கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 3

மேகலா : கிருஷ்ணா…., இந்த snacks செய்து அசத்தும் குடும்பத் தலைவிகள் ஒருபுறம் இருக்க…, இன்று பெண் குழந்தைகள், கல்யாணத்துக்குப் பிறகு தன் profession-ஐ வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று யோசிக்கிறார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படியா…, ஆச்சரியமா இருக்கே…. இந்த வத்தல், வடாம் செய்வதில் youngsters அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களா….

மேகலா : வத்தல்…., வடகம் செய்வதற்கு எல்லாம்…., கொஞ்சம் experience வந்த பிறகு…., குடும்பத் தலைவியான பிறகு…., ’எல்லாம் என் கைப்பக்குவத்தில்தான் செய்ய வேண்டும்’ என்ற வயசு வரும் போது தான் சிந்திப்பார்கள் கிருஷ்ணா…. நான் சொல்வது, baking சமாச்சாரம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! Correct….., correct….. சந்தியா கூட, B. B. A. முடிச்சிட்டு…., baking unit-ல தான படிச்சாள்…. நான் மறந்தே போனேன் மேகலா….

மேகலா : கிருஷ்ணா…, traditional சமையலில்…., ‘எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தாங்க…., அம்மா சொல்லிக் கொடுத்தாங்க…. கண்ணளவு…., கையளவு…., குத்துமதிப்பு…., ருசி’ என்பதுதான் பிரதானமான ரகசியமாக இருக்கும்…. ஆனால், baking course படிக்கும் போது, ‘கையளவு’, measurement’ என்று சொல்லப்படும். ‘குத்துமதிப்பு’ மாறி, ‘துல்லியம்’ என்று பார்க்கப்படும். இவ்வளவுக்கு இவ்வளவு சேர்த்தால், இத்தனை gram ஆகும். அதனை bake பண்ணினால் இத்தனை kilo cake கிடைக்கும் என்று பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படும். ஒரு நாளில் இவ்வளவு செய்தால், இத்தனை செலவு போக…, இவ்வளவு வருமானம் என்றும் சொல்லிக் கொடுக்கப்படும். இன்று, இந்த baking course, வெளிநாடு சென்று கூட கற்று வரும் இளம் பெண்கள் ஏராளம் கிருஷ்ணா…. சந்தியா மட்டுமல்ல…., நான் ‘சிங்கப் பெண்ணே’ award வாங்கச் சென்ற போது…., அங்கு இன்னொரு ‘சிங்கப் பெண்’ ஷீலா, வெளிநாடு சென்று, baking course கற்று வந்து, ஊரையே கலக்கிக் கொண்டிருக்கும் இன்னொரு சின்னப் பெண் தான் கிருஷ்ணா…. நானெல்லாம், இன்னும் முறுக்கு சுடுவதற்கு முன்பு, நம்பிக்கையில்லாமல், ‘கடவுளே, இன்னைக்கு முறுக்கு நல்லா வரணும் கடவுளே’ என்று வேண்டிக் கொள்வேன். ஆனால், இன்றைய baking மாணவர்களுக்கு, இறைபக்தி இருந்தாலும், இந்த measurement-ல் செய்தால் இப்படித்தான் வரும் என்று நம்பிக்கையோடு செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து, birthday cake, order-க்கு செய்து கொடுப்பவர்கள் எல்லோரும் sincere ஆகச் செய்கிறார்கள் கிருஷ்ணா…. ஒரு ஆச்சரியம் தெரியுமா…. இவர்களுக்குள் instagram connection கூட இருக்கு கிருஷ்ணா… எங்களை, ‘காளீஸ்வரி college’-ல் சமையல் போட்டிக்கு judge ஆகக் கூப்பிட்ட ’நர்மதா’, ‘சிவகாசி சிங்கப் பெண் ஷீலா’, ‘சந்தியா’ எல்லோரும், instagram connection உள்ளவர்கள்…..

கிருஷ்ணர் : Oh! நல்ல செய்தி…., ஏன் மேகலா…., baking course-ல், cake மட்டும் தான் பழகுவார்களா…..

மேகலா : Cookies-ம் பழகுவார்கள் கிருஷ்ணா…. Birthday cake என்றால், cake மேலே போடும் cream செய்வது, அதை design-ஆக வரைவதிலிருந்து, fresh fruit சேர்ப்பது…., creative-ஆக என்னலாம் சேர்க்கலாம் என்பது வரைக்கும் கற்றுக் கொடுத்து விடுவார்கள். அது போக, commercial tricks-ஐயும் கற்றுக் கொடுக்கிறார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! இப்படி கற்று வருபவர்கள், வெறுமனே whatsapp order-க்கு செய்து திருப்தியடைகிறார்களா…, சௌந்தரா ஆச்சி மாதிரி bulk orders-ம் செய்கிறார்களா….

மேகலா : கிருஷ்ணா…., முதலில் orders-க்கு செய்து வருகிறார்கள் கிருஷ்ணா…. இவர்கள், packing-கிலிருந்து delivery பண்ணும் swiggy வரை எல்லாவற்றையும் மெள்ள மெள்ள பழகி, அதில் நல்ல வளர்ச்சி வந்தவுடன், அடுத்த கட்டத்திற்கு யோசிக்கிறார்கள். ஆனாலும், சின்னப் பிள்ளைகள், கணக்கு வழக்கு பார்ப்பது, purchase பண்ணுவது, pack பண்ணுவது, delivery பண்ணுவது கூட, தானேதான் செய்ய விரும்புகிறார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Oh! Very good….. அஸ்திவாரத்தை பலமாகப் போடுகிறார்கள்… அஸ்திவாரம் என்று நான் சொல்வது, ‘உழைப்பு’… எல்லா தரப்பிலும் உழைக்கட்டும்…. ஆமாம்…., baking course இருப்பது மாதிரி, frying, அதாவது snacks-க்கும் course இருக்குதா மேகலா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2