எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 16
கிருஷ்ணர் : அடுத்து என்ன…. அவர்களுடைய நடையைப் பார்க்கலாமா…. மேகலா : நடையா…. நடவடிக்கையா கிருஷ்ணா…. கிருஷ்ணர் : விடிய விடிய படித்த பின்னும், சீதைக்கு ராமன் சித்தப்பாண்ணு சொன்ன கதையா இருக்கு… இவ்வளவு நேரமும் கிராமத்து மக்களின் எளிய பழக்க வழக்கம், வாழ்க்கை முறை பற்றித்தானே பேசி வருகிறோம். அதுவே நடவடிக்கைகள் தானே… நாம பேசப் போவது நடையைப் பற்றி…. மேகலா : ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா’ கிருஷ்ணர் : ‘தடம் பாத்து நடை நடந்து’ – ‘வாவ்’…. எப்படிப்பட்ட வார்த்தை… நம் முன்னோர்கள் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என்பதை, எப்படி அழகாக, ‘தடம் பாத்து நடை நடந்து’ என்று கவிஞர் சொல்லியிருக்கிறார்…., பார்த்தாயா மேகலா…. மேகலா : Oh! நீ தடம் பாத்து நடப்பதைச் சொல்லுகிறாயா…. நான் நடப்பதைப் பற்றிப் பேசப் போகிறோம் என்று நினைத்தேன்…. கிருஷ்ணர் : நீ தானே பாட்டுப் பாடினாய்…. சரி, சரி…, நீ எந்த நடையைச் சொல்லப் போகிறாய்… மேகலா : இது உடம்பு இளைப்பதற்காகப் போகும் walking இல்ல கிருஷ்ணா…. கிராமத்து மக்கள், transport பரபரப்பு இல்லாத காலத