Posts

Showing posts from May, 2021

வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 5

மேகலா   : அந்த அம்மாவோட மாமா, அவங்க வீட்டுக்கு, அவங்கள பார்க்க வருவார். அவரை, ‘போண்டா’ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புருஷனிடம் அறிமுகப்படுத்தி வைப்பாங்க. அதற்கு அவர் என்ன சொல்வார் தெரியுமா…? கிருஷ்ணர்  : இவர் தான் உங்க மாமாவா என்று கேட்பாரா…? மேகலா  : ஐயோ…. கிருஷ்ணா…. அப்படிக் கேட்டால், அது normal…. இவர், ‘அடடே இவரா… இவரை எனக்குத் தெரியுமே….. நம்ம கல்யாணத்துல, சமையல்கட்டுக்கும், store room-க்கும் அலை அலைன்னு அலஞ்சி, வாழைப்பழத் தோல் வழுக்கி கீழே விழுந்தாரே…. அவர் தானே… நல்லாவே தெரியும்’ என்பார். கிருஷ்ணர்  : இதுலயும் பொய்யா…. மேகலா  : மாமா, கடுப்பாகி, ‘நான் கல்யாணத்துக்கே வரல மாப்ள’ என்பாரா… பொய் சொன்னது waste-ஆப் போயிரும் கிருஷ்ணா…. அப்புறம், ‘மாப்ள என்ன பண்றாரு’ என்று கேட்பார்….. கிருஷ்ணர்  : மாப்ள ’போண்டா சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்’ என்பாரா… மேகலா  : நீ குசும்புக்காரன் கிருஷ்ணா…. படம் பார்த்துதான சொல்லுற…. கிருஷ்ணர்  : Continue…. மாப்ள போண்டா சாப்பிட்டுக்கிட்டு இருந்ததால…, ‘டூப்மாஸ்டர்’ இப்படித்தான் கேட்டிருப்பார் என்று சொன்னேன்…. மேகலா  : பரவாயில்லை; நம் வசம் ஒரு கதை வசன கர்த்தா இர

வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 4

கிருஷ்ணர்   : நீ, திருக்கடையூர் அபிராமி கோயிலுக்குச் சென்றிருக்கிறாயா மேகலா? மேகலா  : ஒரு ரெண்டு மூணு வருஷத்திற்கு முந்தி, ஹரிக்காகவும், எல்லோருடைய ஆயுளுக்காகவும்,  எமனைக் காலால் உதைத்த இறையனாரைத் தரிசிக்க வேண்டி சென்று வந்தேன்  கிருஷ்ணா. கிருஷ்ணர்  : நெய் விளக்கு ஏற்றினாயா…? மேகலா  : நெய் விளக்கு ஏற்றி, பிரார்த்தனையை நிறைவு செய்து, என் அன்னையை வழிபட்டு வந்தேன் கிருஷ்ணா. கிருஷ்ணர்  : Good…. Good…. உன் வேண்டுதல் பலிக்கும். உன் அன்னையும், அப்பனும் துணை நிற்பார்கள். மேகலா  : ரொம்ப thanks கிருஷ்ணா. சர்வ காலங்களையும் அளந்து பார்த்தவன் நீ. கண் பார்வைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருப்பவன் நீ….. நீ சொன்னால், அது உண்மை மட்டுமல்ல, அதுவே எனக்கு கவசமாகவும் இருக்கும் கிருஷ்ணா. கிருஷ்ணர்  : ஏன் மேகலா….  ‘பொய் சொன்னாலும், பொருந்தச் சொல்லணும்’  என்று நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றி நீ என்ன சொல்லப் போகிறாய்…? மேகலா  : என்ன கிருஷ்ணா…. என்னை சீண்டிப் பாக்குறியா….? நாங்கல்லாம் அப்படித்தான். ஒரு படம் பாத்திருக்கியா கிருஷ்ணா…. ‘லிவிங்ஸ்டன்’ என்ற நடிகர் நடந்து வரும் போது…., அங்கிருப்போரெல்லாம்

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 135 (நிறைவுப் பகுதி)

மேகலா   : கிருஷ்ணா! என் ஒருவள் கோபத்தை தீர்க்காவிட்டால், உன் தலை வெடித்து விடும் என்று சொல்லி, தனி மனுஷி எனக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறாயே…. இந்த கிருஷ்ணரை…, மகாபாரதம் முழுக்க நான் பார்க்கிறேன்.   யாரையும் அலட்சியப்படுத்தாதவன்; தன்னை அலட்சியப்படுத்தியவரையும், சிறு புன்சிரிப்பால் ignore பண்ணியவன்; தன்னை வணங்கியவரையும் மதித்து நடந்தவர்; தன்னை இகழ்ந்தவரையும் தனக்குள்ளே ஏற்றுக் கொண்டவர்.   இன்று என்னுடைய கோபம் என்ன என்று கேட்டு, அதற்கு பதில் சொல்லக் காத்திருக்கிறாய் கிருஷ்ணா….! உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் கிருஷ்ணா! மகாபாரதம் வாசிக்கும் போது, பீஷ்மர், கிருஷ்ணரை புகழும் போதும்; ’கிருஷ்ணரை பழிப்போர் தலையில் என் கால் வைப்பதாக’ என்று சிலிர்த்து எழும் போதும்; விதுரர், கிருஷ்ணரை போற்றும் போதும்; தர்மர், கிருஷ்ணரை நம்பும் பொழுதும்; திரௌபதி, ‘கிருஷ்ணா!’ என்று அழைத்துக் கதறும் போதும்; அர்ஜுனன், கிருஷ்ணரின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘உன் சொல் பேச்சைக் கேட்கிறேன்’ என்று சரணடையும் போதும்…., கிருஷ்ணா, என் கண்களில் நீர் கசிய உருகிப் போவேன்; என் கிருஷ்ணரின் பெருமைகளை நினைத்து புல்லர

வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 3

மேகலா   : ‘அபிராமி பட்டர்’, திருக்கடையூரில் கோலோச்சும் அபிராமி கோயிலுக்கு வந்து விட்டால், அவர் பார்வை மொத்தமும், அன்னையை மட்டுமே பார்க்கும். அந்த நேரத்தில் அவருக்கு வெளி உலகமே மறந்து விடும். அன்று அமாவாசை நாள். அபிராமி பட்டர், அன்னையின் கோயிலுக்கு வந்து, பூசாரி, அன்னையை அலங்காரம் செய்வதைப் பார்த்து மெய் மறந்து நின்றார். வழக்கம் போல, வெளி உலகமே மறந்து போக, ஒரு மோனத் தவத்தில் இருப்பது மாதிரி, அன்னையைத் தரிசித்துக் கொண்டிருந்தார்.   அன்னையின் அழகு அப்படி….  சாதாரண மக்களையே மெய் மறக்கச் செய்யும் அன்னையின் அழகும், கம்பீரமும், பட்டரை மோனத் தவத்தில் மூழ்கச் செய்ததில் வியப்பொன்றுமில்லை. அந்த நேரத்தில், கோயிலுக்கு, அன்னையை வழிபட, தஞ்சையை ஆண்ட ‘சரபோஜி மன்னரும்’ வந்திருந்தார். மன்னரைப் பார்த்த மக்கள், மன்னருக்கு வழி விட்டு பணிவுடன் ஒதுங்கி நின்றார்கள். மன்னரும், அபிராமி அன்னையை வழிபட சன்னதிக்கு வந்தார். அங்கு, தன்னையே மறந்து, அன்னையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அபிராமி பட்டரைப் பார்த்து, ‘மன்னர் வந்திருக்கிறார் என்று தெரிந்தும், விலகி நிற்காமல், எதுவும் பேசாமல், அன்னையையே பார்த்துக் க

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 134

கிருஷ்ணர்   : எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்களுடைய இறை நம்பிக்கை, யாரையும் காயப்படுத்தாதது. இறை நம்பிக்கை என்பது, மனதுக்குள் அன்பை மலர வைப்பது என்ற உணர்வினைத் தர வேண்டும். ‘மகாபாரதம்’ – நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.   மகாத்மாவும், டாக்டர் கலாமும், நல்ல குறிக்கோளுடன் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் உங்களுக்கு ’மனச்சோர்வு’ ஏற்படுகிறதோ; எப்பொழுதெல்லாம் ‘அவநம்பிக்கை’ தலை தூக்குகிறதோ, இதோ, இந்த வாசகத்தை நினைவு கூறுங்கள். ‘எப்பொழுதெல்லாம் தர்மம் மலிந்து போய் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்’ ‘நல்லவரைக் காப்பதற்கும் தீயவரை ஒடுக்குவதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்’ நினைத்த கணத்தில், ஓடோடி வருவேன், எந்தக் காரியமும் வெற்றி அடைவதற்கு, திறமை, முயற்சி, அத்தோடு தெய்வ அருளும் இருக்க வேண்டும்.  அதே போல, வெற்றி கொள்வதற்கு, கடவுள் கை கொடுத்தால் போதும் என்பது மட்டும் கிடையாது. நம்முடைய உழைப்பும், அறிவும், நேர்மையும், உண்மையும் இருந்தால், நம்மைத் தேடி வரும் வெற்றியைத் தடுக்க யாரா

வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 2

மேகலா   : கிருஷ்ணா! நீ சுவாரஸ்யம்ணு சொன்ன பிறகு தான், பொய் சொல்றத ஒத்துக்கிட்டன்னு எனக்கு சந்தோஷமா இருக்கு… கிருஷ்ணர்  : ஹலோ….ஹலோ…. என்ன….. நான், பொய் சொல்றத ஒத்துக்கிட்டனா. யாருகிட்ட பேசுறோம்னு தெரிஞ்சிதான் பேசறயா…. மேகலா  : ஐயோ கிருஷ்ணா…. நான் topic-க தான் பேசினேன். நீ என்கிட்ட கோவிச்சுக்கிட்டனா…, நான் எங்க போவேன்….? கிருஷ்ணர்  : சரி…. சரி…. ரொம்ப நடிக்காத… மேகலா  : கிருஷ்ணா, நெஜம்மாவே ‘பொய்’ என்பது ஒரு சுவாரஸ்யம் தான்.  அதனால் தான் கவிஞர்கள், தங்கள் கவிதைகள் interesting ஆக இருப்பதற்கு பொய்யைத் துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். கிருஷ்ணர்  : கவிஞர்கள் பொய்யாய் எழுதினால், யார் நம்புவார்கள் மேகலா…? மேகலா  : Content உண்மையாகத்தான் இருக்கணும் கிருஷ்ணா…. அதைச் சொல்லும் போது, சில ‘பிட்’டுக்களைச் சேர்த்துச் சொல்வாங்க. அது தான் அழகான ’கற்பனை’யாக…, ஆம், பொய்யைக் கூட, கற்பனை என்று சொல்லி அழகு பார்ப்பார்கள். தமிழ்க்குடியையே எடுத்துக் கொள் கிருஷ்ணா.  ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்று சொல்லுகிறார்கள்.  தமிழ்க்குடியின் பழமையை விவரிக்க வந்த புலவர், கொஞ்சம் முன்னா……டியே ப

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 133

மேகலா   : ’மகாபாரதம்’ என்னும் இந்த மாபெரும் இதிகாசத்தில், ‘வாழ்க்கை இதுதான்’, ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று ஒவ்வொருவரும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ‘இவர்கள் வாழ்க்கையைப் பார்’. ‘இதிலிருந்து, பாவ புண்ணியத்தை அறிந்து கொள்’ என்ற தத்துவத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. இவர்கள் கூடவே கிருஷ்ணர் வாழ்ந்திருக்கிறார். சிலரோடு உணவு உண்டிருக்கிறார். சிலரைக் கட்டிப் பிடிக்கிறார். சிலரை நக்கலடிக்கிறார்.   ‘பிச்சை எடுப்பதற்கென்றே பிறந்தவர்களடா நீங்கள்’ என்று பாண்டவர்களைப் பார்த்து ஆதங்கப்படுகிறார்.  கேலி பேசும் கர்ணனிடமும், அகங்காரப்படும் துரியோதனனிடமும், அவர்கள் செய்த தவறை நினைவுறுத்துகிறார். இப்படி மனிதரோடு மனிதராய் வாழ்ந்தும் கூட, பாண்டவர்களுக்கு லட்டு மாதிரி வெற்றியைத் தூக்கிக் கொடுக்கவில்லை. எந்த நேரத்திலும், ’நல்லவரைக் காப்பதற்கும், தீயவரை ஒடுக்குவதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்’ – என்ற வார்த்தையின் அர்த்தமாகவே வாழ்ந்திருக்கிறார்.  இதில் காந்தாரி என்ன…., யார் சாபம் கொடுத்தாலும், இதையெல்லாம், ‘ஒரு புன்முறுவல்’, அது மட்டுமே பரிசாக தரும் அந்த தெய்வத் தன