்து வந்த சலிப்பினால், திண்டுக்கல் கல்யாண வீடு attend பண்ணணும்; அதோட சேர்ந்து பிள்ளையார்பட்டியும் சென்று விட வேண்டும்…. ஒரு நாள் முன்னமேயே கிளம்பிச் சென்று, எங்காவது தங்கியிருந்து…., ஒரு இரண்டு நாட்கள் வேலையிலிருந்து ‘லீவு’ எடுக்கணும் என்று மனசு ரொம்ப ஏங்க ஆரம்பித்தது கிருஷ்ணா…. மனசு ஒரு கணக்கு போட்டது; 10-ம் தேதி கல்யாணத்திற்கு, 9-ம் தேதி கோயிலுக்குக் கிளம்ப வேண்டும் என்று தீர்மானம் செய்தது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும், ‘மழைனா மழை’ அப்படி ஒரு மழை கிருஷ்ணா…. தினமும் மழையைப் பார்த்து ஆராதிக்க வேண்டிய மனசு, ஏற்கனவே மழையினால் பிள்ளையார்பட்டி trip-ஐ cancel பண்ணியதால், ரொம்பப் புலம்பியது. ‘ஐயய்யோ, என்னடா இப்படி மழை பெய்யுதே…. நம்ம trip எப்படி இருக்குமோ, சொதப்பீருமோ, ஏரி, குளம் நிரம்பி, ரோடெல்லாம் வெள்ளப் பெருக்குத் தடை ஏற்படுமோ என்று பயம் ஏற்பட்டது கிருஷ்ணா…. அதிலும் நான் ராணிமாவையும், இன்பக்காவையும் கூட்டிப் போகிறேன் என்றும் promise பண்ணி விட்டேன். ’இன்று மழை நிற்கும்; நாளை நிற்கும்’ என்று எதிர்பார்த்து நின்றும், மழை நின்றபாடில்லை….

கிருஷ்ணர் : பின்னே…. trip-ஐ cancel பண்ணிட்டயா…?

மேகலா : 10-ம் தேதி கல்யாணம் என்ற ஒரு நிகழ்ச்சி தான், மழையை மீறி, கோயிலுக்குச் சென்று, திண்டுக்கல்லுக்கும் செல்ல வேண்டும் என்ற உறுதியைக் கொடுத்தது. Actual-ஆ என்ன நடந்தது தெரியுமா கிருஷ்ணா? திண்டுக்கல் கல்யாணத்திற்கு invitation வந்ததும், நான் ராணிமாவைக் கூப்பிட்டு, ‘நான் திண்டுக்கல் கல்யாணத்திற்குப் போகப் போகிறேன். 9-ம் தேதியே கிளம்பி, பிள்ளையார்பட்டிக்குப் போய் சாமியைக் கும்பிட்டு வந்து, ‘Hari’s’-ல் தங்கி, காலையில் கிளம்பி திண்டுக்கல் போகப் போகிறேன். நீ என்ன செய்யப் போகிறாய்? என் கூட வந்தால், Hari’s-ல் தங்கி, ராத்திரி பூரி சாப்பிட்டு, park-ல் ஜாலியாக சுற்றி விட்டு, காலையில் relaxed-ஆக எந்திரிச்சி கல்யாண வீட்டிற்கு கிளம்பிப் போகலாம்; என்ன செய்யப் போகிறாய்’ என்றதும், ‘என்னது, Hari’s-ல் தங்கப் போறீங்களா? அதுக்கு திண்டுக்கல்லுக்கே சென்று விடலாமே. காலையில் இன்னும் relaxed-ஆக எந்திரிக்கலாம். இரவு நேரம், அங்கு பிரசித்தி பெற்ற ‘சௌந்திரராஜப் பெருமான்’ கோயிலுக்குப் போகலாம். அங்கு செல்வதற்கு பிராப்தம் உள்ளவர்களால் தான் செல்ல முடியுமாம்.. நான் இன்னும் details-ஐ என் friends-இடம் கேட்டுச் சொல்கிறேன்’ என்றாளா…, எனக்கு வேலையிலிருந்து தப்பிக்கத்தான், 9-ம் தேதி பிள்ளையார்பட்டி, இரவு Hari’s, 10-ம் தேதி திண்டுக்கல் என்று program போட்டேன். ராணிமா சொன்ன பிறகுதான், சரி, நாம் திண்டுக்கல்லுக்குச் சென்று சௌந்திரராஜப் பெருமான் கோயிலுக்கே செல்லலாம் என்று முடிவு பண்ணினேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உனக்கு, சௌந்திரராஜப் பெருமானைப் பார்க்க பிராப்தம் இருக்கு மேகலா… அப்புறம் என்ன ஆச்சு….?

மேகலா : ராணிமா, உடனே friends-ஐ contact பண்ணி, மலை மீது இருக்கும் இன்னும் ஒரு கோயிலும் நன்றாயிருக்கும் என்ற தகவலுடன் phone பண்ணினாள்.

கிருஷ்ணர் : தங்குவதற்கு room போட்டாளா, இல்லையா…?

மேகலா : கோயில் details-ஐ சொல்லும் போது, எங்கு தங்குவது என்பதிலிருந்து, எவ்வளவு budget என்ற சந்தேகத்தையும் தெளிவாய் கேட்டுக் கொண்டு, கோயிலுக்குச் செல்வதையும் உறுதிபடுத்திக் கொண்டாள். நான் தான், திண்டுக்கல் போய்ச் சேருவதற்கே, மதியம் இரண்டு மணி ஆகி விடும். அதன் பிறகு தாடிக்கொம்பு கோயிலுக்கும், மலைக் கோயிலுக்கும் செல்வதென்றால் tired ஆக இருக்கும். மேலும் மலை ஏறுவது சிரமமாயிருக்கும் என்று என்னுடைய…

கிருஷ்ணர் : சோம்பேறித்தனத்தை சொன்னாயாக்கும்….! என்றோ ஒரு நாள் போகப் போகிறீர்கள், அவள் சொன்ன மலையையும்தான் போய்ப் பார்த்திருக்கலாமே மேகலா…

மேகலா : ஆனாலும், நான் மலையையும் பார்க்கலியே என்று ஏங்காத அளவுக்கு, சௌந்திரராஜப் பெருமானும், கல்யாண சௌந்திரவல்லித் தாயாரும், எங்களைத் தங்கள் அன்பாலும், அருளாலும் நனைத்து விட்டார்கள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : அப்படியா…. க்…., ச்…., விடாமல் கதையை எனக்குச் சொல்லு மேகலா….

மேகலா : கிருஷ்ணா…. திண்டுக்கல்லில் இந்தக் கோயில் எங்கு இருக்கு தெரியுமா….?

கிருஷ்ணர் : எனக்கு திண்டுக்கல்லில் கிழக்கு தெரியுமா…, வடக்கு தெரியுமா…? நீ சொல்லு…. நான் தெரிஞ்சிக்கிறேன்….

மேகலா : பார்….ரா…. அங்கு சௌந்தர்யமாகக் குடிகொண்டிருப்பதே எம்பெருமான், சௌந்தர்ய ராஜப் பெருமான் என்று நாமகரணம் சூட்டப்பட்ட சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணரே தானாம்…. உன் கோயில் உனக்குத் தெரியாதாக்கும்…. பொய்யெல்லாம் சொல்லாத கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உன்னோட அனுபவம்…. நீ சென்று வந்திருக்கிறாய்…. நீதானே சொல்லணும்…. ‘தாடிக்கொம்பு’ – இந்தப் பெயர் நல்லாயிருக்கே… தாடிக்கொம்பு அனுபவமும் நல்லாயிருக்கும் போலயே….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. சாயந்திரம் 5 மணிக்கு, முகம் கழுவி, coffee குடித்து விட்டு, அங்கு hotel reception-ல், தாடிக்கொம்பு route-ஐ விசாரித்து, அங்கு பெருமாள் கோயில் எங்கிருக்கு என்று கேட்டதும், அங்கு ஒரு waiter, route-ஐக் கையால் திசை காட்டி, கோயில் இருப்பிடத்தை காற்றில் ‘map’ வரைந்தான். Driver-ம் ‘Thanks தலைவா’ என்று சொல்லி, location ரொம்பப் புரிந்தது மாதிரி, ரொம்பத் தைரியமாக வண்டியை start பண்ணினான். பாலத்துக்குக் கீழே போகும் பாதையில் நேராகச் செல்ல வேண்டும் என்று வரைந்த map படி சென்றாலும், அங்கங்கே பாதையை verify பண்ணிக் கொண்டே, ஒரு 5 1/2, 5 3/4 மணியளவில், எளிமையான அந்தச் சிற்றூரில், தூசு, தும்பு இல்லாத, சுற்றுப்புறம் நம்மைக் குளிர்வித்த அமைதியான கோயில் வளாகம் எதிரில் நிற்கப் பார்த்தேன் கிருஷ்ணா! ஒரு பெரிய தடுமாற்றம், தேடல் இல்லாமல், கோயிலுக்கு வந்து சேர்ந்தோம் கிருஷ்ணா. கோயிலுக்குள் ரொம்பப் பிரமாதமான கூட்டமெல்லாம் இல்லை. வாயிலில் இருந்து பார்க்கும் போது, அங்கொருவரும், இங்கொருவருமாய் செல்வதைப் பார்த்தேன். ‘யப்பா’, சாமியை நல்லாப் பார்க்கலாம் என்று மனசுக்குள் நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். அப்போதான், வாசல் கதவைத் தாண்டி செல்லப் போனவள், நீண்ட நெடிய கதவு, என் கவனத்தைக் கவர்ந்தது கிருஷ்ணா….!

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1