அழகு - பகுதி 16
மேகலா : கிருஷ்ணா…. நீளமான train, compartment-ஆகப் பிரிக்கப்பட்டு, ஒரு compartment-க்கு 8 seats என்று அமைக்கப்பட்டிருக்கும். எதிரெதிரே 6 பேரும், நடைபாதை விடுத்து ஜன்னலோரமாக 2 seat-ம் உட்காருவதற்கு இடம் இருக்கும். ஆறு பேர் அமரும் seat-ல், இப்புறம் 3 பேரும், அந்தப்பக்கம் 3 பேரும் உட்காரலாமில்லையா…. அந்த உட்காரும் seat, ஒரு படுக்கை. அது தவிர, நடுப்புறத்தில் ஒரு பலகை; அது தொங்க விடப்பட்டிருக்கும். மேல்புறத்தில் ஒரு படுக்கை என்று இருக்கும். தொங்க விடப்பட்டிருக்கும் பலகையை, மேல்புறத்தில் மாட்டியிருக்கும் சங்கிலியில் கோர்த்து விட்டால், படுக்கையாகி விடும். இதை berth என்று சொல்லுவார்கள். இதற்கு 3-tier compartment என்று பெயர்.
சின்னப்பிள்ளைகள் train-ல் travel பண்ணுவதற்கு ஆசைப்படுவதே, upper berth-திலோ, நடு berth-திலோ படுக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால் தான். நாங்கள் Hyderabad-க்கு ஒரு முறை train-ல் travel பண்ணினோம். ஷீத்தல், நான், சந்தியா, ஷீத்தல் அப்பா போகும் போது, சந்தியா train-ல் ஏறியவுடனேயே, upper berth-ல் ஏறிக் கொண்டாள். கண்களை உருட்டி உருட்டி, அவள் அதை enjoy பண்ணிய விதம் மறக்க முடியாதது. அந்த நேரம் பார்த்து, வடை, இட்லி, உப்புமா விற்பவர் வர, அவரிடம் உப்புமா வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி, மடியில் வைத்து சாப்பிடாமல் முழித்துக் கொண்டிருந்தாள். தூங்கும் வரை, பிடிவாதமாக, கீழே இறங்கவும் மறுத்து விட்டாள். ஒரு குடும்பமாக train-ல் போனால், இரவு நேரப் பயணம் செம ஜாலியாக இருக்கும் கிருஷ்ணா….. அரட்டை அடித்துக் கொண்டு, யார் எந்த berth-ல் படுக்கப் போகிறோம் என்று சண்டை போட்டுக் கொண்டும், விற்பனை செய்யும் தின்பண்டங்களை நொறுக்கிக் கொண்டும் செல்வது என்பது ரொம்ப ஜாலியான விஷயம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அடேயப்பா…. உன்னை விட்டால், இந்த episode முழுக்க train travel-லின் அழகைப் பற்றி மட்டுமே பேசுவ…. உன்னை track மாத்தி விடுகிறேன்….
மேகலா : என்ன கிருஷ்ணா…, train-ஐத் தான் track மாத்துவாங்க…. நீ என்னையும் track மாத்தி விடறியா….
கிருஷ்ணர் : Train புறப்பட்டு வரும் அழகு…, அதன் ஓசை…., ஊர்ந்து வருவது என்று train-ஐப் பற்றிப் பேசும் போது, travel பண்ணி enjoy பண்ணியதையும் ரசனையோடு பேசி விட்டாய்…., சரியான ‘புளியோதரை’ party….. வேற….., ‘பர்கர்’ லெவல்ல ஒரு ரசனையைச் சொல்லேன் கேட்போம்….
மேகலா : கிருஷ்ணா…., நீ வேற லெவலுக்கு மாறித்தான் போனாய் கிருஷ்ணா…. ரொம்பக் கெட்டுப் போயிட்ட… நான் புளியோதரை party-யா….. ஏன் கிருஷ்ணா…. உனக்கு ஒரு வாகனம் take-off ஆவதும், land ஆவதும் பற்றி சொன்னால், அது எந்த வாகனம் என்று சொல்லுவாயா….
கிருஷ்ணர் : யாரு, எங்கிட்டேவா…., நான் நினைக்கத்தான் செய்யணும்…. என் முன்னே கருடன் சிறகு விரித்து take-off ஆகத் தயாராக நிற்பான். உங்க helicopter-லாம் எம்மாத்திரம்…. இருந்த இடத்திலிருந்தே take-off ஆகி, எங்கு போக வேண்டுமோ அங்கே land ஆவதில், உங்களுடைய technology-யெல்லாம் பக்கத்தில் வரவே முடியாது. நீ ஆகாய விமானத்தைப் பற்றிக் கேட்கிறாயாக்கும்….. என்ன ‘புத்திசாலித்தனமான’ கேள்வி….!
மேகலா : கிருஷ்ணா…. என் கேள்வி வேணுமின்னா புத்திசாலித்தனமில்லாமல் இருக்கலாம்…. ஆனால், நாம் அண்ணாந்து பார்க்கும் ஆகாய விமானம் பிரமிப்பானதென்றால்…, அதில் travel பண்ணுவது செம thrilling ஆனது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஊர்வதும், பறப்பதும், நீந்துவதையும் பார்த்து ரசித்து அதிசயித்த மனிதன், தானும் அதுவாக மாறியது அற்புதம்… அழகு…. சரி…, பறப்பதை நீ சொல்லு….
மேகலா : கிருஷ்ணா… பறப்பதின் அழகைச் சொல்லுவதற்கு முன்பாக…., ‘மால்தீவ்ஸில்’ airport-ன் அழகைச் சொல்லியே ஆக வேண்டும் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : ஏன்…., அங்கு கடலுக்குள்ளேயே விமானம் take-off ஆகுமா…?
மேகலா : அப்படியும் ஆகும் கிருஷ்ணா… ஆனால், அது resorts-ல், passengers-ஐ சுமந்து வரும் local plane. ஆனால், நான் சொல்லுவது ‘சர்வதேச airport’….. இங்கு, பல நாடுகளிலிருந்தும் விமானம் வருவதும் போவதுமாக இருந்தாலும், airport, மதுரை airport-ஐ விட சின்னதுதான். ஆனால், airport-ன் வெளி முற்றத்திலேயே ‘படகுத்துறை’ என்றழைக்கப்படும் கடல்துறையும் இருக்கும். ஒரு பக்கம், பல தேசத்து விமானங்களும், அதனதன் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கும். சொல்லப் போனால் நம்ம ஊரு ‘bus-stand’ மாதிரி தான். இன்னொரு பக்கம், கடல்துறையில் ஒவ்வொரு boat-ம் நிற்பதற்காக கட்டி விடப்பட்டிருக்கும் stand-க்கு அருகில், passengers boat மிதந்து கொண்டிருக்கும். ஒரு புறம் நவீன கட்டிடத்தின் கம்பீரம், இன்னொரு புறம், கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நீல வண்ணக் கடற்பரப்பு…. அங்கு தூரத்தில் தெரியும் ‘மாலே’ நகரம், நம்மை அங்கே அழைத்துச் செல்லக் காத்திருக்கும் speed boat….. ஓடு தளத்தில் பறந்து வந்த விமானம்…, பறக்கத் தயாராகும் விமானம்…. என்று ஒரு சேர பார்க்கும் போது, அந்த அழகை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வருவதில்லை கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நீ சொல்லும் போதே, அந்தக் காட்சி கண் முன்னே விரிகிறது மேகலா… இங்குதானே கடலுக்குள் விமானம் take-off ஆகும் என்று சொல்லியிருக்கிறாய்….
மேகலா : அது Male’ airport-ல் இல்லை கிருஷ்ணா….. Resorts – ல், கடல் நீரே ஓடுதளமாகி, விமானத்தின் சக்கரம் இல்லாமல், speed boat மாதிரி மிதந்து சென்று அப்படியே பறக்கும்…
கிருஷ்ணர் : வாவ்….! அது பார்ப்பதற்கு எவ்வளவு ரம்மியமாக இருக்கும்….?
(தொடரும்)
Comments
Post a Comment