கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 5
மேகலா : போய் பார்க்கல கிருஷ்ணா…. Food area Tamil channel-ல் பார்த்தேன் கிருஷ்ணா…. அதிலும், பிரியாணிக்கு ஆடு வாங்குவதிலும் கூட, ஒரு ரகசியம் சொல்லுகிறார். ஒரே எடை அளவுள்ள ஆடுகள்தான், எல்லா மட்டன் பீஸ்சும் ஒண்ணு போல வேகும் என்கிறார். ஒரு கிலோ பிரியாணிக்கு 400 gm வெங்காயம்…. 800 கிலோ பிரியாணிக்கு தேவையான வெங்காயம், அதற்கான தக்காளி, இஞ்சி பூண்டு paste என்று 1 நாள் முன்பே வாங்கி, வெட்டி ready பண்ணிக் கொள்ளணும்… இந்த மாதிரி cut பண்ணுவது, அரைத்து வைப்பது என்பதெல்லாம், ready பண்ணுவது மாதிரியே பிரியாணி பண்ணும் area-வைத் தனியாக select செய்து, இரண்டு வரிசைகளில் அடுப்புக்களை ready பண்ணுகிறார்கள்…. வெங்காயம், மசாலா, chicken piece போட்டு பிரியாணி பண்ணுவதற்கு 8 தேக்சா என்றால், அரிசியை 60% வேக்காடு போடுவதற்கு நான்கு தேக்சா என்ற கணக்கில், வரிசையாக அடுப்பு ready பண்ணி, போர் வீரர்கள் மாதிரி தேக்சாவை நிறுத்தி வைத்து விடுகிறார்கள்…. எப்போ தெரியுமா….? பிரியாணி செய்யும் நாளுக்கு முந்தைய நாள் மதியம் 3 மணிக்கெல்லாம், தேக்சாக்களெல்லாம் சிப்பாய் மாதிரி அணி வகுத்து நிற்கிறது. அடுப்பில் விறகு கூட வைத்து, லோட