அழகு - பகுதி 14
மேகலா : நீ, பால்காரர் பால் கறப்பதைப் பாத்திருக்கிறாயா கிருஷ்ணா….? கிருஷ்ணர் : யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டாய்…..? ‘மாடு மேய்க்கும் கண்ணே, நீ போக வேண்டாம் சொன்னேன்; காய்ச்சின பாலும் தாரேன் கற்கண்டு சீனி தாரேன் கை நிறைய வெண்ணெய் தாரேன் வெய்யிலிலே போக வேண்டாம்’ ‘காய்ச்சின பாலும் வேண்டாம் கற்கண்டு சீனி வேண்டாம் உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்’ – என்ற இந்தப் பாடலைக் கேட்டாயா…., நானும் என் அம்மாவும் பாடுவதாக எழுதிய பாடல்… நாங்கல்லாம் மாடுகளோடேயே இருந்தவங்க. மாடு மேய்ச்சிருக்கேன், மாட்டின் மடியிலிருந்து அப்படியே பாலைக் குடிச்சிருக்கேன்…. எங்கிட்டேவா….? மேகலா : கிருஷ்ணா…., நான் எப்படி மறந்து போனேன்…. பால் கறப்பதை யோசிச்சிட்டே இருந்தேனா…., அந்தச் செயல் என்னைப் பரபரப்பாக்கிருச்சி கிருஷ்ணா…. கிருஷ்ணர் : அந்த பரபரப்பில், நானே மாட்டுக்காரன் தான் என்பதை மறந்தே போனாயாக்கும்…., சரி, நீ சொல்ல வந்ததைச் சொல்லு… மேகலா : பால்காரர் பால் கறப்பதுதான் அழகு கிருஷ்ணா…. நாங்க சின்னப்புள்ளையா இருக்கும் போது, எங்க வீட்டுலதான் மாடு கட்டப்பட்டிருக்கும். மாலை நேரத்தில் பால் கறப்பதற்கு,