கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 5

மேகலா : போய் பார்க்கல கிருஷ்ணா…. Food area Tamil channel-ல் பார்த்தேன் கிருஷ்ணா…. அதிலும், பிரியாணிக்கு ஆடு வாங்குவதிலும் கூட, ஒரு ரகசியம் சொல்லுகிறார். ஒரே எடை அளவுள்ள ஆடுகள்தான், எல்லா மட்டன் பீஸ்சும் ஒண்ணு போல வேகும் என்கிறார். ஒரு கிலோ பிரியாணிக்கு 400 gm வெங்காயம்…. 800 கிலோ பிரியாணிக்கு தேவையான வெங்காயம், அதற்கான தக்காளி, இஞ்சி பூண்டு paste என்று 1 நாள் முன்பே வாங்கி, வெட்டி ready பண்ணிக் கொள்ளணும்… இந்த மாதிரி cut பண்ணுவது, அரைத்து வைப்பது என்பதெல்லாம், ready பண்ணுவது மாதிரியே பிரியாணி பண்ணும் area-வைத் தனியாக select செய்து, இரண்டு வரிசைகளில் அடுப்புக்களை ready பண்ணுகிறார்கள்…. வெங்காயம், மசாலா, chicken piece போட்டு பிரியாணி பண்ணுவதற்கு 8 தேக்சா என்றால், அரிசியை 60% வேக்காடு போடுவதற்கு நான்கு தேக்சா என்ற கணக்கில், வரிசையாக அடுப்பு ready பண்ணி, போர் வீரர்கள் மாதிரி தேக்சாவை நிறுத்தி வைத்து விடுகிறார்கள்…. எப்போ தெரியுமா….? பிரியாணி செய்யும் நாளுக்கு முந்தைய நாள் மதியம் 3 மணிக்கெல்லாம், தேக்சாக்களெல்லாம் சிப்பாய் மாதிரி அணி வகுத்து நிற்கிறது. அடுப்பில் விறகு கூட வைத்து, லோடு ஏத்துன ‘gun’ மாதிரி ரெடியா வச்சிடுறாங்க… அதன் பிறகு, relaxed ஆக, ஒவ்வொரு வேலையாக, சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும், ஒவ்வொருவரையும் தட்டிக் கொடுத்துக் கொண்டும், வெகு இயல்பாக, ஆனால் கவனமாக வேலை செய்கிறார் கிருஷ்ணா…. நாம் நினைக்கிறோம்…, ஒரு சட்டியில் சுவை கொஞ்சம் தூக்கலாக, ஒரு சட்டியில் கொஞ்சம் ‘சப்புனு இருக்குமோ’ என்று. பிரியாணி வேலை நடக்கும் போது, ஜப்பார் பாய் ருசி பார்க்கிறார். ஒரு தேக்சாவைத் திறந்து ருசி பார்த்து, அடுத்து எல்லா தேக்சாவிலும் இதே சுவைதான் இருக்கும்…., ருசி பார்க்கத் தேவையில்லை என்கிறார்….. எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது…. என்ன ஒரு தன்னம்பிக்கை…. கைப்பக்குவத்தில் செய்யும் சமையல் வேலைதான்…. ஆனால், ஆத்மார்த்தமாகச் செய்யும் இந்த சமையல் வேலை, என்னைப் போல எத்தனை ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஜப்பார் பாய், பிரியாணி சாம்ராஜ்யத்திற்கே மன்னனாக நான் நியமித்து விட்டேன் கிருஷ்ணா…. நேற்றைக்கு ஒரு video பார்த்தேன் கிருஷ்ணா. அதில் ஒருவர், என்னை மாதிரியான ஜப்பார் பாய் ரசிகர்…, ‘இவர் பிரியாணி கற்றுக் கொடுக்கும் விதத்தைப் பார்த்து, நாமும் பிரியாணி கடை ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்து, opening அன்று ஜப்பார் பாயைக் கூப்பிட்டிருக்கிறார்….. அங்கு வந்து, பிரியாணி செய்முறையை தானே செய்ய ஆரம்பித்து, ஒரு பொன்மொழியைச் சொல்லுகிறார் கிருஷ்ணா. ‘பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சு வேற எதுவும் நினைக்காம, உழைச்சு சம்பாதிப்பதற்காக இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறீங்க…. உங்களுக்கு கடவுள் எந்தக் குறையும் வைக்க மாட்டான்’ என்று மனசார வாழ்த்தி, commercial சிக்கனம் அத்தனையும் கற்றுக் கொடுக்கிறார் கிருஷ்ணா… எனக்கு, பாரதியார் மாதிரி, ‘நானறிந்த வேலையிலே சமையல் வேலை போல் கை கொடுப்பது வேறெதுவும் காணோம்’ என்று கூத்தாடணும் போல இருந்தது கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : உண்மைதான் மேகலா…. நீ ரசிக்கும் ‘ஜப்பார் பாய்’ தன் தொழிலை ரொம்ப நேசிக்கிறார். அதான், chief guest ஆக போன இடத்தில் கூட, கரண்டி பிடித்து உதவுகிறார். சூப்பர்….

மேகலா : நெசம்மாவே…., இந்த கட்டுரை எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு வரை…, சமையல் வேலையை கைத்தொழிலாக நான் நினைத்ததில்லை கிருஷ்ணா… இப்போ பேசப் பேசத்தான், ஒவ்வொரு பெண்கள் கையிலும் எவ்வளவு அருமையான திறமை இருக்கிறது…. ராஜம் மாமி சொல்வது போல, இது சமையல் வேலைதானே என்று அலட்சியமாக நினைக்காதவருக்கு, அன்னபூரணியாக வரமளிக்கும் வேலை என்று மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன் கிருஷ்ணா… அந்தக் காலம் மட்டுமல்ல கிருஷ்ணா…, இந்தக் காலத்திலும், சின்ன ஊர்களில், தெரு முக்குகளில் ஆப்பம் விற்கும் ஆயா…, இட்லிக்கடை வைத்திருக்கும் பாட்டி…., தள்ளுவண்டி உழைப்பாளி என்று எல்லோரையும் வாழ வைக்கும் அன்னபூரணி கிருஷ்ணா… இது மட்டுமல்ல…., கடையோ, பட்டறையோ போடாமல் சும்மா வீட்டில் இருப்பவர்கள் தங்கள் கிச்சனுக்குள்ளேயே பலகாரங்கள் செய்து, whatsapp-ல் தொடர்பு கொண்டு, Order பிடித்து, முறுக்கு, சீவல் என்று செய்து கொடுக்கும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா…. அதிலும், அந்தக் காலங்களில், கல்யாணத்துக்காகச் சமைக்கும் ‘மாஸ்டர்ஸ்’, மார்கழி மாதம், ஆடி, புரட்டாசி மாதங்களில், கல்யாணம் நடக்காத காலங்களில், தங்களுக்குக் கை கொடுக்கும் சமையல் வேலையைத்தான் நம்பினார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படி என்ன செய்வார்கள்…. சாப்பாடு செய்து விற்பார்களா….

மேகலா : அப்படிச் செய்தால், hotel ஆக develop ஆயிருமே… இவர்கள் கல்யாண மாஸ்டர்ஸ்… வேலையில்லாத சமயங்களில், மாங்காய் ஊறுகாய், வெஜிடபிள் ஊறுகாய் என்று இவர்களுக்கு மட்டுமே தெரிந்த formula படி செய்து, முதலாளிமார்கள் வீடுகளுக்குச் சென்று supply செய்வார்கள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : ஒரு பழமொழி உண்டு…, நீ கேட்டிருக்கயா…. ‘பரதேசிக்கு இந்த மடம் விட்டா…, அந்த மடம் தெரியும்’னு…. அது எவ்வளவு உண்மையானது…. நீ சொல்லும் போதுதான் ஞாபகம் வருது மேகலா…. வீடுகள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில், நிச்சயமாக ஒரு ஆயா இட்லி சுட்டு விற்பதோ, புட்டு சுட்டு விற்பதோ, திருவிளையாடல் புராண காலத்திலிருந்தே மக்களுக்கு ஆகி வந்த கலையாகத்தானே இருந்திருக்கிறது….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. அதே மாதிரி வெறும் 2000 ரூபாய் இருந்தால் போதும், ஒரு தள்ளுவண்டிக் கடையோ, அல்லது ரோட்டோர இட்லிக் கடையோ ஆரம்பித்து விடலாம். ஹரி, ஷீத்தல்லாம் சின்னப்புள்ளைகளாக இருந்த பொழுது நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் ஒரு ஆயா இட்லிக் கடை வைத்திருந்தார்கள்… விருந்தினர் வந்திருக்கும் நேரம், breakfast செய்ய முடியவில்லையென்றால், ஆயாவிடம் இட்லி வாங்குவேன். பெருசா, இந்த இட்லிக் கடையில் வியாபாரம் பார்த்து பணம் பார்த்தார்கள் என்பதை விட, தலை நிமிர்ந்து வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை… சிவகாசி வேலாயுத நாடார் பலகாரக் கடை இன்று பல கிளைகளைக் கொண்டு செழித்து நிற்கிறது. ஆரம்ப காலங்களில், இதன் owner தள்ளுவண்டியில் பலகாரம் செய்து விற்பதைத்தான் தொழிலாகக் கொண்டிருந்தார்…. இப்படி சின்னச் சின்ன கடைகளைப் பார்த்துத்தான், ‘சிறுகக் கட்டி பெருக வாழ வேண்டும்’ என்று சொன்னார்களோ என்று ஆச்சரியமாக இருக்கு கிருஷ்ணா… இந்த மாதிரி ரோட்டோரம் புட்டு விற்ற வந்திக் கிழவியிடம், அதன் சுவையில் மயங்கி, பரம்பொருளே இறங்கி வந்து புட்டு சாப்பிட்டதைப் படிக்கும் போது, எந்தக் காலத்திலும், சமையல் கலை என்பது நம்மை தலை நிமிர்ந்து வாழச் செய்வது என்று பெருமையாக இருக்கு கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : வாவ்! கைப்பக்குவத்தால், தன்னம்பிக்கையோடு வாழுபவரைப் பற்றிப் பேசப் பேச ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருக்கு மேகலா….

மேகலா : அதிலும், இந்த கொரோனா காலத்தில், வேலை இழந்த பல பட்டதாரிகள், நம்பிக்கையோடு கையில் எடுத்தது சமையல் வேலை தான் கிருஷ்ணா… அதிலும், பிரியாணி கடை ஆரம்பித்த I. T. employees ஏராளம்….

கிருஷ்ணர் : சூப்பர்…, சூப்பர் மேகலா… சோர்ந்து போனவங்க சோர்வை நீக்கும் vitamin tonic…. வாழ்க்கையைத் தொலைத்தவருக்கு, சந்தோஷ வாழ்க்கையைத் திருப்பிக் கொடுக்கும் அமுதசுரபி….. வாழ்விழந்தவர்களுக்கு உற்ற துணை கொடுக்கும் ஊன்றுகோல் என்று சமையல் கலையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை மேகலா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2